அரசியலமைப்பின் தெளிவற்ற வார்த்தை பிரயோகங்கள் திருத்தப்படும் வரையில் 13 ஐ திறம்பட அமுல்படுத்துவது சாத்தியமில்லை

மூன்று கட்டங்களாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது நடைமுறைச் சாத்தியமானதாக இருக்குமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ள எழுத்துமூல ஆவணத்திலேயே, இவ்வாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார். அரசியலமைப்பில் உள்ள தெளிவற்ற வார்த்தைப் பிரயோகங்களால் உருவாகின்ற சிக்கல்கள் நீக்கப்படாவிடின், 13 ஆவது திருத்தச் சட்டத்தை திறம்பட அமுல்படுத்துவது சாத்தியமில்லை. இது, கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலான மாகாணசபை முறைமையின் அனுபவமாக இருப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா … Read more

வருமானம் ஈட்டும் போது செலுத்தும் வரி என்பது வரையறையை மீறி வருமானம்

வருமானம் ஈட்டும் போது செலுத்தும் வரி என்பது ,வரையறையை மீறி வருமானம் ஈட்டும் நபர்களால் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரியாகும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். இந்த வரியை அரச மற்றும் அரச சார்ப்பு நிறுவனங்களால் செலுத்தும் நடவடிக்கையை இடைநிறுத்தவுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான சுற்றுநிரூபம் இந்த வாரத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவித் அவர் , எதிர்காலத்தில் இதுதொடர்பான முறைகேடுகளுக்கு சந்தர்ப்பம் அளிக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.

இலங்கையை எடுத்துக்காட்டி ஜனாதிபதி வெளியிட்ட கடும் கண்டனம்

பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் இடம்பெற்றுவரும் அண்மைய வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் தாம் மிகுந்த கவலையடைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரசியலமைப்புக்கு முரணான வழிமுறைகள் மூலம் ஜனநாயகக் கட்டமைப்புகளைத் தூக்கி எறிவதற்கான குழுக்களின் இதே போன்ற முயற்சிகளை இலங்கையும் வெகுகாலத்திற்கு முன்பு அனுபவித்தது. ரணில் கண்டனம்  இத்தகைய விரோதங்கள் கண்டிக்கப்படுகின்றன. மேலும் இந்த மோதல் நேரத்தில் பிரேசில் ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் மக்களுடன் நாங்கள் ஒன்றித்து நிற்கிறோம். ஜனநாயகம் மற்றும் அதன் நிறுவனங்கள் என்பன அனைத்து குடிமக்களால் … Read more

வெளிநாட்டு ஆக்கிரமிப்பினால் நாடு எதிர்கொண்டுள்ள நிலை குறித்து அமைச்சர் பந்துல குணவர்தன …

வெளிநாட்டு ஆக்கிரமிப்பு காரணமாக, நாட்டில் ஈடு கொடுக்க முடியாத பொருளாதார கட்டமைப்பு உருவானதாக வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 75 ஆவது சுதந்திர தினத்திற்கு அமைவாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (09) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டபோதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார். பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு தெளிவுப்படுத்தும் விடயங்கள் இந்த நிகழ்வின் போது இடம்பெற்றன. நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்க வேண்டியவர்கள் மாணவர் சமுதாயமாகும். மாணவர்கள் மத்தியில் கல்வி ஆற்றல் தவிர வேறு … Read more

இலங்கையின் வனப்பகுதி 16% ஆக குறைந்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை – வனப் பாதுகாப்பு ஜெனரல்

இலங்கையின் வனப்பகுதி 16% ஆக குறைந்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை என வனப் பாதுகாப்பு திணைக்கள ஜெனரல் கே.எம்.ஏ. பண்டார தெரிவித்துள்ளார். குறித்த ஊடகச் செய்திகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளதுடன், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது வனப்பாதுகாப்பு திணைக்கள ஜெனரல் இதனை வலியுறுத்தியுள்ளார். ஐந்து வருடங்களுக்கு ஒருமுறையே வனப்பரப்பு குறித்து மதிப்பீடு செய்யப்படுவதுடன் 2020 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நிறைவடையவுள்ளது. … Read more

கணக்காய்வாளர் நாயகத்துக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய கால அவகாசம்!

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து சரியான நேரத்தில் உதவி கிடைக்காமை உட்பட தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமான விடயங்களை விசாரித்து கணக்காய்வு அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக கணக்காய்வாளர் நாயகத்துக்கு மார்ச் 15 ஆம் திகதி வரை உயர்நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியது. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட 2 அடிப்படை உரிமைகள் மீறல் மனுக்கள் நேற்று (09) பரிசீலினைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. கால அவகாசம்  சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து … Read more

செனகல் நாட்டில் பஸ் விபத்து – 40 பயணிகள் உயிரிழப்பு

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான செனகல் நாட்டில் காப்ரீன் Kaffrine பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் நெடுஞ்சாலையில் எதிரே வந்த மற்றொரு பஸ் மீது மோதி இந்த விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிமை இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் 2 பஸ்களும் பலத்த சேதமடைந்த நிலையில், இதில் பயணித்த 40 பயணிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 87 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். … Read more

கடவத்தை பல்வகை போக்குவரத்து நிலையம்

Ø  அனைத்து நெடுஞ்சாலைகளும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ள கடவத்தை நகரம் பல்வகை போக்குவரத்து மையமாக உருவாக்கப்படும்… Ø  கடவத்தை பல்வகை போக்குவரத்து நிலையம் 377 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு  விரைவில் மக்கள் வசமாகும்… Ø  25 பேருந்துகளை நிறுத்தக்கூடிய பேருந்து முனையத்தில் அலுவலக வாகனங்களை  நிறுத்தக்கூடிய வாகன நிறுத்துமிடம்… Ø  ஒரு நவநாகரீக உணவகம் மற்றும் சுரங்கப்பாதை… அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளும் ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்படுகின்ற கடவத்தை நகரம் பல்வகைப் போக்குவரத்து மையமாக அபிவிருத்தி செய்யப்படுவதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு முடிவெடுத்துள்ளது. அந்த திட்டத்தின் … Read more

மின்கட்டண அதிகரிப்பு! அமைச்சரவை வழங்கியுள்ள அனுமதி

மின்சாரக் கட்டணங்களுக்கான செலவுச் சீர்திருத்தத்துடன் கூடிய விலைச் சூத்திரத்தை தயாரிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை  அனுமதி இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், உரிய விலைச் சூத்திரத்திற்கான முன்மொழிவை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த பின்னர், இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது. Source link