பால் மற்றும் பால் உற்பத்திகளில் இலங்கையை தன்னிறைவு அடையச் செய்ய இந்தியாவின் ஒத்துழைப்பு

பால் மற்றும் பால் உற்பத்திகளில் இலங்கையை தன்னிறைவு அடையச் செய்வதற்கு இந்திய அரசாங்கம் உதவிகளை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் இன்று (04) ஜனாதிபதி அலுவலகத்தில் நடந்த கலந்துரையாடலில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையில் பால் உற்பத்திக்குத் தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்பை, இந்தியாவின் தேசிய பால் மேம்பாட்டு சபை (NDDB) மற்றும் ( Amul) அமுல் பால் நிறுவனம் ஆகியன … Read more

நவகமுவ ரஜமஹா விகாரையின் தலைமை தேரருக்கும் பிரதமருக்கிடையில் சந்திப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க நவகமுவ ரஜமஹா விகாரை மற்றும் பத்தினி தேவாலயத்தில் இன்று (2023.01.04) இடம்பெற்ற சமயக் கிரியைகளில் கலந்து கொண்ட பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள், விகாரையின் தலைமை தேரர்  ஸ்ரீ கல்யாணி சாமக்ரி தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க தேரர் மல்வானே பஞ்சாசார தேரரை சந்தித்து ஆசி பெற்றார். நவகமுவ ரஜமஹா விஹாராதிபதி மல்வானே பஞ்சாசார தேரர் இங்கு அநுசாசன உரை நிகழ்த்தினார். எமது நவகமுவ விகாரையும் பத்தினி தேவாலயமும் பிரதமர் அவர்களுக்கு புதிய … Read more

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை தொடர்பில் லிட்ரோ நிறுவனம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய நாளை முதல் 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 200 முதல் 300 ரூபாவுக்கு இடையில் குறைவடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாளை முதல் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை வௌியாகவுள்ளதாக அவர் ​மேலும் தெரிவித்துள்ளார். Source link

பெரும்போகத்தில் நெல் கொள்வனவுக்கு:வலுவான வேலை திட்டம்

பெரும்போகத்தில் நெல்லை கொள்வனவு செய்வதற்காக, வலுவான வேலை திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்காக திறைசேரியில் இருந்து 350 மில்லியன் ரூபாவை நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்தார். இதேபோன்று அரச வங்கிகளில் குறைந்த வட்டிக்கு கடனை பெற்றுக் கொள்ள .எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதுதொடர்பிலான அமைச்சரவை ஆவணம் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நெல் கொள்வனவின் போது நிலையான விலையை முன்னெடுத்து நெல் விவசாயிகளுக்கு நியாயமான செயற்பாட்டை உறுதி செய்வதே … Read more

பெப்ரவரி மாதம் யாழில் 'வடக்கின் ஒளிமயம்' நிகழ்ச்சித்திட்டம்

யாழ் மாவட்டத்தில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கீழ் நடைபெறவுள்ள ( Glocal Fair – 2023) “வடக்கின் ஒளிமயம்” நிகழ்ச்சித்திட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் யாழ் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. இது தொடர்பான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளும் நோக்கில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவுடனான கலந்துரையாடல் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம. பிரதீபன் தலைமையில் இன்று (04) காலை யாழ் மாவட்ட … Read more

தீவிரமடைந்து வரும் கோவிட் பரவல்! விதிக்கப்படும் கடுமையான கட்டுப்பாடுகள் (Video)

சீனாவில் கோவிட் பரவல் அதிகரித்துவரும் சூழ்நிலையில் அந்நாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சீனாவில் கடந்த சில நாட்களாக கோவிட் உச்சத்தில் இருந்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோருக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒமிக்ரோன் வைரசின் பிஎப்.7 வகை திரிபு சீனாவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கோவிட் பரிசோதனை சான்றிதழ் கட்டாயமானது என அமெரிக்கா, கனடா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு … Read more

சூரிய மின் உற்பத்தி தகடுகளுக்கு வரி விலக்கு

சூரிய மின் உற்பத்தி தகடுகளுக்கான Solar Panels துறைமுகம் மற்றும் விமான சேவை வரி இம்மாதம் முதலாம் திகதி முதல் நீக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். எரிசக்தி மற்றும் மின்சார நெருக்கடிக்கு தீர்வாக, புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஒன்றை நடத்தினால் மக்கள் நிலை மேலும் மோசமடையும்

வீழ்ச்சி கண்ட நாட்டை ஜனாதிபதி வழமை நிலைக்கு முன்னெடுத்து வருகின்றார். இந்த சந்தர்ப்பத்தில் ஒவ்வொருவரின் குறுகிய அரசியல் நோக்கத்திற்காக நாட்டை மீண்டும் சீர்குழைப்பதற்கு இடமளிக்கப்படமாட்டாது என்று ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியினர் கூறும் வகையில் பாரிய தொகை நாணயத்தாள்களை அச்சடித்து இந்த சந்தர்ப்பத்தில் தேர்தல் ஒன்றை நடத்தினால் மக்கள் மிக மோசமான நிலைக்கு உள்ளாவார்கள் என்றும் அவர் கூறினார். ஸ்ரீ கொத்த கட்சி தலைமையகத்தில் நேற்று (03) நடைபெற்ற … Read more

கண்டி மாவட்ட செயலகத்திற்கு வரும் பொதுமக்களின் அரச சேவைகளை பூர்த்தி..

கண்டி மாவட்ட செயலகத்திற்கு வருகை தரும் பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும்; அவற்றை  மேற்பார்வை செய்வதற்கும் புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் கண்டி மாவட்ட செயலாளர் திரு.சந்தன தென்னகோனின் ஆலோசனைக்கு அமைவாக, மாவட்ட செயலக வளாகத்தில் நேற்று (03) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது கருத்து தெரிவித்த கண்டி மாவட்ட செயலாளர் திரு.சந்தன தென்னகோன், பல்வேறு தேவைகளுக்காக மாவட்ட செயலகத்திற்கு வருகை தரும் பொது மக்களுக்கு மிகக் குறுகிய நேரத்திற்குள்; சேவைகளை வழங்குவதுடன், சேவைகளை  பூர்த்தி செய்ய முடியாத பட்சத்தில் மாற்று தீர்வும் … Read more