பிறந்து ஏழு நாட்களான சிசுவை கொடூரமாக கொலை செய்த இளம் தாய்

களுத்துறை, பயாகல பிரதேசத்தில் பிறந்து ஏழு நாட்களே ஆன சிசுவை மூன்று தடவைகள் தரையில் அடித்துக் கொன்ற தாய் கைது செய்யப்பட்டுள்ளார். 28 வயதுடைய சந்தேகநபரான தாய் தொடர்பில் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 9ஆம் திகதி நாகொட போதனா வைத்தியசாலையில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் இளைய மகளே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். பயாகல பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக … Read more

விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பில் முக்கிய சமிக்ஞை! மேஜர் மதன் குமார்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மீண்டும் வந்தால் இந்தியா எவ்வாறு நடந்து கொள்ளும் என்பது தொடர்பில் இந்திய இராணுவத்தின் முன்னாள்  மேஜர் தர அதிகாரி மதன்குமார் தனது நிலைப்பாட்டை பதிவு செய்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சிக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வருகிறார் என்றால் இதற்கு நான் ஒரு சமிக்ஞையை கூறுகிறேன். ஏழு பேர் விடுதலை, ரஜிவ் காந்தி கொலை வழக்கில் … Read more

சீனாவின் உறுதிமொழியின்றி கடன் வழங்கத் தயாராகும் சர்வதேச நாணய நிதியம்..!

சீனாவின் உறுதிமொழியின்றியே இலங்கைக்கு கடன் வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பிரபல சர்வதேச ஆங்கில ஊடகமான புளும்பர்க் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. சீனாவின் நிதி குறித்த உறுதிமொழிகள் இன்றியே இலங்கைக்கு கடன் வழங்குவதற்கான சாத்தியங்கள் சர்வதேச நாணய நிதியம் ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடன் மறுசீரமைப்பு தொடர்பில் உரிய உறுதிமொழிகள் வழங்கப்படாத சந்தர்ப்பங்களில் குறித்த நாட்டுக்கு சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்குவது மிகவும் அரிதானது என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச நாணய நிதியம் … Read more

முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபாவிற்கு சிறைத்தண்டனை

முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபாவிற்கு ஆறு மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபந்திகே நேற்றைய தினம் இந்த தண்டனையை விதித்துள்ளார். ஆறு மாத கால சிறைத்தண்டனையும், 500 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மயோன் முஸ்தபாவின் குடியுரிமையை ஏழு ஆண்டுகளுக்கு இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியை தெரிவு செய்தல் தொடர்பிலான நிபந்தனைகளை மீறியதாக குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டிருந்தது. கடந்த 2010ம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி … Read more

நாடு மீண்டும் முடங்கும் நிலை..! வெளியான விசேட அறிவிப்பு

எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி கூட்டுப் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவிக்க தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. பல துறைகளில் தொழிற்சங்க பிரதிநிதிகள் நேற்று பிற்பகல் நடத்திய கலந்துரையாடலின் பின் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எண்ணெய், மின்சாரம், துறைமுகம், நீர் வழங்கல், சுகாதாரம், கல்வி, வங்கி அமைப்பு உள்ளிட்ட பல துறைகளின் தொழிற்சங்கங்களுடன் இணைந்து இந்த வேலைநிறுத்தத்தினை மேற்கொள்ள தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளனர். இதேவேளை சுகாதாரம், கல்வி, துறைமுகம், மின்சாரம், வங்கி உள்ளிட்ட தொழிற்சங்கத்தினரால் கடந்த 8ஆம் … Read more

இலங்கையில் இருமடங்காக அதிகரிக்கப்படவுள்ள சில பொருட்களின் விலைகள்! வெளியானது அறிவிப்பு

இலங்கையில் மின் கட்டணம் பாரியளவு அதிகரிக்கப்பட்டதன் எதிரொலியாக பல பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த வரிசையில் பால், தயிர், இறைச்சி உள்ளிட்ட பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொருட்களின் விலைகள் இருமடங்காக அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய விலங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மின்சார கட்டண அதிகரிப்பின் எதிரொலி மின்சார கட்டணம் 66 வீதத்தால் அதிகரித்தமையே காரணம் என அதன் அழைப்பாளர் சுஜீவ தம்மிக்க தெரிவித்துள்ளார். கால்நடை உற்பத்தியாளர்கள் குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் உறைவிப்பான்களை பயன்படுத்த வேண்டிய நிலை … Read more

இலங்கைக்குள் நுழையும் றோ! தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரது பெயரை வைத்து நகர்த்தப்படும் திட்டம்(Video)

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்துவிட்டதாக  உடலை காட்டிய அந்தக் காலகட்டத்தில், அவரின் மறைவுச் செய்தியை விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச பொறுப்பாளராக இருந்த குமரன் பத்மநாதன் உறுதிப்படுத்தியிருந்தார்.  ஆனால்,  தமிழீழ விடுதலைப் புலிகள் சார்ந்த அமைப்புக்கள் மற்றும் புலம்பெயர் அமைப்புக்கள் எவையுமே புலிகளின் தலைவர் பிரபாகரனின் மறைவுச் செய்தியை அங்கீகரிக்கவில்லை.  இவ்வாறானதொரு சூழலில் தான், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் நலமுடன் … Read more

இலங்கைக்கு கடன் வழங்குவது குறித்து ஐஎம்எப் பரிசீலனை

ஐஎம்எப் இடம் இருந்து  இலங்கைக்கு கிடைக்கும் கடன் தொடர்பில் புதிய தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.  இந்த நிலையில், இலங்கைக்கான கடனை அனுமதிப்பது  குறித்து ஐஎம்எப் பரிசீலித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. கடனை அனுமதிப்பது குறித்து பரிசீலனை கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவின் உத்தரவாதம் இல்லாவிட்டாலும் கூட இலங்கைக்கு கடன் வழங்குவதை அனுமதிப்பது தொடர்பில்  ஐஎம்எப் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.  Source link

மஹரகம அபேக்ஷா மருத்துவமனை மருந்து வகைகளை விற்பனை செய்த மருந்தாளருக்கு சிறைத் தண்டனை

மஹரகம அபேக்ஷா மருத்துவமனையின் மருந்துப் பொருட்களை திருடி அவற்றை புற்று நோயாளர்களுக்கே விற்பனை செய்த அதே மருத்துவமனையின் மருந்தாளர் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அபேக்ஷா வைத்தியசாலையில் சிகிச்சை பெற வரும் நோயாளர்களுக்கு மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறி 21,000 ரூபாவிற்கு மருந்துகளை விற்பனை செய்ய முற்பட்ட போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மஹரகமவில் உள்ள சந்தேகநபரின் வீட்டில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது 425,970 ரூபா பணமும் மேலும் சில … Read more