ஓய்வூதியர்களுக்கான அறிவிப்பு

ஜனவரி மாதத்திற்கான ஓய்வூதியக் கொடுப்பனவு நேற்று உரிய வங்கிக் கிளைகளில் வைப்பீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிரிவர்தன தெரிவித்துள்ளார். திறைசேரியின் நிதி நிலைமை காரணமாக வங்கியில் பணத்தை வைப்பீடு செய்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ஓய்வூதியக் கொடுப்பனவுக்கு மாதாந்தம் 2600 கோடி ரூபாய் செலவாகுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாண விளையாட்டு விழாவில் 2ம் இடம் இடம் பெற்ற முல்லைத்தீவு

2022ம் ஆண்டுக்கான 15 வது வடமாகாண விளையாட்டு விழாவில் ,முல்லைத்தீவு மாவட்டம் 129 பதக்கங்களைப் பெற்று, தொடர்ந்தும் 3 ஆவது தடவையாக 2 ஆம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது. மாகாணத்தில் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டமைக்கான வெற்றிக்கேடயங்களை மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதனிடம் கையளிக்கும் நிகழ்வும் மற்றும் குறித்த சாதனையை நிலைநாட்டிய வீர வீராங்கனைகள் தங்கள் பயிற்றிவிப்பாளர்களை வாழ்த்தி கௌரவிக்கின்ற நிகழ்வும் 11) முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது முல்லைத்தீவு மாவட்ட அணியினர் … Read more

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி கொழும்பை தளமாகக் கொண்ட இராஜதந்திரிகளுக்கு தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து விளக்கமளிப்பு

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி கொழும்பை தளமாகக் கொண்ட இராஜதந்திரிகளுக்கு தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து விளக்கமளிப்பு அமைச்சில் இடம்பெற்ற புத்தாண்டுக்கான கொழும்பை தளமாகக் கொண்ட இராஜதந்திரிகளுக்கான முதலாவது இராஜதந்திர மாநாட்டிற்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி 2023 ஜனவரி 10ஆந் திகதி தலைமை தாங்கினார். 2023ஆம் ஆண்டை சமூகப் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துதல், நல்லிணக்கம் மற்றும் மீட்சிக்கான ஆண்டாக இலங்கை நோக்குவதாக ஆரம்பத்தில் எடுத்துரைத்த அமைச்சர் சப்ரி, அதிக ஸ்திரத்தன்மைக்கு வழிவகுத்த சவால்களுக்கு மத்தியில் மீட்சி … Read more

இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஜப்பானிய வர்த்தகர்கள் அவதானம்

ஜப்பானிய அமைச்சரவை அலுவலக இராஜாங்க அமைச்சர் சடோஷி புஜிமரு (Satoshi Fujimaru) உள்ளிட்ட ஜப்பானிய வர்த்தகர்கள் குழு நேற்று (11) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களைச் சந்தித்தது. இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து இதன் போது ஆராயப்பட்டதோடு விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா, சுரங்கக் கைத்தொழில், தொழிலாளர் பயிற்சி உட்பட இலங்கையிலுள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது. அரசாங்கத்தின் பொருளாதாரத் திட்டங்களின் கீழ், புதிய மற்றும் வளர்ந்து வரும் … Read more

தான் நினைத்த மாதிரி பேசுவதே கஜேந்திரகுமாரின் குறைபாடு: விக்னேஸ்வரன்

உண்மைகளை அறியாமல் தான் நினைத்த மாதிரி பேசுவதே கஜேந்திரகுமாரின் குறைபாடு என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் நீதியரசர் சி.வி விக்னேஸ்வரன் குற்றச்சாட்டியுள்ளார். திங்கட்கிழமை யாழ்.மாநகர முன்னாள் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடிய பின் ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்தியா செல்லக் காரணம் கடந்த வாரம் விக்னேஸ்வரன் இந்தியா சென்றமை, அரசியல் தலைவர்களை சந்திப்பதற்காகத் தான் என அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவர் கஜேந்திரகுமார் தெரிவித்ததாக … Read more

வெளிநாடுகளுக்கு சென்றுள்ள 700 மருத்துவர்கள்-இலங்கை திரும்புவார்களா என்பது சந்தேகம்

