ATM இயந்திரத்தை திருடிய சந்தேகநபர்கள் கைது

கம்பளை பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பணத்துடன் கூடிய ATM இயந்திரம் ஒன்றை களவாடிய 07 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து ATM இயந்திரம் மற்றும் கைத்துப்பாக்கி ஒன்றையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். கடந்த வருடம் இடம்பெற்ற போராட்டத்தின் போது தீயிட்டு கொளுத்தப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரியின் வீட்டில் இருந்து அந்த கைத்துப்பாக்கி திருடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

மின் கட்டணத் திருத்தத்தினால் சிரமங்களை எதிர்நோக்கும் தரப்பினருக்கு நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட மின் கட்டணத் திருத்தத்தை அமுல்படுத்துவதினால் சிரமங்களை எதிர்நோக்கும் தரப்பினருக்கு நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மற்றும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கு இன்று (16) பணிப்புரை விடுத்துள்ளார். இதன்படி, மின் பாவனையாளர்களுக்கு தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவதுடன், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குதல், மத ஸ்தலங்கள் மற்றும் அரச கல்வி நிறுவனங்களுக்கு சூரிய மின் தகடுகளை (solar panels) வழங்குதல் ஆகியவற்றில் கவனம் … Read more

மின்வெட்டு தொடர்பில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் மின்வெட்டு தொடர்பில் சற்றுமுன் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.  அதன்படி இன்று முதல் இலங்கை முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்றைய தினம் (16.02.2023) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.  கட்டண உயர்வு மேலும் தெரிவிக்கையில், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் (PUCSL) அங்கீகரிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வைத் தொடர்ந்து இந்த விடயம் சாத்தியமாகிறது. மின்சார சபையின் தற்போதைய செலவுகளை … Read more

காட்டு யானைகள் கிராமங்களுக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை

பலாங்கொடை, வட்டவள, போவத்த ஆகிய பிரதேசங்களில் பெரும் பிரச்சினையாக இருந்த காட்டு யானைகள் கிராமங்களை தாக்கி விவசாய பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்கும் வகையில் ,சமனல குளத்திலிருந்து முல்கம ஊடாக சூரியவவ வரையிலான 54 கிலோமீற்றர் தூரத்திற்கு 03 மாதங்களுக்குள் யானை வேலி அமைக்குமாறு வனசீவராசிகள் திணைக்களத்திற்கு வனசீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பணிப்புரை விடுத்துள்ளார். காட்டு யானைகளின் தாக்குதலினால் மனித உயிர்கள் மற்றும் பயிர் நிலங்களுக்கு ஏற்படும் சேதங்களை குறைப்பதற்கான விசேட கலந்துரையாடல் … Read more

விவசாயிகளின் வங்கி கணக்கு எண்களில் குழப்பம்: அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நாட்டில் நெல் உற்பத்தியில் ஈடுப்பட்டுள்ள விவசாயிகளுக்கு மீள அறவிடப்படாத வகையில் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிதி மானியத்தை விவசாய கணக்குகளில் வைப்பீடு செய்வதற்காக தேவையான தகவல்களை சரியான வகையில் வழங்காத பிரதேச விவாசாய சேவை அதிகாரிகளுக்கு கடுமையான ஒழுக்க நடவடிக்கை மேற்கொள்வதற்கு விவசாய அபிவிருத்தி திணைக்களம் தீர்மானித்துள்ளது. இந்த நிதி மானியம் விவாசாய கணக்குகளில் வைப்பிடு செய்யப்படாமை தொடர்பில் விவசாய அமைச்சில் நடைபெற்ற பேச்சுவார்தையில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இதுதொடர்பான விடயங்களை … Read more

ஆர்ப்பாட்டங்களால் அரசாங்கத்தை அழுத்தங்களுக்கு உள்ளாகி எவரையும் பதவி நீக்கம் செய்யாது – ஜனாதிபதி

குறிப்பிட்ட சில அதிகாரிகளை நீக்கக் கோரி வேலைநிறுத்தம் நடப்பதற்காக நாம் யாரையும் தன்னிச்சையாக நீக்க மாட்டோம். அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கென சில விதிமுறைகள் இருப்பதனால் அரசாங்கம் அவற்றை முறைப்படி பின்பற்றியே செயற்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். கொழும்பு ட்ரேஸ் சிட்டியிலுள்ள இலங்கை தொழில்நுட்பக் கல்லூரியின் (SLTC) ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தில் நேற்று (15) காலை, நிர்வாகம் மற்றும் பொதுக் கொள்கைக்கான மையத்தை (C-GaPP) உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு … Read more

கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிய பின்னணியில் மகிந்த

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தீர்மானங்கள் தவறானவை என முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.பி. திஸாநாயக்க கூறியுள்ளார். மேலும்,கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிய பின்னணியில் மகிந்த ராஜபக்ச உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். எமது கட்சியைப் பொறுத்தவரை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கட்சியின் கொடியை மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்தமையில் தவறு இல்லையெனவும் தெரிவித்துள்ளார். தன்னிச்சையாக கட்சியை மைத்திரிபாலவிடம் ஒப்படைத்த பின்னரே கட்சிக்கு இது நடந்தது. கட்சியை இழந்தோம். அதற்கு மகிந்த ராஜபக்ச தான் பொறுப்பேற்க வேண்டும் … Read more

சிங்கள பௌத்த வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில்!

Courtesy: கட்டுரையாளர்: தி.திபாகரன் இலங்கை அரசியலில் இன்று பௌத்த மகாசங்கம் என்னும் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டுவிட்டது. கடந்த மாதம் இந்திய வெளிவிவகார அமைச்சரின் வருகைக்குப் பின்னர் ரணில் விக்ரமசிங்க காணி, பொலிஸ் அதிகாரம் உட்பட்ட 13 ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்தார். அதுமட்டுமன்றி சுதந்திர தினத்தன்று தீர்வு திட்டம் அறிவிக்கப்படும் என  ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் இவ்வாறு ரணில் விக்ரமசிங்க கூறியது ஈழத் தமிழர்களையும் இந்திய அரசாங்கத்தையும் ஒரே … Read more

ராஜீவ்காந்தியின் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை விடுதலை செய்தது தவறு! எழுந்துள்ள புதிய சர்ச்சை

உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ நெடுமாறன் தெரிவித்த கருத்து தொடர்பில் தமிழக அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என அகில இந்திய பயங்கரவாத எதிர்ப்பு முன்னணியின் தலைவர் மனிந்தர்ஜீட் சிங் பிட்டா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு – திருமலையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழக அரசாங்கத்தின் நிலைப்பாடு மேலும் கூறுகையில்,“தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மரணிக்கவில்லை என்ற கருத்து தொடர்பில் தமிழக அரசாங்கம் தனது … Read more