ஜனாதிபதிக்கும் தமிழ் கட்சித் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் கருத்து

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஈடேற்றுவதற்கான  சாத்தியமான வழிமுறைகள் தொடர்பாக, நாடாளுமன்றத்தினை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிப் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சர்களுக்கும்  இடையில் நேற்று (05.01 2023) இடம்பெற்ற சந்திப்பில்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், காணி விடுவிப்பு மற்றும் அரசியல் கைதிகள் விடுதலை போன்ற விடயங்கள் நல்லெண்ண செயற்பாடுகளாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.   அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை  முழுமையாக அமுல்ப்படுத்துவதற்கு உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் … Read more

இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இருத்தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள உள்ளதாக தெரியவருகிறது. கடந்த ஜூலை மாதம் இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் நடததப்பட்ட வாக்கெடுப்பில் தெரிவு செய்யப்பட்ட பின்னர், இந்திய வெளிவிவகார அமைச்சரின் முதலாவது இலங்கை விஜயம் இதுவாகும். எனினும் அவர் இலங்கைக்கு விஜயம் செய்யும் திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இலங்கைக்கு நான்கு பில்லியன் டொலர்களை வழங்கிய இந்தியா பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் அத்தியவசிய … Read more

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ''ஸ்மார்ட்  செயலகம்''   தொடர்பான  அறிவூட்டல் பயிற்சி நெறி!!

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின்  ஸ்மார்ட்  செயலகம் எண்ணக்கருவிலான இணையத்தள சேவையை எவ்வாறு பயன்படுத்துவது தொடர்பாக தெளிவுபடுத்தும் பயிற்சி நிகழ்வு  (05) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.  இப்பயிற்சி நெறி மாவட்ட செயலகத்தின் உதவி அரசாங்க அதிபர் ஆறுமுகம் நவேஷ்வரன்  தலைமையிலும் தகவல் தொழில்நுட்ப உத்தியோகத்தர் லக்சிகா தீசன் ஏற்பாட்டிலும் நடைபெற்றது.    இதன்போது இவ்வருடத்திலிருந்து (2023) ஸ்மார்ட்  செயலகம் ஊடாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள இருப்பு கணக்கெடுப்பு, கேட்போர் கூட முன்பதிவு மற்றும் தபால் முகாமைத்துவ முறைமை என்பன தொடர்பாக மாவட்ட … Read more

வெலிக்கடை பிரதேச சபை தவிசாளருக்கு சில மணித்தியால சிறை தண்டனை

வெலிக்கடை பிரதேச சபை தவிசாளர் இன்று (05) சில மணித்தியாலயங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் ஆசனத்தில் அமர்ந்திருந்தமை தொடர்பிலேயே அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டது. தவிசாளர் நீதிமன்றத்தில் உள்ள சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டிருந்தார். பிரதேச சபையின் இலத்திரனியல் மற்றும் வேறு இருவர் தொடர்பாக நீதிமன்ற விசாரணை இன்று (05) இடம்பெற்றது. இதற்காக தவிசாளர் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். சட்டவிரோதமாக மின்சாரத்தை பெற்றிருந்த சம்பவம் தொடர்பில் மூவர் இலங்கை மின்சார சபையினால் கைது செய்யப்பட்டிருந்தனர். ருஹூணு கேத்த … Read more

பணத்தை செலுத்தி முடித்தவர்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் வீட்டுப் பத்திரம்

கொழும்பு நகர மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் கொழும்பு நகரம் மற்றும் கொலன்னாவ நகர சபைகளை மையப்படுத்தி செய்யப்பட்டுள்ள வீட்டு வேலைத் திட்டங்கள் 24 மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட வீடுகளுக்கான திட்டத்தின் மூலம் கட்டப்பட்ட 2 வீடுகள் ஆகியவற்றுக்கு வீட்டு உரிமைப் பத்திரங்களை வழங்குவதை அவசரப்படுத்துமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கினார். இதன்படி, இந்த வருட இறுதிக்குள் உரிமைப் பத்திரங்களை வழங்கும் நடவடிக்கையைப் பூர்த்தி … Read more

தேசிய சரணாலயங்களைப் பார்வையிடுவதற்கான கட்டணத்தை டொலர்களில் செலுத்த வசதி

யால தேசிய சரணாலயம் உட்பட இலங்கையில் உள்ள தேசிய சரணாலயங்களை பார்வையிட வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதற்கான கட்டணத்தை டொலர்களில் செலுத்தும் வசதிகளை வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சு ஏற்படுத்தியுள்ளது. நாடு டொலர்களை பெற்றுக் கொள்ளும் நோக்கில் அந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார். அதனடிப்படையில், இது தொடர்பான வேலைத்திட்டம் இம்மாதத்திற்குள் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் முதற்கட்டமாக யால தேசிய சரணாலயத்திற்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கான அனுமதிக்கான … Read more

இலங்கையில் உள்ள வறிய குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் மகிழ்ச்சியான அறிவிப்பு

அரசாங்கத்தின் சமூக நலன்புரி சபையின் மூலம் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ள குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான செயற்றிட்டத்திற்கு இதுவரை 37 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. இந்த விண்ணப்பங்களுள் உள்ளடக்கப்படாத மேலும் நிவாரணம் பெறுவதற்கு தகைமையுடையவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என சமூக நலன்புரி இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடை க்கான வினாக்கள் வேளையில் மிலான் ஜயதிலக்க எம்.பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.   … Read more