வெளிநாடுகளுக்கு சிறப்பு மருத்துவ பயிற்சிகளுக்காக சென்றுள்ள 700 இளம் மருத்துவர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்பி வராத ஆபத்து இருப்பதாக அரச மருத்துவர்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஆறு மாதங்களில் நாட்டை விட்டு சென்றுள்ள 500 இளம் மருத்துவர்கள் இதனை தவிர சுமார் 500 இளம் மருத்துவர்கள் கடந்த ஆறு மாதங்களில் நாட்டை விட்டு சென்றுள்ளனர் என அரச மருத்துவர்கள் ஒன்றியத்தின் தலைவர் மருத்துவர் ருக்ஷான் பெல்லன கூறியுள்ளார். அரசாங்கத்திடம் நிலையான கொள்ளை இல்லாததன் அதிருப்தி, வெளிநாடுகளில் இருக்கும் சிறப்பான … Read more

அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட டிசம்பர் மாத சம்பளம்! தற்போது வெளியிடப்பட்ட தகவல்

அரச ஊழியர்களுக்கு, கடந்த டிசம்பர் மாத சம்பளம், உரங்களை விற்பனை செய்து பெறப்பட்ட பணத்தில் இருந்தே வழங்கப்பட்டது என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.  2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தின் போது அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அரச ஊழியர்களின் சம்பளம் விவசாய அபிவிருத்தி திணைக்களம் கடந்த பருவ காலங்களில் யூரியா உரங்கள் மற்றும் ஏனைய உரங்களை விற்பனை செய்து 10.05 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது. இந்த பணம் … Read more

மகிந்த, கோட்டாபயவுக்கு தடை – மன வேதனையில் சப்ரி (Video)

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் இருவருக்கு எதிராக கனேடிய அரசாங்கம் விதித்த தடைக்கு வெளிவிவகார அமைச்சு அதிருப்தி வெளியிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்ச உட்பட நான்கு பேருக்கு எதிராக கனேடிய அரசு நேற்று தடை விதித்துள்ளது. இந்த நான்கு பேரின் சொத்துக்கள் கனடாவில் இருந்தால் அவற்றை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனடாவின் பதில் உயர்ஸ்தானிகர் டானியல் பூட்டை இன்று வெளிவிவகார அமைச்சுக்கு வரவழைத்து, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அதிருப்தி வெளியிட்டுள்ளார். … Read more

புனித தலங்களை வர்த்தமானியில் வெளியிட திட்டம்

இந்த ஆண்டு 26 புனித தலங்களை வர்த்தமானியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தேசிய பெளதிக திட்டமிடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, திஸ்ஸவ ரஜ மகா விகாரை, வெல்கம் வெஹெர ரஜ மகா விகாரை, மஹாசென் ரஜ மகா விகாரை, மெதகொட சித்த பத்தினி ஆலயம், பியகம சுதர்மாராம மகா விகாரை, பெபிலியான சுனேத்ரா மகாதேவி பிரிவேன, கம்பலேவ அம்பெவ ஸ்ரீ சுதர்மாராமய, பிலாகட்டுமுல்லை ஸ்ரீ புஷ்பராம புராண விகாரை, கிரிமதியான ஸ்ரீ சுதம்மவங்ஷாராம ரஜமஹா விகாரை, கப்பின்ன மகா … Read more

பாராளுமன்ற செயற்பாடுகள் ,நடைமுறைகள் பற்றி தெளிவுபடுத்தும் நிகழ்வு

பாராளுமன்ற செயற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் பற்றி தெளிவுபடுத்தும் நிகழ்வு பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்க்ஷ தலைமையில் ஹம்பாந்தோட்டை மாவட்ட ஹுங்கம விஜயபா கல்லூரியில் (09) இடம்பெற்றது. பாராளுமன்ற செயற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பில் மாணவர்களின் அறிவை வளர்த்தல் இந்த நிகழ்வின் பிரதான குறிக்கோளாக அமைந்ததுடன், அதற்காக பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் டிகிரி கே. ஜயதிலக்க மற்றும் பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எச். ஈ. ஜனகாந்த சில்வா … Read more