இலங்கை
பாடசாலை மாணவர்களுக்கு போதை பொருள் விற்பனை – வெல்லம்பிட்டியில் 62 வயது நபர் கைது
பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக தயார்படுத்தப்பட்டிருந்த ஒரு தொகை போதைப்பொருள் மாத்திரைகளை கைப்பற்றுவதற்கு விசேட அதிரடிப்படையினரால் முடிந்துள்ளது. இதனுடன் தொடர்புப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட அதிரடிப்படை மேல் மாகாண நடவடிக்கை பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைவாக வெல்லம்பிட்டி சேதவத்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 62 வயதை கொண்டவர் என்றும் நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு போதை பொருள் மாத்திரைகளை விற்பனை செய்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
இங்கிலாந்து லயன்ஸ் கிரிக்கெட் அணி
இங்கிலாந்து லயன்ஸ் கிரிக்கெட் அணி இம்மாதம் இலங்கை வரவுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்த அணி ,இலங்கை ஏ பிரிவு கிரிக்கெட் அணியுடன் 2 நான்கு நாள் போட்டிகளில் கலந்துக்கொள்ளும். இதேபோன்று 3 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் இந்த அணி கலந்துக்கொள்ளவுள்ளது. இந்த போட்டிகளுக்கு முன்னர் இம்மாதம் 25 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரையில் கொழும்பு ஆர் பிரேமதாச விளையாட்டு மைதானத்தில் 3 நாள் போட்டி ஒன்றும் நடைபெறவுள்ளது. காலி சர்வதேச விளையாட்டு … Read more
தேர்தலுக்காக நிதியை ஒதுக்கீடு செய்தால் ,பெரும்போகத்தில் நெல்லை கொள்வனவு செய்து சிரமம்
தற்போதைய சூழ்நிலையில் தேர்தலுக்காக நிதியை ஒதுக்கீடு செய்தால் பெரும்போகத்தில் நெல்லை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்கு நிதி இருக்காது என்று நிதி அமைச்சும், விவசாய அமைச்சும் தெரிவித்துள்ளன. இதேவேளை, பொருளாதார நெருக்கடி நிலவும் தற்போதைய சூழ்நிலையில் தேர்தலுக்காக நிதியை செலவிட வேண்டாம் என விவசாய அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. தேர்தலுக்காக செலவிடப்படும் தொகையை உற்பத்தி செயற்பாடுகளுக்கும், விவாசாய உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்காக பயன்படுத்துவது பொருத்தமாகும். இதன் மூலம் நாட்டில் உணவு உற்பத்தி அதிகரிக்கும். விவசாயிகளின் பொருளாதார அபிவிருத்திக்கு இது பெரும் … Read more
அரச ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க நிதி இல்லையா..! யாழில் அமைச்சர் கூறியுள்ள விடயம்
அரச ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க நிதி இல்லை, ஆனால் தேர்தல் நடத்தப்பட வேண்டுமா என்பதை தேர்தல் ஆணைக்குழு தீர்மானிக்கும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்த போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தல் தினத்தை தீர்மானிப்பது, தேர்தலை நடத்துவதா இல்லையா என்பதை தீர்மானிப்பது அல்லது தேர்தலுக்குரிய பணத்தினை எங்கே பெறுவது என தீர்மானிப்பது தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் கடமையாகும். ஆனால் தேர்தல் ஆணைக்குழு தேர்தல் … Read more
முன்னாள் பரிசுத்தப் பாப்பரசர் 16 ஆவது பெனடிக்ட் திருத்தந்தைக்காக இரங்கல் தெரிவிப்பதற்கு கொழும்பு அபோஸ்தலிக்க தூதரகத்திற்கு ஜனாதிபதி விஜயம்
முன்னாள் பரிசுத்தப் பாப்பரசர் 16 ஆம் பெனடிக்ட் திருத்தந்தை இறைபதமேந்தியதையொட்டி அவருக்காக இரங்கல் தெரிவிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இன்று (04) முற்பகல் கொழும்பிலுள்ள அபோஸ்தலிக்க தூதரகத்திற்கு விஜயம் செய்தார். இலங்கைக்கான வத்திக்கான் அபோஸ்தலிக்க தூதுவர் புனித பிரையன் உடேக்வே ஆண்டகையைச் சந்தித்த ஜனாதிபதி, அவருடன் சிறு உரையாடலில் ஈடுபட்டார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் , அங்கு வைக்கப்பட்டுள்ள விசேட நூலில் குறிப்பொன்றையிட்டதுடன், பதினாறாம் பெனடிக்ட் பரிசுத்தப் பாப்பரசரின் புகைப்படத்திற்கும் அஞ்சலி செலுத்தினார். President’s … Read more
இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான 2ஆவது ரி-ருவென்டி கிரிக்கெட் போட்டி நாளை
சுற்றுலா இலங்கை – இந்திய கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி-ருவென்டி கிரிக்கெட் போட்டி நாளை (05) நடைபெறவுள்ளது. இந்த்ப போட்டி புனே (Pune) யில் நாளை (05) இரவு ஏழு மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை ,இரு அணிகளுக்கிடையில் , மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று (03) நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் … Read more
32 உற்பத்தி பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு சீனா அனுமதி
நாட்டின் உணவு உற்பத்திகளில் 32 வகைளை பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு சீன மக்கள் அரசின் சுங்க நிர்வாகத்தினால் அனுமதி கிடைத்துள்ளது. இதுதொடர்பாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கையில் இந்த உற்பத்திப் பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்காக சீன மக்கள் அரசின் சுங்க நிர்வாகத்தினால் அனுமதி கிடைத்திருப்பதாக தெரிவித்தார். 29 வகையான கடற்றொழில் நீரியல் உற்பத்தி இதில் அடங்குகின்றன. சீன அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 38 இலங்கை நிறுவனங்கள் இவற்றின் ஏற்றுமதியாளர்களாக செயல்படுவார்கள் என்றும் அமைச்சர் கூறினார். … Read more
இலங்கையில் மீண்டும் எரிபொருள் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்..!
எரிபொருட்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒக்டேன் 92 மற்றும் ஒக்டேன் 95 பெட்ரோல் லீட்டர் ஒன்றின் வரி 27 ருபாவிலிருந்து 52 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. சுப்பர் டீசல் லீட்டரின் வரி 13 ரூபாவிலிருந்து 38 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும் வரி அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் புதிய விலை அதிகரிப்பு தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இதேவேளை நேற்று முன் தினம் மேற்கொள்ளப்பட்ட டீசல் விலை குறைப்புடன், ஒரு … Read more
புது வருடத்தில் பணிகளை ஆரம்பிக்கும் ஜனாதிபதி நிதியத்தின் ஊழியர்களுக்கு பிரித் பாராயணம் செய்து ஆசிர்வாதம் அளிக்கப்பட்டது
2023 புதிய வருடத்தில் தமது பணிகளை ஆரம்பிக்கும் ஜனாதிபதி நிதியத்தின் ஊழியர்களுக்கு பிரித் பாராயணம் செய்து ஆசிர்வாதம் வழங்கும் நிகழ்வு நேற்று (03) தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவின் பங்குபற்றுதலுடன் ஜனாதிபதி நிதிய அலுவலக வளாகத்தில் இடம்பெற்றது. கலாநிதி வண. கிரிந்தே அஸ்ஸஜி தேரர் சிறிய அனுசாசன உரை நிகழ்த்தியதோடு பிரித் பாராயணத்தையும் ஆரம்பித்தார். கங்காராம விகாரையின் நவம் பெரஹெராவுக்காக ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் நிதி உதவிக்கான … Read more