கொழும்பு இந்திய விசா நிலையத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்

கொழும்பிலுள்ள இந்திய விசா நிலையம், விசா மற்றும் ஏனைய சேவைகள் அனைத்தையும் இன்று முதல் மீண்டும் (2023 பெப்ரவரி 20 ஆம் திகதி திங்கட்கிழமை) வழங்க ஆரம்பித்துள்ளது. அதன்படி. விசா மற்றும் பிற சேவைகளுக்கான வழக்கமான செயல்பாடுகளை இந்த அலுவலகம் இன்று ஆரம்பிக்கும் என இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக, விசா விண்ணப்ப நிலையம் கடந்த வாரம் தற்காலிகமாக மூடப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.

34 ஆண்டுகளுக்கு பிறகு குடியரசு பெரஹரா வீதி உலா வந்தது

வரலாற்றுச் சிறப்பு மிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் முப்பத்து நான்கு வருடங்களின் பின்னர் இடம்பெற்ற குடியரசு பெரஹரா நேற்று (19) கண்டி நகரில் வீதி உலா வந்தது. இதன் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்த பெரஹரா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று மாலை 6.45 மணியளவில் கண்டி மங்களகூடத்தில் இருந்து ஆரம்பித்த பெரஹரா, தலதா வீதி, … Read more

தேர்தலில் வேட்பாளரொருவருக்கு அதிக பணம் செலவழிக்க வேண்டிய அவசியம் ஏற்படாத வகையில் புதிய தேர்தல் முறையை உருவாக்குவது குறித்து ஆராய குழு – இளைஞர்கள் முன்னிலையில் ஜனாதிபதி தெரிவிப்பு

தேர்தலின் போது வேட்பாளர் ஒருவர் அதிக பணம் செலவழிக்க வேண்டிய அவசியம் ஏற்படாத வகையில் தேர்தல் முறையை உருவாக்குவது குறித்து ஆராய குழுவொன்று நியமிக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக இளைஞர் குழுவொன்றுடன் அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடந்த சந்திப்பில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பில் இந்த இளைஞர்கள் குழு நாட்டின் பிரதான நாளிதழ் ஒன்றில் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்ததுடன், அது … Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஆயுதத்துடன் சிக்கிய நபர்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைத்துப்பாக்கியை தன்வசம் வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்கவில் இருந்து பஹ்ரைனுக்கு விமானமூலம் செல்லவதற்காக சென்ற நபரே நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கம்பளையைச் சோ்ந்த 49 வயதான குறித்த நபரின் பயணபொதியை விமான நிலைய சோதனைச் சாவடியில் விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சோதனைச் செய்தபோது மறைத்துவைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி ஒன்றை கண்டுபிடித்தனர். இதனையடுத்து பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து குறித்த நபரை கைது செய்ததுடன் கைத்துப்பாக்கியை மீட்டுள்ளனர். இதில் கைது செய்யப்பட்டவரை விசாரணையின் பின்னர் … Read more

கடற்பகுதிகளில் பலமான காற்று கொந்தளிப்பு

இலங்கைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல்நிலை தேசியவளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப்பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2023 பெப்ரவரி 20ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

ஆள் கடத்தும் நபர்களை நம்பலாம் என்று நீங்கள் நினைத்தால், அதைப் பற்றி மீண்டும் சிந்தியுங்கள் –

“ஆள் கடத்தும் நபர்களை நம்பலாம் என்று நீங்கள் நினைத்தால், அதைப் பற்றி மீண்டும் சிந்தியுங்கள்’ என அவுஸ்திரேலிய எல்லைப்படையின் தளபதி ஜஸ்டின் ஜோன்ஸ் Rear Admiral Justin Jones தெரிவித்துள்ளார். படகு வழியாக அவுஸ்திரேலிய எல்லைக்குள் வர முயல்பவர்கள் தொடர்பாகவே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ,படகு வழியாக அவுஸ்திரேலிய எல்லைக்குள் வர முயல்பவர்களை எச்சரிக்கும் விதமாக பல மொழிகளில் காணொலி அறிவித்தல் இடம்பெற்று வருகிறது. தமிழ் மொழியில் வெளியிடப்பட்ட காணொலியில், ‘ஆள் கடத்தும் நபர்களை நம்பலாம் … Read more

சில இடங்களில், 50 மி.மீ க்கும் மேற்பட்ட மழை வீழ்ச்சி

நாட்டின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  மேல்,சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. மேல்,சப்ரகமுவ, தென் மற்றும் மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் மேற்பட்ட மழை வீழ்ச்சி இடம்பெறக்கூடும் இடியுடன் கூடிய மழை … Read more

க.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்

2022ஆம் கல்வியாண்டுக்குரிய கல்விப்பொதுத் தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சையை எதிர்வரும் மே மாதத்தில் நடத்துவதற்கு தீர்மானித்திருப்பதாக கல்வியமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை 2023ஆம் கல்வியாண்டுக்குரிய உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையினை இவ்வருடம் நிறைவடைவதற்கு முன்னர் நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக அவர் கூறினார். 2022ஆம் ஆண்டிற்குரிய கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 28ஆம்திகதி வரை பொறுப்பேற்கப்படும். இணையத் தளத்தின் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும். … Read more

இலங்கையில் 34 வருடங்களின் பின்னர் பெருந்தொகை செலவில் இடம்பெற்றுள்ள நிகழ்வு

இலங்கையில் 34 வருடங்களுக்குப் பின்னர் ஐந்தாவது தடவையாகவும் குடியரசு ஊர்வலம் இன்று கண்டியில் தற்போது சிறப்பாக இடம்பெற்றுள்ளது. தேசிய மறுமலர்ச்சியை உருவாக்குவதற்கும் நாட்டின் மீது சர்வதேச ஈர்ப்பை பெறுவதற்கும் நாட்டின் 75வது சுதந்திர தினத்தை அர்த்தப்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேண்டுகோளுக்கு இணங்க மல்வத்து அஸ்கிரி மகாநாயக்கர் தலைமையில் தியவடனை நிலங்க தேலவின் ஏற்பாட்டில் இந்த ஊர்வலம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து, கண்டி நகர் முழுவதும் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. … Read more

அமைச்சரவையில் ஏற்படப்போகும் மாற்றம்

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து சாதகமான பதில் கிடைத்தவுடன் அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு பில்லியன் டொலர் கடன் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் தற்போது பச்சைக்கொடி காட்டியுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு, மார்ச் மாதமளவில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனுதவி கிடைக்கும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டிருந்தார். கோரிக்கை இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவையை மாற்றுமாறு ஜனாதிபதிக்கு நெருக்கமான நபர்கள் மற்றும் அமைப்புகள் கோரியுள்ளன. இந்த … Read more