மீண்டும் சமர்ப்பிக்கப்படவுள்ள மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான அமைச்சரவை பத்திரம்

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது குறித்து அமைச்சரவை பத்திரம் இன்றைய தினம் மீண்டும் சமர்ப்பிக்கப்பட உள்ளது. மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இந்த அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்க உள்ளார். இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் மின்சாரக் கட்டண அதிகரிப்பு குறித்த அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார். அமைச்சரவை பத்திரம் தொடர்பான தீர்மானம் இந்த அமைச்சரவை பத்திரம் குறித்த தீர்மானத்தை ஒத்திவைப்பதாக கடந்த இரு சந்தர்ப்பங்களிலும் தீர்மானிக்கப்பட்டது. இன்றைய தினம் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டாலும் மீண்டும் இது குறித்த … Read more

நாட்டில் 47000 தாதியர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை! அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தாதியர் சேவையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சு முன்வராமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட அகில இலங்கை தாதியர் சங்கம் தீர்மானித்துள்ளது. கொழும்பு பொது நூலகத்தில் இன்று (8) நடைபெற்ற விசேட கூட்டத்தில் இலங்கை தாதியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எச்எம்எஸ்பி மடிவத்த இத் தகவலை தெரிவித்துள்ளார். மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் எதிர்வரும் 12ஆம் திகதி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  தாதியர் தொழிலில் ஈடுபட்டுள்ள … Read more

“வொய்ஸ் ஒப் குளோபல் சௌத்” மாநாடு

புதியதும் தனித்துவமானதுமான ஓர் முயற்சியாக 2023 ஜனவரி 12-13 ஆகிய திகதிகளில் இந்தியா விசேட மெய்நிகர் மாநாடொன்றை நடத்தவுள்ளது. உலகின் தென்பகுதி நாடுகளின் ‘”ஒருமித்த குரல், ஒருமித்த நோக்கம்”  என்ற தொனிப்பொருளுடனான இந்த ‘Voice of Global South’’  மாநாடு, உலகளாவிய தென்பகுதி நாடுகள் தமது முன்னுரிமைகள் மற்றும் நோக்குநிலையினை பொதுவான ஒரு தளத்தில் பகிர்வதற்கு சந்தர்ப்பம் வழங்குகின்றது. இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக உலகளாவிய ரீதியில் 120 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2.      பிரதமர் ஸ்ரீ … Read more

தாய்லாந்து பிரதானிகள் இலங்கைக்கு வருகை

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான உத்தேச சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக தாய்லாந்து அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழு இன்று (08) முற்பகல் நாட்டை வந்தடைந்தது. தாய்லாந்தின் வர்த்தக பேச்சுவார்த்தைகள் திணைக்கப் பணிப்பாளர் நாயகம் திருமதி. அவுரமோன் சுப்தாவிதும் (Ms. Auramon Supthaweethum, Director General of the Department of Trade Negotiations) தலைமையிலான இந்தக் குழுவில் 26 பிரதிநிதிகள் உள்ளடங்குகின்றனர். இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான உத்தேச சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான … Read more

இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தைக்காக தாய்லாந்து பிரதானிகள் இலங்கைக்கு வருகை

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான உத்தேச சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக தாய்லாந்து அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழு இன்று (08) முற்பகல் நாட்டை வந்தடைந்தது. தாய்லாந்தின் வர்த்தக பேச்சுவார்த்தைகள் திணைக்கப் பணிப்பாளர் நாயகம் திருமதி. அவுரமோன் சுப்தாவிதும் (Ms. Auramon Supthaweethum, Director General of the Department of Trade Negotiations) தலைமையிலான இந்தக் குழுவில் 26 பிரதிநிதிகள் உள்ளடங்குகின்றனர். இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான உத்தேச சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான … Read more

வடக்கு ரயில் பாதை சீரமைப்புக்கான அபிவிருத்தித் திட்டம் இன்று ஆரம்பம்

வடக்கு ரயில் பாதையில்  மகோ – ஓமந்தை வரையான  புனரமைப்பு செய்யும் நடவடிக்கைகள் இன்று (08) ஆரம்பமானது. போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோரின் தலைமையில் சர்வ மத அனுஷ்டானங்களுக்கு முன்னுரிமை அளித்து, மதவாச்சி புகையிரத நிலையத்துக்கு அருகாமையில் சுப நேரத்தில் ஆரம்பமானது.. அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அங்கு உரையாற்றுகையில் ,வடக்கு கிழக்கு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இந்தியாவின் நிதி உதவியின் கீழ் ஓமந்தையில் இருந்து … Read more

இந்திய அணி தொடரை கைப்பற்றியது

இலங்கைக்கு எதிரான 3ஆவது மற்றும் இறுதியுமான. T20 போட்டியில் இலங்கை அணியை 91 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 228 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அதிரடியாக துடுப்பெடுத்தாடிய சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழக்காது 51 பந்துகளில் 112 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டார். 9 ஆறு ஓட்டங்கள் மற்றும் 7 நான்கு … Read more

இலங்கை மத்திய வங்கி துணைநில் வசதிகள் மீது மிகையாக தங்கியிருப்பதை குறைப்பதற்கான வழிமுறைகளை அறிமுகப்படுத்துகின்றது

2022இன் முதலரைப்பகுதியில் கணிசமானளவு உயர்வாகவிருந்த உள்நாட்டு பணச் சந்தையின் திரவத்தன்மைப் பற்றாக்குறையானது 2022இன் பிற்பகுதியில் வீழ்ச்சியடைந்தது. எனினும், பணச் சந்தை திரவத்தன்மை நிலைமைகளில் முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், பகுதியளவில் உள்நாட்டு பணச் சந்தைகளின் செயற்பாடு குறைவாக இருந்ததன் காரணமாக சந்தை வட்டி வீதங்கள் தொடர்ந்தும் உயர்வாக காணப்பட்டது. அதேவேளை, பல்வேறு உரிமம்பெற்ற வங்கிகள் அவற்றின் கட்டமைப்புசார் திரவத்தன்மைத் தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கான சந்தை அடிப்படையிலான நிதியிடல் தெரிவுகளைக் கருத்திற்கொள்ளாது மத்திய வங்கியின் திறந்த சந்தைத் தொழிற்பாடுகளின் கீழ் ஓரிரவு … Read more

மீண்டும் “கொவிட் தொற்று” குறித்து எச்சரிக்கை

மீண்டும் கொவிட் தொற்று நிலைமை ஏற்பட்டால் அதனை முன்னர் போன்று கட்டுப்படுத்துவது சிரமமாக அமையும் என்று பொது மக்கள் சுகாதார பரிசோதர்களின் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். தற்பொழுது பல நாடுகளில் கொவிட் தொற்றுக்குள்ளான நோயாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.இலங்கையில் மீண்டும் கொவிட் தொற்று அலை ஏற்பட்டால் அது மிக மோசமானதாக இருக்கக்கூடும்  கொழும்பில் (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். இலங்கையிலும் எதிர்காலத்தில் கொவிட் தொற்று நிலை ஏற்படக்கூடிய … Read more