பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் 6 பேர் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்

குவைட்டின் ஈரான் எல்லைக்கு அருகாமையில் உள்ள பாலைவனத்தில் ஒரு பண்ணையில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 இலங்கையர்கள் அதிலிருந்து தப்பித்து இன்று (09) நாட்டை வந்தடைதுள்ளனர். அவர்களுக்கு உணவும், சம்பளமும் வழங்காமல், பலவந்தமாக பணியில் அமர்த்தப்பட்டதாக பாதிக்கப்பட்டோர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு நாட்டுக்கு திரும்பியவர்கள். திருகோணமலை மற்றும் கிண்ணியா பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் கிண்ணியா பிரதேசத்தில் உள்ள சட்ட விரோத முகவர் ஒருவரின் ஊடாக குவைட் நாட்டிற்கு வெளிநாட்டு வேலைக்காகச் சென்றுள்ளனர். நாட்டை வந்தடைந்த அந்த … Read more

வருமான வரி! ரத்து செய்யப்படும் நடவடிக்கை : விரைவில் சுற்றுநிரூபம்

வருமானம் ஈட்டும் போது செலுத்தப்பட வேண்டிய வரி, அரச, அரச அனுசரனை பெற்ற நிறுவனங்களின் ஊடாக செலுத்தும் நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றுநிரூபம் இந்த வாரத்துக்குள் வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய  தெரிவித்துள்ளார்.  முறைக்கேடான விடயங்களுக்கு இடமளிக்க முடியாது வருமானம் ஈட்டும் போது செலுத்தப்பட வேண்டிய வரி என்பது குறிப்பிட்ட தொகைக்கும் அதிகமாக வருமானம் ஈட்டும் போது செலுத்தப்பட வேண்டிய வரியாகும். ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிக வருமானம் … Read more

பெப்ரவரி மாத விடுமுறையை ,குறைந்த செலவில் கழிப்பதற்கு சிறந்த நாடு இலங்கை

பெப்ரவரி மாத விடுமுறையை ,குறைந்த செலவில் கழிப்பதற்கு சிறந்த நாடு இலங்கை  என்று ஐக்கிய இராச்சியத்தின் ஐ நியூஸ் இணையத்தளம் என்ற சுட்டிக் காட்டியுள்ளது. வெளிநாடுகளில் விடுமுறையை கழிப்பதற்கு எதிர்பார்த்துள்ள சுற்றுலாப் பயணிகளுக்காக, இந்த வருடத்தின் 12 மாதங்களிலும், பெருந்தொகையை செலவு செய்யாமல் குறைந்த செலவில் சிறந்த சேவையைப் பெற்றுக் கொள்ளக் கூடிய 12 நாடுகளின் பெயர்களை ஐ நியூஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது. இலங்கையின் 75வது சுதந்திர தினம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி கொண்டாடப்பட இருப்பதால், … Read more

அதிஷ்டம் கிட்டவுள்ள மூன்று ராசிக்காரர்கள்: அதிலும் கும்ப ராசிக்காரர்களுக்கு – இன்றைய ராசிபலன் (video)

நாளொன்றுக்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு நடந்துக்கொள்ள நினைத்த காரியங்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசிபலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சரியாக முடிவு செய்தால் வெற்றி நிச்சயமாகும். இந்த நிலையில் இன்றைய தினம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் கிட்டவுள்ள என்பதை பார்க்கலாம். உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்துக்கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW … Read more

புத்தல – கதிர்காமம் வீதியில் யானைகள்:தடுக்க நடமாடும் வாகன பாதுகாப்பு சேவை

புத்தல – கதிர்காமம் வீதியில் காட்டு யானைகளின் தாக்குதல் காரணமாக வாகனங்கள் விபத்துக்குள்ளாவதை ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக காணக்கூடியதாக உள்ளதாக விவசாய வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நிலைமையை தடுப்பதற்காக குறுகிய காலத்திற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு  அமைச்சர் மஹிந்த அமரவீர அமைச்சின் பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனை வழங்கியுள்ளார். இதற்கமைவாக நடமாடும் பாதுகாப்பு வாகன சேவையை புத்தல கதிர்காமம் வீதியில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு இலவச எரிபொருள் விநியோகம்

சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கியுள்ள எரிபொருள் கையிருப்பை , நெற் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு இலவசமாக பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக கமத்தொழில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதியின் கோரிக்கைக்கு இணங்க, நாட்டில் விவசாய மற்றும் மீன்பிடித் துறைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, 10.6 மில்லியன் லீற்றர் எரிபொருள் சீன அரசாங்கம் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இந்த எரிபொருள் கையிருப்பை நெற் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு, இன்று (09) முதல் இலவசமாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் … Read more

இலவச டீசல் விநியோகம் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு

சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட டீசல் தொகை இன்று முதல் விநியோகிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த டீசல் நெல் விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் என விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது. சீன அரசாங்கம் 10.06 மில்லியன் லீற்றர் டீசலை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க, நாட்டில் விவசாயம் மற்றும் மீன்பிடியில் ஈடுபடும் மக்களுக்காக இந்த டீசல் வழங்கப்பட்டுள்ளது. இலவச எரிபொருள் விநியோகம் இந்த நிலையில் இந்த விடயம் தொடர்பில் விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஏ.எம்.எச்.எல்.அபேரத்ன … Read more

இடைவிலகல் மாணவர்களை வகுப்புகளில் அனுமதிப்பதில் புதிய முறை

பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதில்  புதிய முறையை அறிமுகப்படுத்த  அமைச்சு திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 2 முதல் 5ஆம் வகுப்பு வரையிலும், 6 முதல் 11ஆம் வகுப்பு வரையிலும் அமுலுக்கு வரும் இத்திட்டம், ஒரு மாதத்திற்குள்நடைமுறைப்படுத்தப்படும். இதன்படி, மாணவர்களை உள்வாங்குவதற்கு பெற்றோர்கள் விண்ணப்பிக்கும் வாய்ப்பை வழங்கும் வகையில், அடுத்த தவணை முதல், புதிய முறை நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் கூறினார் புதிய திட்டத்தின் கீழ், மாகாண பாடசாலைகள் மற்றும் தேசிய பாடசாலைகளுக்கு இரண்டு … Read more