தபால் மூல வாக்குகளிப்புக்கான வாக்கு அட்டை ஆவண விநியோகம் ஒத்திவைப்பு

தபால் மூல வாக்குகளிப்புக்கான வாக்கு அட்டை ஆவண விநியோகம் ஒத்திவைப்பு இதுதொடர்பாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

நிவாரணம் வழங்கும் வேலைதிட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் எந்தவொரு குடும்பத்தையும் தவறவிட வேண்டாமென ஜனாதிபதி அரச அதிகாரிகளுக்கு பணிப்புரை

நிவாரணம் வழங்கும் வேலைதிட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் எந்தவொரு குடும்பத்தையும் தவறவிட வேண்டாமென ஜனாதிபதி அரச அதிகாரிகளுக்கு பணிப்புரை மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இருபத்தி எட்டு இலட்சத்து ஐம்பதாயிரம் குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்கப்படும். குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி பெற்றுக் கொடுக்கும் வேலைதிட்டத்தின்போது தேவையுடைய எவரையும் தவறவிட வேண்டாமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அரச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். இதேவேளை, 28 இலட்சத்து 50ஆயிரம் குடும்பங்களுக்கு (2,850,000) அரிசி … Read more

நாட்டில் மரக்கறி நுகர்வில் பாரிய வீழ்ச்சி

நாட்டில் மரக்கறி நுகர்வில் பாரியளவு வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மக்கள் மரக்கறி நுகர்வினை 50 வீதத்தினால் குறைத்துக் கொண்டுள்ளதாகவும், மரக்கறி மொத்தவிலை ஸ்திரமற்ற நிலையில் காணப்படுவதாகவும் தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தின் செயலாளர் ஐ.ஜீ.விஜயானந்த தெரிவித்துள்ளார். மரக்கறி மொத்த விற்பனை நிலை குறைந்துள்ள காரணத்தினால் கொள்வனவாளர்கள் மரக்கறி வகைகளை போக்குவரத்து செய்வதிலிருந்து விலகிக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  மரக்கறி கொள்வனவில் வீழ்ச்சி எரிபொருள் விலை ஏற்றத்தை தொடர்ந்து மரக்கறி கொள்வனவு செய்ய வருவோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். … Read more

கடற்பரப்புகள் கொந்தளிப்பாகக் காணப்படும்

இரங்கைச் சூழவுள்ளகடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல்நிலை,தேசியவளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப்பிரிவால் வெளியிடப்பட்டது.  அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு                                                               2023 பெப்ரவரி 15 ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை … Read more

காதலியை பார்ப்பதற்காக அரச பேருந்தை ஓட்டி சென்றவருக்கு நேர்ந்த கதி

ரம்புக்கனை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று ஹத்திரலியத்த பேருந்து நிலையத்தில் இரவு நிறுத்தி வைக்கப்பட்டு சாரதி சென்ற பின்னர் பேருந்து நடத்துனர் அதனை ஓட்டிச்சென்று விபத்துக்குள்ளாகியுள்ளார். தனது காதலியைப் பார்ப்பதற்காக 9 கிலோமீற்றர் தூரம் பேருந்தை ஓட்டிச் சென்றுவிட்டு திரும்பி வரும் போது விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்தின் பின்னர் பேருந்தை ஹத்திரலியத்த பேருந்து தரிப்பிடத்திற்கு ஓட்டிச் சென்ற நடத்துனர் ஒன்றும் நடக்காதது போன்று அங்கிருந்து வெளியேறியுள்ளார். அவரை கைது செய்வதற்கான ஏற்பாடுகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. … Read more

உயிரை காப்பாற்றிய இந்திய வீரருக்கு நன்றியுடன் முத்தமிட்ட துருக்கி தாய்! – நெகிழ்ச்சி தருணம்

துருக்கியில் நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கிய பெண் ஒருவர், இந்திய இராணுவத்தால் மீட்கப்பட்ட பின்னர் இந்திய பெண் இராணுவ அதிகாரியை வாரி அணைத்து கன்னத்தில் முத்தமிட்ட புகைப்படமொன்று வைரலாகியுள்ளது. இந்திய மருத்துவக்குழுவைச் சேர்ந்த மேஜர் வீணா திவாரியின் கன்னத்தில் முத்தமிட்டு துருக்கி பெண்மணி ஒருவர் இவ்வாறு நன்றி தெரிவித்துள்ளார். இதேவேளை, துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பூகம்பத்தால் இதுவரை 37,000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மேலும், பலர் உயிரிழந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகின்றது. இந்திய இராணுவ மருத்துவர் கர்னல் … Read more

திமிங்கிலத்தில் சவாரி செய்த இலங்கை பெண்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

கல்பிட்டி கரையில் ஒதுங்கிய திமிங்கல மீன்கள் பாதிக்கும் வகையில் செயற்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றாடல் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. கரை ஒதுங்கிய அந்த மீனின் மேல் ஏறி மீனை கரையில் இழுத்து அதற்கு பல்வேறு விதத்தில் தொந்தரவு செய்த சிறுவர்கள் மற்றும் பெண்கள் தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. கடலில் இருந்து கரைக்கு எடுத்து வரப்பட்ட அந்த மீன் உயிரிழந்ததாக கூறப்படுகின்ற போதிலும் கரையில் அந்த மீன்களின் செயற்பாடு குறைந்த … Read more

சிங்களம் தெரியாது! பொலிஸாரிடம் முரண்பட்ட சிறீதரன்:பரபரப்பை ஏற்படுத்தும் காணொளி(Video)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை நீதிமன்றத்திற்கு வருகை தருமாறு கூறும் பொலிஸ் கட்டளையினை இன்றைய தினம் பொலிஸார் வழங்கியுள்ளனர். அந்த கட்டளை சிங்கள மொழியில் மாத்திரம் இருந்ததன் காரணமாக சிங்கள மொழி தனக்கு வாசிக்கத் தெரியாது எனவும் ஆகவே இந்த கட்டளையினைத் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தமிழில் கொண்டு வந்து தருமாறும் கூறி அவர்களிடம் மீளக் கையளித்துள்ளார். பின்னர் பொலிஸார் அந்த கட்டளையை தமிழில் மொழிபெயர்த்து கொண்டு வந்து கொடுத்துள்ளனர். இதனைதொடர்ந்து … Read more

நெல் கொள்வனவு தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டது

அரசாங்கத்தின் நெல் கொள்வனவு மற்றும் நெல் கையிருப்பை விநியோகிக்கும் வேலைத்திட்டம் தொடர்பான சுற்றறிக்கை திறைசேரியினால் வெளியிடப்பட்டுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பணிப்புரையின் பிரகாரம், திறைசேரி செயலாளர் கே.எம். மஹிந்த சிறிவர்தனவின் கையொப்பத்துடன் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 2022/2023 பெரும்போகத்தில் விவசாயிகளுக்கு நெல் அறுவடைக்கு நியாயமான விலையை வழங்குவதும், மேலதிக நெல்லை அரசாங்கம் கொள்முதல் செய்வதும், தற்போதைய கடினமான பொருளாதார நிலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த … Read more

கரையோரத்தை அண்டியபகுதிகளில் கடற்பரப்புகள் கொந்தளிப்பாகக் ….

இலங்கையைச் சூழவுள்ளகடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல்நிலை தேசியவளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப்பிரிவால் வெளியிடப்பட்டது மழை நிலைமை: கொழும்பிலிருந்து காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை  பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்குதிசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக கொழும்புவரையானகரையோரத்திற்கு அப்பாற்பட்டகரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாகபொத்துவில்வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்டகடற்பரப்புகளிலும் … Read more