பாரிய பண மோசடியில் ஈடுபட்ட நபர் – இவரை கண்டால் உடன் அறிவியுங்கள்..

இலங்கை வந்த சுற்றுலா பயணியிடம் பாரிய பண மோசடியில் ஈடுபட்ட நபரை பொலிஸார் தேடி வருகின்றனர். உனவடுன வோட்டர் கேட் ஹோட்டலில் தங்கியிருந்த ரஷ்ய பெண் ஒருவரிடமிருந்து பணம் கொள்ளையிடப்பட்டிருந்தது. சந்தேக நபர் நாகியாதெனிய பிரதேசத்தை சேர்ந்த 40 வயதான சந்தன சமன் குமார என்பவரே திருட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறித்த ரஷ்ய பெண்ணிடமிருந்து 16,100 அமெரிக்க டொலர்கள், 195,000 ரஷ்ய ரூபிள் மற்றும் 200 யூரோக்கள் திருடப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை கைது … Read more

ஐரோப்பிய – இலங்கை பிக்குமார் சங்கத்தின் முதலாவது உச்சி மாநாடு

இவ்வருட ஐரோப்பிய – இலங்கை பிக்குமார் சங்கத்தின் முதலாவது உச்சி மாநாட்டை ஒஸ்ட்ரியாவின் தலைநகர் வியன்னாவில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எதிர்வரும் மே மாதம் 12ஆம் திகதி தொடக்கம் 14ஆம் திகதி வரை இந்த மாநாடு நடைபெறவுள்ளதாக அவுஸ்திரேலியாவின் வியன்னா பௌத்த மத்திய நிலையத்தின் தலைவரும், ஐரோப்பிய பிரதம சங்கநாயக்கர் விஜயராஜபுர சீலவிமல தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.

கல்வியாண்டுக்கான பாடநூல்கள் மார்ச் மாதம் 27ஆம் திகதிக்கு முன்னர் விநியோகிக்கப்பட்டுவிடும்

எதிர்வரும் மார்ச் மாதம் 27ஆம் திகதி புதிய கல்வியாண்டு ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் தேவையான அனைத்து பாடப்புத்தகங்களும் விநியோகிக்கப்பட்டுவிடும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். பின்தங்கிய பாடசாலைகளுக்கு முதற்கட்டமாக பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்படும். அதன் பின்னர், தலைநகரை அண்டிய பாடசாலைகளுக்கு புத்தகங்கள் விநியோகிக்கப்படும். இவ்வருட கல்வியாண்டுக்கான பாடநூல் வழங்கும் ஆரம்ப நிகழ்வு ஹோமாகம பிடிபனையில் உள்ள கல்வி வெளியீடுகள் திணைக்கள களஞ்சியசாலை வளாகத்தில் நேற்று (15) இடம்பெற்றது. தரம் 6 முதல் தரம் 11 வரையிலான பாடங்கள் … Read more

எதிர்கால சந்ததியினருக்காக நீர் வளத்தை பாதுகாக்க வேண்டும்

எமது எதிர்கால சந்ததியினருக்காக நீர் வளத்தை பாதுகாக்க வேண்டியது எம் அனைவரினதும் தலையாய கடமையாகும் என்று நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். மகாவலி அதிகார சபையில் நேற்று (15) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். நீர் முகாமைத்துவம் தொடர்பில் தற்போது நிலவும் பிரச்சினைகளால், நீர் வீண்விரயமாவதுடன், நீர் மாசடைதலும் அதிகரித்துள்ளது. இவற்றை தடுப்பதற்காக  தேசிய நீர் கொள்கை திட்டமொன்றை உருவாக்க வேண்டும் என்றும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய … Read more

இங்கிலாந்து லயன்ஸ் அணி வெற்றி

முதலாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து லயன்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை ஏ, சுற்றுலா இங்கிலாந்து லயன்ஸ் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முதலாவது உத்தியோகபூர்வ மற்ற ஒருநாள் தொடர்  கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நேற்று (15) நடைபெற்றது. இதற்கமைய நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணி 45.1 ஓவர்களில் 230 ஓட்டங்களை பெற்றது. இலங்கை ஏ அணி சார்பாக சிறப்பாக ஆடிய சதீர 86 பந்துகளில் 4 பௌண்டரிகளுடன் … Read more

