வானிலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இந்தநிலையில், கடுமையான மின்னல் அபாயம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் பல பிரதேசங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பலத்த மழை மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் இன்று பிற்பகல் மற்றும் இரவு வேளைகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.   Source link

“கட்டான” பிரதேசம் விமான நகரமாக உருவாக்கப்படும்..

கட்டான விமான நகரமாக அபிவிருத்தி செய்யப்படும். இது அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் செயல்பாட்டில் இருக்கும். நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைவாக, நகர அபிவிருத்தி அதிகாரசபையானது அதற்கான வரைவு அபிவிருத்தித் திட்டத்தை தயாரித்துள்ளது. கட்டான நகர அபிவிருத்தி திட்ட வரைவு பற்றிய மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (17ஆம் திகதி) நகர அபிவிருத்தி அதிகார சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. கட்டுநாயக்க … Read more

நீர் கட்டணமும் அதிகரிக்க கூடும்: அமைச்சர் ஜீவன் தொண்டமான்

நீர் கட்டணமும் அதிகரிக்க கூடும் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். தலவாக்கலையில் நடைபெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். இதேவேளை நாட்டில் தற்பொழுது மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் நீர் கட்டணத்தையும் அதிகரித்து தான் ஆக வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டதோடு, அப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் … Read more

<span class="follow-up">NEW</span> கொழும்பில் பதற்றம்! ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம் (Live)

கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியினர் தற்போது முன்னெடுத்து வரும் போராட்டத்திற்கு நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் என்பன மேற்கொள்ளப்பட்டுள்ளன.  மருதானை – டெக்னிக்கல் சந்திப்பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.  ஏராளமான பொலிஸார் மற்றும் கலகத்தடுப்பு பிரிவினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.  இதனையடுத்து அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.  நான்காம் இணைப்பு ஐக்கிய மக்கள் சக்தியினரின் ஆர்ப்பாட்டத்தை தடுக்கும் முகமாக கொழும்பு – புறக்கோட்டை பகுதியில் ஒல்கொட் மாவத்தை முற்றாக மறைக்கப்பட்டுள்ளது. ஏராளமான பொலிஸார் … Read more

அரையிறுதிக்கு தகுதி பெற அயர்லாந்து, இந்திய அணிகள் மோதல்

மகளிர் ரி 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் அரையிறுதிக்கு தகுதி பெற அயர்லாந்து, இந்திய மகளிர் அணிகள் இன்று (20) விளையாடுகின்றன. மகளிர் ரி 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது முதல் இரு ஆட்டங்களில் பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளை வெற்றி கொண்டது. இதேவேளை இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனால் இந்தியா 2 வெற்றி, ஒரு … Read more

மகளிர் ரி20 உலகக் கிண்ண போட்டி – இலங்கை அணி வெளியேற்றம்

மகளிர் ரி20 உலகக் கிண்ண தொடரில் ,நியூசிலாந்து அணியுடனான போட்டியில் 102 ஓட்டங்களால் தோல்வியடைந்த இலங்கை அணி,தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. ரி 20 உலகக் கிண்ணத் தொடரின் குழு ஏ இல் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி ஏற்கனவே இரண்டு வெற்றிகளை பதிவு செய்த நிலையில் அரையிறுதி வாய்ப்பிற்காக வெற்றியினை எதிர்பார்த்து நியூசிலாந்து அணியை நேற்று (19) பார்ல் மைதானத்தில் எதிர் கொண்டது. இதன்படி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து மகளிர் அணி … Read more

அரச பாடசாலைகளுக்கு 4 ,800 அதிபர்களை நியமிக்க நடவடிக்கை.

அரச பாடசாலைகளுக்கு நாலாயிரத்து 800 அதிபர்களை நியமிக்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. இதற்கு அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். வெற்றிடங்களுக்கு விண்ணப்பித்த 10 ஆயிரம் பேர் நேர்முக பரீட்சை;க்கு அழைக்கப்படவுள்ளனர்.. எதிர்வரும் நாட்களில் நேர்முகத் தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் ஆட்சேர்ப்பு நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏ தரம் மற்றும் மாகாணப் பாடசாலைகளில் உள்ள வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த … Read more