தேர்தல் குறித்து எடுக்கப்பட்ட திடீர் முடிவு

மறு அறிவித்தல் வரும் வரை தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்பதை நிறுத்துமாறு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் உத்தரவிட அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இன்று (10) பிற்பகல் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மக்களின் இறையாண்மைக்கு எதிரானது உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் கோரப்பட்டுள்ளதுடன், தேர்தல் அதிகாரிகள் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் பணியை முன்னெடுத்துள்ள நிலையிலேயே இந்த … Read more

நாட்டின் பொருளாதார சமூக மேம்பாட்டிற்காக, புதிய திட்டம்

எதிர்வரும் 25 வருட காலத்தில் நாட்டின் பொருளாதார சமூக கலாச்சாரம் உள்ளிட்ட துறைகளின் மேம்பாட்டிற்காக, புதிய வேலைத் திட்டம்  சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தியிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (10) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில், இதற்கமைவாக 7 புதிய நிறுவனங்கள் அமைக்கப்பட உள்ளன. அரச மற்றும் … Read more

ராஜபக்ஷர்களை சூளும் ஆபத்து – கொழும்பு துறைமுக நகரில் சிக்கும் மஹிந்த, நாமல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு துறைமுக நகருக்கு அடிக்கடி விஜயம் செய்பவராக மாறியுள்ளதாக தெரிய வருகிறது. காலையில் உடற்பயிற்சிக்காக கொழும்பு துறைமுக நகருக்கு மஹிந்த விஜயம் செய்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதியுடன் அடிக்கடி அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் அவரது நண்பர்கள் சிலரும் செல்வதாகவும் அவர்களில் முன்னாள் அமைச்சர் பௌசியின் புதல்வர் நௌசர் பௌசியும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மஹிந்தவின் மூத்த புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவும், உதைபந்தாட்டம் உள்ளிட்ட விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக கொழும்பு … Read more

கணக்காய்வாளர் நாயகம் தொடர்பில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரின் கருத்துத் தொடர்பில் கோப் குழு கடுமையான அதிருப்தி

கணக்காய்வாளர் நாயகம் தொடர்பில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரின் கருத்துத் தொடர்பில் கோப் குழு கடுமையான அதிருப்தி  ஜனாதிபதிக்கு அறிவிக்க முடிவு  சபாநாயகரிடம் முறைப்பாடு  பராளுமன்றத்தில் விசேட அறிக்கை  எதிர்வரும் 17ஆம் திகதி அமைச்சின் செயலாளரை குழு முன்னிலையில் மீண்டும் அழைக்கத் தீர்மானம்  அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோபா குழு) விசேட கூட்டம் அதன் தலைவர் கௌரவ பேராசிரியர் ரஞ்சித் பண்டார தலைமையில் அண்மையில் (05) நடைபெற்றது. இதில் கீழ்வரும் விடயங்கள் குறித்துக் … Read more

பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் செயலாளர் நாயகம் இன்று இலங்கை வருகை

பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் (CPA) செயலாளர் நாயகம் ஸ்டீபன் ட்விக் (Stephen Twigg) இன்று (10) மாலை இலங்கை வருகை தரவுள்ளதாக பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார். அதற்கமைய, செயலாளர் நாயகம் உள்ளிட்ட குழுவினரை பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் கௌரவ அங்கஜன் இராமநாதன் மற்றும் பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் டிகிரி கே. ஜயதிலக்க ஆகியோர் வரவேற்கவுள்ளனர். ஸ்டீபன் ட்விக் அவர்களின் இலங்கை விஜயத்தில் அவருடன் பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் மூலோபாய … Read more

