இன்றைய (21) ,வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட (21.02.2023) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட (21.02.2023) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:
இலங்கைச் சூழவுள்ளகடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல்நிலை,தேசியவளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப்பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2023 பெப்ரவரி20ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை:ஹம்பாந்தோட்டையிலிருந்து மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறைவரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில்மழை அல்லது இடியுடன் கூடிய … Read more
பாராளுமன்றம் நாளை (22) காலை 9.00 மணி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைப்பதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிக்கு எதிராக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் தற்போது எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.. இன்றைய (21)பாராளுமன்ற அமர்வின் போது எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ,தேர்தலை நடத்த கோரி ஆர்ப்பாட்ட சுலோகங்களை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசியவளி மண்டலவியல்நிலையத்தின் முன்னறிவிப்புப்பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 பெப்ரவரி21ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 பெப்ரவரி 21ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில்மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய … Read more
துருக்கியில் இரண்டு நிலநடுக்கங்கள் இடம்பெற்றுள்ளன குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.இதனைத்தொடர்ந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்பாளர்கள் மீண்டும் தேடி வருகின்றனர். ஆறு தசம் நான்கு ரிக்டர் அளவிலான இந்தப் பூமியதிர்ச்சியில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே இம்மாதம் 6 அம் திகதி இடம்பெற்ற பூமியதிர்ச்சியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், துருக்கியின் தென் பகுதியிலுள்ள ஹட்டேய் மாகாணத்தில் இரண்டு கிலோமீற்றர் ஆழத்தில் நேற்றைய (20) பூமியதிர்ச்சி பதிவாகி உள்ளது. இதில் 200இற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக துருக்கி … Read more
பாராளுமன்றம் இன்று காலை 9.30மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது. பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் 24 ஆம் திகதி வரை இடம்பெறும் என்று பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார். பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. அதற்கமைய, மு.ப. 9.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை இலங்கைத் தேயிலைச் சபை சட்டத்தின் கீழ் 2245/29, 2248/36, 2248/37 மற்றும் 2258/14 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் … Read more
ஹிக்கடுவை வெவல பிரதேசத்தில் சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த ரஷ்ய பெண்ணின் அறைப் பெட்டகத்திலிருந்து 600 டொலர் பணத்தை நபர் ஒருவர் திருடியுள்ளார். இந்த ஹோட்டலில் தங்கியிருந்த பெண் எல்ல பகுதிக்கு சுற்றுலா சென்றுவிட்டு நேற்று இரவு திரும்பி வந்த போது பணம் காணாமல் போயுள்ளமை தெரியவந்துள்ளது. ரஷ்ய பெண் இது தொடர்பில் ஹோட்டல் முகாமையாளரிடம் தெரிவித்துள்ளார். முகாமையாளர் ஹிக்கடுவ பொலிஸாருக்கு அறிவித்ததுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் பணம் கொள்ளையடிக்கப்படுவதாக … Read more
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 47,000 ஆக அதிகரித்துள்ளது. துருக்கியின் இறப்பு எண்ணிக்கை 41,000-ஐத் தாண்டியுள்ளதாக அந்நாட்டின் பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது. 345,000 க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் அழிக்கப்பட்டு, இன்னும் பலரைக் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதால், இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உயிரிழந்த குழந்தைகளுக்கு கடைசி பரிசு சிரியாவில், ஏற்கனவே பல ஆண்டுகால போரினால் பேரழிவிற்குள்ளான நிலையில், 5,800க்கும் மேற்பட்டோர் நிலநடுக்கத்தால் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துருக்கியில்1 … Read more
லாஃப் சமையல் எரிவாயு நிறுவனத்திற்கு சொந்தமான மஞ்சள் நிற சிலிண்டர்களை நீல நிறத்தில் மாற்றி ஏற்றிச்சென்ற லொறி ஒன்றிலிருந்து எரிவாயு சிலிண்டர்களை கடவத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கடவத்தை நுழைவாயிலில் இருந்து கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழையும் போது லாஃப் நிறுவனத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நிறுத்தி சோதனை செய்யப்பட்டுள்ளது. இதன்போது லொறிக்குள் இருந்த சிலிண்டர்கள் மேலும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதில் நிறம் மாறிய 37 கிலோ 500 கிராம் எடையுள்ள 04 வெற்று சிலிண்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விசாரணையில் … Read more
நல்லதண்ணியிலிருந்து, கொழும்பு – மஹரகம நோக்கி சிவனொளிபாதமலை யாத்ரிகர்கள் குழுவை ஏற்றி சென்ற தனியார் பேருந்து சுமார் 100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்திற்கு உள்ளான சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 26 பேர் படுகாயமடைந்துள்ளதுடன், அதில் ஐவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நோர்டன்பிரிட்ஜ் – கினிகத்தேனை பிரதான வீதியில் டெப்லோ பகுதியில் நேற்று (19.02.2023) இரவு 9.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. எதிர்திசையில் இருந்து வந்த மற்றுமொரு பேருந்திற்கு வழிவிட … Read more