களனிவெளி ரயில் பாதையினூடாக 'சீதாவக ஒடிஸி'சேவை

களனிவெளி ரயில் பாதையினூடாக ‘சீதாவக ஒடிஸி’ என்ற பெயரில் புதிய ரயில் சேவையை முன்னெடுப்பதற்கு புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் கொழும்புப் பிரதேசத்தில் முக்கிய இடங்களை இலகுவாக சென்றடையக் கூடிய வகையில் இந்த ரயில் சேவை இடம்பெறும். சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இந்த புதிய ரயில் சேவை இடம்பெறும். இந்த ரயில், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து வக புகையிரத நிலையம் வரை பயணிக்கும். இது … Read more

சீனாவை அச்சுறுத்தும் கோவிட் திரிபு இலங்கையில்! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கையில் கோவிட் தொற்று பரவல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது சீனாவில் பரவி வரும் கோவிட் திரிபானது இலங்கையில் பல மாதங்களாக காணப்படுவதாக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசரியர் நீலிகா மாலவிகே தெரிவித்துள்ளார். இலங்கையில் காணப்படும் திரிபு சீனாவில் பெருமளவு மக்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கோவிட் திரிபுகள் இலங்கையிலும் உலகிலும் பல மாதங்களாக காணப்படுகின்றன. சீனாவிலிருந்து கிடைத்த தரவுகளை ஆய்வு செய்த வேளை இது உறுதியாகியுள்ளது என பேராசிரியர்  மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.   Source link

கடற்றொழில் துறையை மேம்படுத்துவதற்கு அவுஸ்திரேலியா உதவி

இந்து சமூத்திரத்தின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக இலங்கைக்கு வழங்கும் ஒத்துழைப்புக்களுக்கு பிரதமர் தினேஷ் குணவர்த்தன ,அவுஸ்திரேலியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல்ஸ் ஸ்டீவனுடனான சந்திப்பின் போது பிரதமர் இதனை குறிப்பிட்டார்.. கடற்றொழில் சார்ந்த தொலைத்தொடர்பாடல் துறையை வலுப்படுத்துவதற்கென ஜிபிஎஸ் தொழில்நுட்ப உதவியை வழங்குமாறும் பிரதமர் கோரிக்கை விடுத்தார். மருந்து வகைகள், அத்தியாவசிய பொருட்கள், இரு நாடுகளுக்கும் இடையிலான பல்கலைக்கழக முறை பற்றியும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பொருளாதாரத்தைப் பலப்படுத்தி, உணவுப் பாதுகாப்பை உருவாக்கி பாராளுமன்ற ஜனநாயகத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்

நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தி, உணவுப் பாதுகாப்பை உருவாக்கி பாராளுமன்ற ஜனநாயகத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் – புதிய ஆண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வில் அரசாங்கம் மற்றும் பாராளுமன்றத்தின் சார்பில் அனைத்துக் கட்சிகளிடம் அழைப்பு விடுத்த பிரதமர் உணவுப் பாதுகாப்பு மற்றும் கிராமியப் பொருளாதார மறுமலர்ச்சிக்கு முன்னுரிமை அளித்து ஏனைய சகல துறைகளினதும் முன்னேற்றத்துக்காக செயற்பட அனைவரும் ஒன்றிணையுமாறு பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்த்தன அரசாங்கம் மற்றும் பாராளுமன்றம் சார்பில் சகல கட்சிகளிடமும் கோரிக்கை விடுத்தார். மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை … Read more

ரின் மீன் உற்பத்தியை விருத்தி செய்து ஏற்றுமதியை அதரிகரிக்க விரிவான நடவடிக்கை  – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு

ரின் மீன் உற்பத்தியின் மூலம், தேசிய மட்டத்தில் நுகர்வுத் தேவையினை முழுமையாக பூர்த்தி செய்து கொள்வதற்கும், ரின் மீன் ஏற்றுமதித் துறையினை மேலும் பலப்படுத்துவதற்கும் அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதுதொடர்பாக கடற்றொழில் அமைச்சினால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் அவர்களின் எழுத்து மூலமான கேள்விக்கு இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் பதில் அளிக்கும்போதே கடற்றொழில் மேற்கண்டாவாறு தெரிவித்தார். மேலும்,                                  “இத்துறை தொடர்பில் அக்கறை … Read more

விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக  மாலதி பரசுராமன் நியமனம்

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் விவசாய திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக மாலதி பரசுராமன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை  (02)) திகதி தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட இவர், வரலாற்றில் முதன்முதலாக நியமிக்கப்பட்ட தமிழ் பெண் விவசாய ஆர்வலராக மாலதி பரசுராமன் பதிவாகியுள்ளதாக விவசாய அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   விவசாய அமைச்சின் விவசாய தொழில்நுட்ப பிரிவின் மேலதிக செயலாளராக அவர் இதற்கு முன்னர் கடமையாற்றினார். கண்ணொருவ விவசாய ஆராய்ச்சி மையத்தில் A9 ரகம், HOB-2 எனும் முதலாவது … Read more

பாராளுமன்றத்தில் பதற்ற நிலை

உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து இன்று (05) பாராளுமன்றத்தில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இதனால் பாராளுமன்றத்தில் பதற்ற நிலை ஏற்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பிரேமநாத் சீ தொலவத்த தனிப்பட்ட பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்தில் முன்வைத்ததை தொடர்ந்து பாராளுமன்றத்தில் இந்த பதற்ற நிலை ஏற்பட்டது. இருப்பினும் எதிர்க்கட்சியின் பிரதம கொரடா பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இந்த பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதன்போது பிரதமர் தினேஸ் குணவர்தன இதுதொடர்பில் கருத்து தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் தலைவர் … Read more

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன களுத்துறையில் வேட்புமனு தாக்கல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான நடவடிக்கைகளை இன்று (05) களுத்துறை மாவட்டத்தில் ஆரம்பித்தது. களுத்துறை மாவட்ட செயலகத்தில் அந்த கட்சி எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக வேட்பு மனுவை தாக்கல் செய்தது. கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தலைமையில் குழு உறுப்பினர்கள் இந்த வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கலந்து கொண்டார்.