புதிய பாடசாலை தவணை காலப்பகுதியில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள்

அரசாங்க பாடசாலை மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை அச்சிடும் பணி தற்போது இடம்பெற்றுவருவதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. 300 வகையான பாடப் புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன. எதிர்வரும் புதிய பாடசாலை தவணை காலப்பகுதியில் இந்த புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அரச அச்சக தலைமை பொறுப்பதிகாரி திருமதி கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

3,200 அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு சமாதான நீதவான் பதவி

அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு சமாதான நீதவான் பதவி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அறநெறி பாடசாலை ஆசிரியர் பொறுப்பில் பத்து வருட காலத்திற்கும் மேல் சேவை செய்தவர்களுக்கு இந்த பதவி வழங்கப்படவுள்ளது. மூவாயிரத்து 200 அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு சமாதான நீதவான் நியமனத்திற்கான கடிதம் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று நீதி ,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியல் யாப்பு மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு 20 குழுக்கள் கட்டுப்பணம்

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நேற்று (07) மாலைவரையில் 20 குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. இதுதொடர்பாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரட்நாயக்க தெரிவிக்கையில் . களுத்துறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 17 உள்ளுராட்சி மன்றங்களுக்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளன என்றார்.கண்டியில் இரண்டு சுயேட்சைக்குழுக்களும் பண்டாரவளை மாநகர சபைக்காக ஒரு சுயேட்சை குழுவும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. சுயேட்சைக்குழுக்காக ஒரு வேட்பாளருக்காக கட்டுபணமாக ஐயாயிரம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கட்சி வேட்பாளர் ஒருவருக்காக ஆயிரத்து 500 ரூபாய் … Read more

சட்டவிரோத குடியேற்ற மோசடியில் இருவர் கைது! கடற்படையினர் விடுத்துள்ள கோரிக்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சட்டவிரோத குடியேற்றம் தொடர்பாக போலியான உத்தரவாதங்களை வழங்கி பலரிடம் பணம் பெற்ற இரண்டு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர், இலங்கையின் காவல்துறையினருடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில்,  கடற்படை புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் ஜனவரி 04 ஆம் திகதி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  30 மற்றும் 41 வயதுடைய இரு நபர்களே இவ்வாறு நீர்கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.  மக்களே அவதானம்  இவர்கள், சிலாபம் மற்றும் கிளிநொச்சியை வசிப்பிடமாகக் … Read more

550 இலங்கையர்களுக்கு, அமெரிக்காவில் தொழில் வாய்ப்பு

550 இலங்கையர்களுக்கு ,அமெரிக்காவில் தொழில் வாய்ப்புக்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக வெஷிங்டன் நகரில் உள்ள இலங்கைத்தூதரகம் அறிவித்துள்ளது. இதற்கமைவாக இலங்கையில் பதிவு செய்யப்பட்ட 250 தாதியர்கள், 100 இரசாயன ஆய்வுகூடத் தொழில்நுட்பவியலாளர்கள், 200 தாதி உதவியாளர்கள் ஆகியோருக்கு அமெரிக்காவில் பணியாற்றுவதற்கான வாய்ப்புக் கிடைக்கும். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடாக இது பற்றிய மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இலவச வீடுகள் ஜூலை மாதம் வரை மட்டுமே

போராட்டகாரர்களின் தாக்குதல் காரணமாக வீடுகள் உட்பட சொத்துக்களை இழந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பத்தரமுல்லை வியத்புர வீடமைப்புத்  தொகுதியில் வழங்கப்பட்டுள்ள வீடுகளில் அவர்கள் எதிர்வரும் ஜூலை மாதம் வரை மாத்திரமே இலவசமாக தங்கியிருக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளை கொள்வனவு செய்த எம்.பிக்களுக்கு சந்தர்ப்பம் இதன் பின்னர், அந்த வீடுகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தினால், வீடுகளுக்கான வாடகை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அறவிடப்படும். வியத்புர வீடமைப்பு தொகுதியில் உள்ள வீடொன்றின் மாத வாடகை சுமார் 70 … Read more

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை சிவப்பு சீனி

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை சிவப்பு சீனியை சுங்கப்பகுதி கைப்பற்றியுள்ளது. நாட்டில் சிவப்பு சீனியை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சீனி வெள்ளை சீனி என்ற போர்வையில் இறக்குமதி செய்யப்ட்டுள்ளது. 1200 மெற்றிக் தொன் சிவப்பு சீனியை வர்த்தகர் ஒருவர் இவ்வாறு இறக்குமதி செய்திருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். நாட்டில் சிவப்பு சீனி உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் இதனை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. சந்தையில் வெள்ளை … Read more

இலங்கை -இந்திய அணிகளுக்கிடையிலான T20 கிரிக்கெட்  போட்டித்தொடரின் இறுதி போட்டி

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான T20 கிரிக்கெட்  போட்டித்தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்திய குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று இரவு 7.00 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது மூன்று போட்டிகள் கொண்ட  T20 தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்றது. புனேயில் நடந்த 2-வது போட்டியில் 16 ரன் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது. இந்திய அணி கடைசியாக விளையாடிய 10 இருபது … Read more

திமிங்கலம் அழகிய குட்டியை ஈன்ற காட்சி

கலிபோர்னியாவில் உள்ள டனா பொயிண்ட் என்ற பகுதியில் ,சுமார் 30 அடி சாம்பல் நிற திமிங்கலம் ஒன்று அழகிய குட்டியை ஈன்றுள்ளது. சமீபத்தில் இந்த பகுதிக்கு படகு மூலம் சுற்றுலா சென்றிருந்த பயணிகள் அந்த திமிங்கலத்தை ஆர்வமுடன் பார்த்து கொண்டிருந்தபோது அந்த திமிங்கலம் திடீரென குட்டியை ஈன்றுள்ளது அந்த சாம்பல் திமிங்கலம் குட்டியை ஈன்ற பின்னர் அதனை தன் முதுகின் மேல் ஏற்றிக்கொண்டும் அரவணைத்த வண்ணமும் உலாவுகிறது.  இந்த சுற்றுலாப் பயணிகள் இருந்த படகின் அருகே அழைத்து … Read more