கொழும்பு இந்திய விசா விநியோகப்பிரிவு மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும்

கொழும்பிலுள்ள விசா விண்ணப்ப நிலையமான IVS Pvt Ltd நேற்றிரவு இடம்பெற்ற பாதுகாப்பு குறித்த சில சம்பவங்கள் காரணமாக மறு அறிவித்தல் வரையில் மூடப்பட்டிருக்கும். 2. சகல விண்ணப்பதாரிகளும் IVS Pvt Ltd நிறுவனத்தில் மேற்கொண்ட தமது முன்பதிவுகளை மீள்பதிவுசெய்யுமாறு கோரப்படுகின்றனர். 3. அவசரமான கொன்சூலர் அல்லது விசா தேவைகளுக்காக உயர் ஸ்தானிகராலயத்தை தொலைபேசி மூலமாக அணுகவும்.   இந்திய உயர் ஸ்தானிகராலயம்கொழும்பு 15 பெப்ரவரி 2023

இலங்கை – அவுஸ்திரேலிய மகளிர் அணிகள் இன்று பலப்பரீட்சை

மகளிர் ரி 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இன்று (16) இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் போட்டி மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இதேவேளை நேற்று (15) நடைபெற்ற மகளிர் ரி 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் நடைபெற்றது.   நாணய சுழற்சியைவென்று முதலில் துடுப்பாட்டத்தை செய்த மேற்கிந்திய தீவுகள் அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 118 ஓட்டங்கள் பெற்றது. இதையடுத்து 119 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி … Read more

உணவுப் பொதிகளின் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் உணவுப் பொதிகள், கொத்து மற்றும் ஃபிரைட் ரைஸ் ஆகிய உணவுகளின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன. இந்த விடயத்தை அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். மின்கட்டண அதிகரிப்பு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  விலை அதிகரிப்பு இந்த விலை அதிகரிப்பானது இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன்படி உணவுப் பொதிகள், கொத்து மற்றும் ஃபிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகள் 10 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  இந்த விலை … Read more

மீண்டும் ஒரு பாரிய இயற்கை அனர்த்தம்

அண்டார்டிகாவில் உள்ள பாரிய பனிப்பாறைகளில் ஒன்று உருகி வருவதால், கடல் நீர்மட்டம் எதிர்பாராதவிதமாக அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அண்மைய ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளது. கடல் வெப்பநிலை வேகமாக அதிகரித்து வருவதே இதற்குக் காரணம். மேற்கு அண்டார்டிகாவில் உள்ள ‘த்வைட்ஸ்’ எனும் பனிப்பாறையே இந்த அவதான நிலைக்கு காரணமாக அமைந்துள்ளது. இந்த பனிப்பாறையின் அளவு 92,000 சதுர கிலோமீட்டர் ஆகும். இது சுமார் பெரிய பிரித்தானியாவின் பரப்பளவிற்கு ஏற்றளவாக அமைந்துள்ளது. அண்டார்டிகாவில் பனி உருகுவதை ஆய்வு செய்வதற்காக பிரிட்டனும் … Read more

இன்று தொடக்கம் மின் துண்டிப்பு நிறுத்தப்படும்

இன்று (16) தொடக்கம் மின் துண்டிப்பு நிறுத்தப்படும். இதற்கமைவாக தொடர்ச்சியாக மின் விநியோகத்தை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்தள்ளார். இன்று (16) நடைபெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில் இதுதொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், மக்களின் நலன் கருதி தொடர்ச்சியாக மின் விநியோகத்தை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி தெரிவித்தார். மின் கட்டண மறுசீரமைப்புக்கு அனுமதி வழங்கப்பட்டதுடன் நிலக்கரி கொள்வனவுக்கு இலங்கை வங்கியில் மேலதிகமாக 22 பில்லியன் ரூபா கடனை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளதாக … Read more