உள்ளூர் மூலிகைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் உணவுப் பொருள் தயாரிப்புக்களுக்கு தொழில்நுட்ப உதவி அவசியம்

ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியமான யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி நவரூப ரஞ்சினி முகுந்தன் தலைமையிலான பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (10) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் கடந்த வருடம் (2022) ஒக்டோபர் மாதத்திலிருந்து ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியமான யுனிசெப் அமைப்பினால், முன்பள்ளிகளுக்கு அனுசரணை வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும், நிகழ்ச்சித்திட்டமான ‘வறுமையினால் … Read more

இந்திய அணி 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியா – இலங்கை அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கௌகாத்தியில் நேற்று (10) நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 373 ஓட்டங்கள் பெற்றது. இந்திய அணி சார்பில் விராட் கோலி 113 ஓட்டங்களும், ரோகித் சர்மா 83 ஓட்டங்களும், ஷூப்மான் கில் 70 ஓட்டங்களும் அதிகமாக பெற்றனர். இதையடுத்து 374 ஓட்டங்கள் … Read more

மனித கடத்தல் விவகாரம்! பெண் ஒருவர் உட்பட மூவர் கைது

சுற்றுலா விசாவில் பெண்களை ஓமான் நாட்டுக்கு அனுப்பி வைத்து மனிதக் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று உப முகவர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விஷேட புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட துணை முகவர்களில் பெண் ஒருவரும் அடங்குவதாக விசாரணைக் குழுக்கள் தெரிவித்துள்ளன. ஓமான் மனிதக் கடத்தலில் சிக்கிய பெண்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் புலனாய்வுக் குழுவொன்று ஓமான் சென்று மனிதக் கடத்தலில் சிக்கிய பெண்கள் … Read more

பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் செயலாளர் நாயகம்

பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் (CPA) செயலாளர் நாயகம் ஸ்டீபன் ட்விக் (Stephen Twigg) நேற்று (10) இரவு நாட்டை வந்தடைந்தார். செயலாளர் நாயகம் உள்ளிட்ட குழுவினரை பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் கௌரவ அங்கஜன் இராமநாதன் மற்றும் பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் டிகிரி கே. ஜயதிலக்க ஆகியோர் வரவேற்றனர். ஸ்டீபன் ட்விக் அவர்களின் இலங்கை விஜயத்தில் அவருடன் பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் மூலோபாய மற்றும் செயற்பாட்டுப் பிரதானி செல்வி எமில் டேவிஸ் அவர்களும் இனணந்துள்ளார். பொதுநலவாய … Read more

ஊடகங்கள் அறிக்கையிடும் வகையில் புகையிரதப் பயணங்கள் இரத்து செய்யப்படவில்லை

ஊடகங்கள் அறிக்கையிடும் வகையில் புகையிரதப் பயணங்கள் இரத்துச் செய்யப்படவில்லையென அமைச்சர் பந்துல குணவர்த்தன அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தெரிவிப்பு ஊடகங்கள் அறிக்கையிட்டது போன்று பணியாளர்கள் ஓய்வுபெற்றமை காரணமாக ரயில் பயணங்கள் இரத்துச் செய்யப்படாது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன தெரிவித்தார். • ரயில் பயணங்கள் இரத்துச் செய்யப்படுவதை நிறுத்த இம்மாத இறுதிக்குள் நிகழ்ச்சித்திட்டம் • புதிய ரயில் நேர அட்டவணை பெப்ரவரி ஆரம்பத்தில் • நீண்டதூர ரயில் … Read more

கட்டுநாயக்கவில் உயிரிழந்த கனேடியர் தொடர்பில் வெளியான தகவல்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் விழுந்து உயிரிழந்தவர் தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட கனேடிய பிரஜை ஒருவரே கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விழுந்து உயிரிழந்துள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர். 54 வயதான புத்திக கருணாரத்ன என்ற இந்த நபர் இலங்கையின் பெத்தகான பிரதேசத்தில் வசிப்பவராகும். அவரும் அவரது தாயாரும் கட்டாரின் டோஹாவில் இருந்து நேற்று அதிகாலை 02.18 மணியளவில் கட்டார் ஏர்வேஸ் கியூ.ஆர். 662 … Read more

வெளிநாடொன்றில் இலங்கை இளநீருக்கு கிராக்கி – பல ஆயிரத்தை தாண்டும் விலை

டுபாய் சந்தையில் இலங்கையின் இளநீர் தேவை மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கீர்த்தி ஸ்ரீ வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கைக்கே உரித்தான இளநீருக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தில் அதிக தேவை காணப்பட்டாலும் கடந்த காலங்களில் இளநீர் ஏற்றுமதி தொடர்பான பல பண பரிவர்த்தனைகள் உண்டியல் ஊடாக மேற்கொள்ளப்பட்டமையினால் நாடு பெருமளவு அந்நியச் செலாவணியை இழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தென்னை அபிவிருத்தி அதிகார சபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார். தென்னை … Read more

அமைச்சுக்களின் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 5 வீதத்தைக் குறைக்க நடவடிக்கை

2023 வரவு செலவுத் திட்டத்தில் அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் ஊடாக, அனைத்து அமைச்சுக்களின் செலவீனங்களில் இருந்தும் 5 வீதத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (10) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 2023 ஆம் ஆண்டு பல சவால்களைக் கொண்ட ஆண்டாக அமைந்துள்ளது. வெளிநாட்டு கடன் உதவியை பெற முடியாத … Read more

தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து கண்டறியும் விசேட தேடுதல் பிரிவு

தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து கண்டறியும் விசேட தேடுதல் பிரிவொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட்டியில் உள்ள தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் நேற்று முன்தினம் (09) இடம்பெற்ற நிகழ்வின் போது அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்தார். தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மனுஷ நாணயக்கார அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கியுள்ளார். தொழிலாளர் சட்டங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது அவர்கள் மீது தாக்கம் செலுத்தும் … Read more

துவிச்சக்கர வண்டியில் இலங்கை தீவகம் முழுவதையும்….

பழுகாமத்தை சேர்ந்த பாலச்சந்திரன் நிரோஜன் என்ற இளைஞன் துவிச்சக்கர வண்டியில் இலங்கை தீவகம் முழுவதையும் ஒன்பது நாட்களில், வட்டப் பாதையில் தனியாகப் பயணம் செய்துள்ளார். தனது பயணத்தை 2022 டிசம்பர் மாதம் 28ஆம் திகதி பழுகாமத்தில் ஆரம்பித்து 1299கிலோமீற்றர் பயணம் செய்து, மீண்டும் 2023 ஜனவரி மாதம் 5ஆம் திகதி ஆரம்பித்த இடத்திலே அவரது பயணத்தை நிறைவு செய்துள்ளார். பாலச்சந்திரன் நிரோஜன் பயண விபரங்களாவன:முதலாம் நாள் மட்டக்களப்பின் பழுகாமத்திலிருந்து 123கிலோமீற்றர் பயணம் செய்து, திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவரைக்கு … Read more