லண்டனில் வீதியில் திடீரென உயிரிழந்த இலங்கையர்! வெளியான திடுக்கிடும் தகவல்

கிழக்கு லண்டனில் இலங்கையரொருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த இலங்கையர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட நீதிமன்ற விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையை சேர்ந்த குறித்த நபர் பிறந்த நாள் நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்டு அளவுக்கு அதிகமாக மது அருந்திய நிலையில் வீதியில் சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளதாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2022 ஜூலை 24 ஆம் திகதி நடந்த இச்சம்பவத்தில் தொடர்புடைய, கிழக்கு ஹாம்ப்டன் பகுதியில் குடியிருந்து வந்த 34 வயது சபேசன் … Read more

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கும் சுவிஸ் தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிற்கும், இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் டொமினிக் பெர்கலருக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பு பொதுப்பாதுகாப்பு அமைச்சில் இன்றைய தினம்(15.02.2023) நடைபெற்றுள்ளது. இலங்கை பொலிஸ் திணைக்களத்தை மேம்படுத்த தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதாகவும், பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காப பயிற்சி செயலமர்வுகளை நடாத்த உதவிகளை வழங்குவதாகவும் சுவிஸ் தூதுவர் உறுதிமொழி வழங்கியுள்ளார். இதேவேளை, மனித உரிமை பாதுகாப்பின் முக்கியத்துவம் உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவின் அவசியம் என்பன குறித்து இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.  Source … Read more

பெரிய அளவிலான திட்டங்களைத் தொடங்குவதற்கு முன் அன்றாட வேலைகளைச் செய்யுங்கள்… – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

கம்பஹா மாவட்டம் வெள்ளப்பெருக்கினால் மூழ்குவதை தடுப்பதற்காக தேசிய திட்டமொன்றை தயாரிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்பபுரை வழங்கினார். அனைத்து அரச நிறுவனங்களும் இணைந்து வேலைத்திட்டத்தை தயாரிக்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். ஜாஎல பிரதேச செயலகத்தில் நேற்று (14) நடைபெற்ற ஜாஎல பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அமைச்சர் மேலும் கூறியதாவது: வீட்டுக்கடன் மற்றும் உதவித் திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்பது … Read more

கிழக்கு மாகாண அபிவிருத்தி மூலோபாய திட்டம் வெளியீடு…

கிழக்கு மாகாணத்தின் ஐந்து வருடத்திற்கான அபிவிருத்தி மூலோபாய திட்டம் மாகாண பிரதி பிரதம செயலாளர் (திட்டமிடல்) என்.தமிழ்செல்வத்தினால் அண்மையில் மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத்திடம் கையளிக்கப்பட்டது. எதிர்வரும் ஐந்து ஆண்டுளில் நடத்துவதற்கு  ஆலோசிக்கப்பட்டுள்ள புதிய முதலீட்டு மற்றும் நிகழ்ச்சி திட்டங்கள் இந்த திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அரசாங்கத்தினால் கிடைக்கும் ஒதுக்கீட்டிலிருந்தும் புதிய முதலீடுகளை பெற்றுக்கொள்வதன் ஊடாக இவ்வேளைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எம். ஏ. முனாஸிர் கலந்துகொண்டார்

விடுதலைப்புலிகளின் தலைவர் உயிரோடு! ராஜபக்சவினரை மீண்டும் ஆட்சியில் அமர்த்த இரகசிய திட்டம்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன், நலமாக இருப்பதாகவும், உரிய நேரத்தில் மக்கள் முன் வருவார் எனவும், ஆனால் எங்கு உள்ளார் என்பதினை தற்போது அறிவிக்க இயலாது’ எனவும் உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து அறிவித்திருந்தார். பழ.நெடுமாறன் தெரிவித்த இந்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், பிரபாகரன் உயிருடன் இல்லை என்று இலங்கை இராணுவம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது. மேலும், விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தற்போது உயிருடன் இல்லை. 2009 … Read more