அமெரிக்கா,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானுக்கு 100 மில்லியன் டொலர் நிவாரண உதவி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானுக்கு அமெரிக்கா 100 மில்லியன் டொலர் நிவாரண உதவி வழங்குகிறது. பாகிஸ்தானில் பருவகால மழை பாதிப்புகளால் கடந்த ஆண்டில் அந்நாடு முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 3.3 கோடி பேர் பாதிக்கப்பட்டனர். இந்த வெள்ள பாதிப்புக்கு 1 700க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வெள்ள பாதிப்பில் காயமடைந்தனர். இதேவேளை இந்த வெள்ள பாதிப்புக்களால் பாதைகளும்இ பாலங்களும் துண்டிக்கப்பட்டும்இ நீரில் அடித்தும் செல்லப்பட்டன. இந்த நெருக்கடியான சூழலில் உலக நாடுகளின் உதவியை பாகிஸ்தான் எதிர்பார்த்தது. இதற்கமையஇ … Read more

இந்தியா-இலங்கை மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி

இலங்கை, இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி கௌஹாத்தியில் இன்று (10) நடைபெறவுள்ளது. இலங்கை நேரப்படி போட்டி இன்று (10) பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்திய அணிக்கு எதிரான ரி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்த இலங்கை அணி வெற்றிக்காக ஒருநாள் தொடரில் களமிறங்கவுள்ளது.

யாழில் இசை அமைத்து வெளிவந்துள்ள தமிழ் நாட்டுக்கு நிகரான இலங்கை படைப்புகள்

கட்டணம் செலுத்தப்பட்ட பதிவு இலங்கையில் உள்ள தமிழ் இசையமைப்பாளர்களின் இசையமைப்பில் தமிழ் நாட்டுக்கு நிகரான சில பாடல்கள் 2022ல் வெளிவந்துள்ளன. இலங்கைத் தமிழர்களின் இசைத்திறமைகளை வெளியே கொண்டுவரும் விதமாக இந்த பாடல்கள் அமைந்துள்ளன. இங்கே P.U.Shankarரின் மெட்டிலும், வரிகளிலும், குரலிலும் ஐயனார் பாடல் வெளிவந்துள்ளது. ஐயனார் பாடல் இதற்கான பின்னணி இசையினை யாழ்பாணத்தில் Shanu அமைத்துள்ளார், அத்தோடு தாளம் Bhanuவின் வீணை, புல்லாங்குழல் இசை கலந்து இந்த பாடல் வெளிவந்துள்ளது. இதில் இன்னுமொரு பாடல் தாயைப் பற்றியது … Read more

மின் பரிமாற்ற இணைப்பு: இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு இந்தியா – இலங்கை திட்டமா..!

இரண்டு நாடுகளுக்கிடையிலும் மின்சாரப் பரிமாற்ற இணைப்பை அமைப்பதற்காக இந்தியாவும் இலங்கையும் ‘உயர் மட்டத்தில்’ இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்கு திட்டமிடுவதாக இந்திய செய்தித்தளம் ஒன்று கூறியுள்ளது. இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான பவர் கிரிட் கோர்ப்பரேஷன் ஒஃப் இந்தியா ஏற்கனவே முன்மொழியப்பட்ட திட்டத்திற்கான பூர்வாங்க அறிக்கையை தயாரித்துள்ளது. கடந்த ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பின்னணியில், மின்சார பற்றாக்குறை முடங்கியதன் பின்னணியில் ஆரம்பப் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. உயர் அரசியல் மட்ட பேச்சுவார்த்தை இலங்கையில் உள்ள தனது உயர்ஸ்தானிகரகத்தின் மூலம் இந்திய … Read more

முட்டை விலையை குறைக்க தீர்மானம்! வெளியான தகவல்

முட்டையின் மொத்த விலையை குறைப்பதற்கு அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் தலைவர் என்டன் நிஷாந்த அப்புஹாமி கூறுகையில், எதிர்வரும் சனிக்கிழமை முதல் முட்டை ஒன்றின் மொத்த விலையை ஐந்து ரூபாவால் குறைக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முட்டை விற்பனை இதன்படி, எதிர்வரும் சனிக்கிழமை முதல் 45 ரூபா என்ற மொத்த விலைக்கு முட்டை விற்பனை செய்யப்படவுள்ளது. முட்டை உற்பத்தியாளர்கள் பாரவூர்திகள் மூலம் முட்டையை விற்பனை செய்யும் … Read more