இலங்கை
இலங்கைக்கு கடன் வழங்குனர் தொடர்பில் முன்னேற்றம்: இலங்கை மத்திய வங்கி
இலங்கைக்கு கடன்கொடுத்தோருடன் மேற்கொள்ளப்படும் தொடர்பு விடயத்தில் தற்போது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இன்று (05.01.2023) இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு முக்கியமான ஒப்பந்தம் 2023 ஆம் ஆண்டின் ஆரம்பக் காலப்பகுதியில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்ப்பதாக வங்கி கூறியுள்ளது. கட்டமைப்பு ரீதியான பொருளாதார தடை பல தசாப்தங்களாக பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் நிலவிய கட்டமைப்பு ரீதியான பொருளாதார தடைகளும், பொருளாதார அதிர்ச்சிகளுமே இன்றைய நிலைக்கு காரணம் என்று மத்திய வங்கி … Read more
இலங்கை வானொலி ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு இன்றுடன் 56 வருடங்கள்
இலங்கை வானொலி ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமாக மாற்றப்பட்டு இன்றுடன் 56 வருடங்கள் நிறைவு பெறுகின்றன. இதனை முன்னிட்டு, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைமையகமும், பிராந்திய சேவைகளும் சர்வமத பிரார்த்தனைகளை ஒழுங்கு செய்திருந்தன. மலையக சேவை முறையே கட்டுக்கலை ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்திலும், கண்டி தக்கியா பெரிய பள்ளிவாசலிலும், கண்டி புனித அந்தோனியார் தேவாலயத்திலும் பிரார்த்தனை நிகழ்ச்சிகளை நடத்தியது. ஸ்ரீசெல்வ விநாயகர் ஆலய குருக்கள் சமயச் செல்வர் லகுதர சர்மா தலைமையில் பிரார்த்தனைகள் இடம்பெற்றன. மிகவும் சிறப்பான வரலாற்றைக் கொண்ட இலங்கை வானொலி மென்மேலும் பரந்த அளவில் சேவையாற்ற இறையாசியை வேண்டி நிற்பதாக அவர் தெரிவித்தார். கண்டி தக்கியா பெரிய பள்ளிவாசலில் துஆ பிரார்த்தனைகளுக்குத் தலைமை தாங்கிய பஸ்லுல்லா ரஹம்மான் மௌலவி, சகல மதக்குழுவினருக்கும் சமவாய்ப்பு அளித்து, இலங்கை வானொலி ஆற்றும் சேவைகள் தொடர வேண்டும் என்றார். கண்டி புனித அந்தோனியார் தேவாலயத்தின் தலைமை மதகுரு வணக்கத்திற்குரிய பிதா ஏப்ரஹாம் நேரியோ அடிகளார் தமது பிரார்த்தனையில், தற்போதைய இக்கட்டான காலகட்டத்தில் தேசிய வானொலியின் சேவை முன்னெப்போதையும் விடவும் கூடுதலாக அவசியப்படுகிறது என்றார்.
தங்க ஆபரண இறக்குமதியில் கட்டுப்பாடு! நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
22 கரட்டுக்கு மேற்பட்ட தங்கத்தை ஆபரணங்களாக இறக்குமதி செய்வதில் கட்டுப்பாடு கொண்டுவரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இதனை கட்டுப்படுத்தும் வகையிலான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தங்க கடத்தல் இந்த விடயத்தை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்துள்ளார். அத்துடன் இந்த நடவடிக்கையானது தங்க கடத்தலை தடுக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். Source link
இன்றைய (05), வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட (05.01.2023) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு: இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட (05.01.2023) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:
லிட்ரோ எரிவாயுவின் புதிய விலை குறித்த அறிவிப்பு
இலங்கை லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று (05) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிவாயு விலையை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கமைவாக, லிட்ரோ எரிவாயுவின் மறுசீரமைப்பு செய்யப்பட்ட விலைகள் பின்வருமாறு, 12.5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 201 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இதன் புதிய விலை 4,409/= ரூபாவாகும். 5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 80 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இதன் புதிய விலை 1,770/= … Read more
சில இடங்களில் 50 மி.மீ மழைவீழ்ச்சி
இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு ,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 ஜனவரி05ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 ஜனவரி 05ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது தற்போது நிலவும்வரட்சியான வானிலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவாமாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்தமழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மாகாணத்திலும் … Read more
ஏமாற்றத்துடன் மனைவியுடன் நாடு திரும்பிய கோட்டாபய
டுபாய் சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது குழுவினர் சற்று முன்னர் நாடு திரும்பியுள்ளனர். அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குச் செல்லும் நம்பிக்கையுடன் அண்மையில் நாட்டிலிருந்து சென்றிருந்தவர் மீண்டும் இலங்கை வந்துள்ளார். எமிரேட்ஸ் விமானமான EK 605 இல் வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி, சிறப்பு விருந்தினர் முனையம் ஊடாக வெளியேறியதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. கோட்டாபய ராஜபக்ஷவுடன், அவரது மனைவி அயோம ராஜபக்ஷ, பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார மற்றும் மற்றுமொரு … Read more
அரசாங்க சேவை என்றால் 8 மணி முதல் 5 மணி தொழில் அல்ல – கிழக்கு மாகாண ஆளுநர்
நாட்டிலிருந்து தனக்குக் கிடைக்க வேண்டியது பற்றி மாத்திரம் நினைத்துக் கொண்டு போராட்டம் செய்வதற்குப் பதிலாக தன்னால் நாட்டிற்கு செய்ய வேண்டிய பொறுப்பை சரியாக மேற்கொண்டு நாட்டின் அபிவிருத்திக்கு நேரடிப் பங்களிப்பை வழங்கும் காலம் உருவாகியுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார். அரசாங்க ஊழியர்கள் என்றால் காலை 8 மணிக்கு அலுவலகத்திற்கு வந்து மாலை 5 மணிக்கு வீடு செல்லும் நபர்களாக நியமனம் பெறக் கூடாது என ஆளுநர் குறிப்பிட்டார். திருகோணமலையில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் … Read more
தேர்தலை விட விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்வதே முக்கியம் – விவசாய அமைச்சர்
உணவுப் பாதுகாப்புப் பிரச்சினை எதிர்நோக்கப்பட்டுள்ள இந்த வேளையில் தேர்தலை நடத்துவதிலும் பார்க்க விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்வதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையிடம் தாம் கோருவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு மத்தியில் உற்பத்தி செய்துள்ள நெல்லை அரசாங்கம் வழமை போன்று நியாயமான விலைக்கு கொள்வனவு செய்யும் என்ற எதிர்பார்ப்புடன் இருப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் ,அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு இவ்வாறு குறிப்பிட்டார்.