துருக்கியில்,இடிபாடுகளில் இருந்து 8 ஆயிரம் பேர் உயிருடன் மீட்பு

துருக்கியில் நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் இருந்து இதுவரை 8 ஆயிரம் பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி தையீப் எர்டோகன் தெரிவித்துள்ளார். துருக்கியின் காசியான்டெப் நகரில் கடந்த 6 ஆம் திகதி அதிகாலை 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது அங்கு 10-க்கும் மேற்பட்ட மாகாணங்களை பாதித்தது. நிலநடுக்கம் தாக்கிய காசியான்டெப் நகரம் அண்டை நாடான சிரியாவின் எல்லையையொட்டி அமைந்திருப்பதால் இந்த நிலநடுக்கம் சிரியாவிலும் பேரழிவை ஏற்படுத்தியது. இந்நிலையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 37 ஆயிரத்தை கடந்துள்ளது. … Read more

இராணுவப் பண்ணைகளில் மரக்கறிகள் ,நெல் அறுவடை

இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் நாடு முழுவதும் உள்ள இராணுவப் விவசாய பண்ணைகளில் அரசாங்கத்தின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் பல மாதங்களுக்கு முன்னர் அந்தந்தப் பண்ணைகளில் பயிரிடப்பட்ட பெரும்போக நெல் அறுவடை மற்றும் பருவகால மரக்கறிகளை அறுவடைசெய்யும் பணியில் படையினர் ஈடுபட்டுள்ளனர்.  அதற்கமைய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களால் நிறுவப்பட்ட பசுமை விவசாய வழிநடத்தல் குழுவுடன் இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் படையணியின் படையினர், பாங்கொல்ல, தயாகம, ரிதியகம, மெனிக்பார்ம், வீரவில … Read more

ஒருமுறை மாத்திரம்  பயன்படுத்தக்கூடிய பிளாஸ்ரிக் பொருட்களுக்கு  ஜுன் மாதம்  முதல் தடை

ஒருமுறை மாத்திரம்  பயன்படுத்தக்கூடிய பிளாஸ்ரிக் பொருட்களின் பாவனை எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் தடைசெய்யப்பட இருக்கின்றது. பிளாஸ்ரிக் பொருட்களின் உற்பத்திஇ விற்பனைஇ பயன்பாடு என்பன இதன் கீழ் தடைசெய்யப்படவுள்ளன. இதுதொடர்பாக நேற்று முன்தினம் (13) நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 06. ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தி அகற்றப்படும் (Single Use) ) ப்ளாஸ்ரிக்ஃபொலித்தீன் கழிவுப்பொருட்களை கட்டுப்படுத்துதல்ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தி அகற்றப்படும் (Single Use) ) ப்ளாஸ்ரிக்ஃபொலித்தீன் 07 உற்பத்திகளை இறக்குமதி செய்தல், நாட்டில் … Read more

திருக்கேதீஸ்வர ஆலய மகா சிவராத்திரி விழா எதிர்வரும் 18 ஆம் திகதி

எதிர்வரும் 18 ஆம் திகதி  மகா சிவராத்திரி விழா மன்னார் மாவட்டத்தில் பாடல் பெற்ற திருத்தலமான  திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் வெகு சிறப்பாக இடம்பெறவுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தெரிவித்துள்ளார். எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ள சிவராத்திரி தினத்தை முன்னிட்டு அதற்கான முன்னேற்றுப்பாட்டு கலந்துரையாடல் மன்னார் மாவட்ட செயலகத்தில் நேற்று (14) நடைபெற்ற போதே அரசாங்க அதிபர் இதனை தெரிவித்தார்.    சகல துறைசார் திணைக்கள அதிகாரிகள் மற்றும் திருக்கேதீஸ்வர ஆலய செயலாளர் ஆகியோருடன் இது … Read more

தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட தகவல்

எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி இடம்பெறவிருக்கும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரட்நாயக்க தெரிவித்துள்ளார். தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப் பத்திரம் அரச சேவை ஓய்வூதிய அடையாள அட்டை, முதியவர்களுக்கான அடையாள அட்டை, ஆள் அடையாள அட்டையின் தகவல்களை உறுதிப்படுத்தும் கடிதம் என்பனவற்றை இதற்காக சமர்ப்பிக்க முடியும். தேர்தல் ஆணைக்குழு வழங்கும் விசேட அடையாள அட்டையையும் இதற்காக பயன்படுத்தலாம் என்றும் … Read more