உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள்

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் ஜனவரி 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கமைவாக வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் 21ஆம் திகதி, நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையும்நிறைவடையும்.

மாணவர் விழிப்புணர்வு செயல்திட்டம்

சகல அரசாங்க பாடசாலைகளிலும் பிரதி புதன்கிழமைகளில் காலை 10 நிமிடங்கள் மாணவர் விழிப்புணர்வு செயல்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. புத்தாண்டிலிருந்து முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை தொடர்பான சுற்றுநிருபத்தை கல்வி அமைச்சு சகல மாகாண வலய கல்வி பணிப்பாளர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது. முதல் 12 புதன்கிழமைகளில் காலை 7.30 மணிமுதல் 7.40 மணி வரை இப் புதிய விழிப்புணர்வு செயற்திட்டம் இடம்பெறும். பத்து நிமிடங்களைக் கொண்டதாக “நிலையான தன்மையில் அமர்த்தல்” என்ற தொனிப் பொருளில் இந்த வேலைத்திட்டம் 12 புதன்கிழமைகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்களின் … Read more

திரு சிவகுமார் நடேசன் அவர்களுக்கு பிரவாசி பாரதிய சம்மான் விருது

எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. சிவகுமார் நடேசன் அவர்களை 2023ஆம் ஆண்டுக்கான பிரவாசி பாரதிய சம்மான் விருதுக்காக  (PBSA) இந்திய அரசாங்கம் தெரிவு செய்துள்ளது. இந்திய புலம்பெயர் சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்காக இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் அதி உயர் கௌரவமே பிரவாசி பாரதிய சம்மான் விருது என்பது குறிப்பிடத்தக்கது. 2023 ஜனவரி 8 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதிவரை இந்தூரில் நடைபெறும் 17ஆவது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டின்போது மாண்புமிகு இந்திய … Read more

ரணிலுக்காக மகிந்தவிடம் சிபாரிசு செய்யும் சம்பந்தன்

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு இன்று மாலை (04.01.2023) சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பந்தனின் கோரிக்கை தற்போதைய அரசியல் நிலைவரம் உட்பட்ட பல விடயங்கள் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன. இதன்போது எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் ஜனாதிபதி ரணிலின் முயற்சிகளுக்கு ஆதரவு தருமாறு சம்பந்தன் மகிந்தவிடம் கோரியதாகவும், மகிந்த அதற்கு சாதகமான பதிலை வழங்கியதாகவும் தெரியவருகிறது. Source link

புத்தாண்டில் ஆசி வேண்டி பாராளுமன்ற வளாகத்தில் போதி பூஜை

2023 புத்தாண்டில் ஆசி வேண்டி பாராளுமன்ற வளாகத்திலுள்ள ஜய மஹாபோதிக்கு அருகில் விசேட போதி பூஜை நிகழ்வு இன்று (04) முற்பகல் இடம்பெற்றது. பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற இந்த பூஜையை கொழும்பு, களுத்துறை பகுதிகளின் தலைமை தேரரும், கோட்டே சுனேத்ராராமாதிபதியுமான வணக்கத்துக்குரிய அலிக்கேவெல சீலானந்த தேரர் நடாத்தினார். பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற பணியாட்தொகுதி பிரதானியுமான குஷானி ரோஹனதீர, உதவிச் செயலாளர் நாயகம் டிகிரி கே. ஜயதிலக, பாராளுமன்ற திணைக்களங்களின் தலைவர்கள் … Read more

டேவிட் கமரூன் கொழும்பு துறைமுக நகரத்திற்கு விஜயம்

ஐக்கிய இராச்சியத்தின் முன்னாள் பிரதமரான டேவிட் கமரூன் அவர்கள், இலங்கைக்கு தனிப்பட்ட பயணம் ஒன்றை அண்மையில் மேற்கொண்டிருந்த போது, கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தித் திட்டத்தை நேரில் வருகை தந்து பார்வையிட்டுள்ளார்.   ஆணைக்குழு உறுப்பினர் ரியாஸ் மிகுலர் மற்றும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் சட்ட மற்றும் நிறுவன விவகாரங்களுக்கான பணிப்பாளர் விந்தியா வீரசேகர, CHEC Port City Colombo (Pvt) Ltd இன் முகாமைத்துவப் பணிப்பாளரான யாங் லூ ஆகியோருடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட திரு. … Read more

மாற்றத்திற்காக போராடியவர்களை தேர்தலுக்கு தயாராகுமாறு சாணக்கியன் அழைப்பு! (Photos)

மாற்றத்திற்காக போராடியவர்கள் அனைவரும் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார். உள்ளூராட்சி நிறுவனங்களின் வட்டார எல்லை நிர்ணயத்தை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையிலான தேசிய எல்லை நிர்ணய குழுவினை இன்று சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இவ்வாறு பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார். இதன்போது … Read more

ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளர் திருமதி கன்னி விக்னராஜா (Kanni Wignaraja) உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களைச் சந்தித்தது. நாட்டில் நிலவும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குவதற்கு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை பாராட்டிய உதவிப் பொதுச் செயலாளர், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகள் தொடரும் என்றும் உறுதியளித்தார். இலங்கையின் புதிய பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்து … Read more

2023 இற்கும் அதற்கு அப்பாலுக்குமான நாணய மற்றும் நிதியியல் துறைக் கொள்கைகள்

சுதந்திரத்திற்குப் பின்னரான பொருளாதாரத்தில் மிகவும் சவால்மிக்க ஆண்டாக 2022ஆம் ஆண்டினை இலங்கை எதிர்கொண்டது. 2019இல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள், 2020இல் கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் பரவல் மற்றும் 2021இல் அதன்பின்னரான செயற்பாடுகள் மீதான அதன் நீடித்த தாக்கம், பாரியளவிலான சென்மதி நிலுவை அழுத்தங்களுக்கு மத்தியில் 2022இல் சமூக பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி என்பன உள்ளடங்கலாக அண்மைய ஆண்டுகளில் ஏற்பட்ட தொடர்ச்சியான பொருளாதார அதிர்வுகள் காரணமாக தோற்றம்பெற்ற சவால்கள் முன்னெப்பொழுதுமில்லாத கொள்கைச் சமநிலைப்படுத்தல்களுடன் இணைந்து, பொருளாதார நடவடிக்கைகளைக் … Read more