மத்தள விமான நிலையம் வரும் பயணிகளின் பரிதாப நிலை

மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள், தேவையான விசாவைப் பெற்று அதற்கான கட்டணத்தை செலுத்துவதில் தாமதம் ஏற்படுவதால், பல மணிநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. கடந்த மாதம் 29ஆம் திகதியும் அதற்கு முந்தைய தினம் 400க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளுடன் வந்த விமானங்களின் பயணிகள் மூன்று நான்கு மணித்தியாலங்கள் விமான நிலையத்திலேயே தங்க வேண்டியிருந்தது. அங்கு இரண்டு ஊழியர்கள் மட்டுமே உள்ளனர், மேலும் விசா அச்சிடும் பிரிவில் ஆறு ஊழியர்கள் மட்டுமே … Read more

வசந்த முதலிகே இலங்கை மக்களுக்கு எழுதிய பகிரங்கக் கடிதம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே இலங்கை மக்களுக்கு பகிரங்கக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். வாழ்வுரிமையை உறுதி செய்ய அரகலய (போராட்டத்தை) தேர்வு செய்ய வேண்டும் என்றும், இதை அடைவதற்கு மாணவர் இயக்கம் எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் உண்மையான பயங்கரவாதிகள் சுதந்திரமாக சுற்றித்திரியும் வேளையில், பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டவர்கள் சிறையில் வாடுகின்றனர் என … Read more

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய இரு இந்தியர்கள் : தமிழர் பகுதியில் ஒருவர் கைது

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பை பேணிய இரண்டு இந்தியர்களுடன தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் ஒருவர் மட்டக்களப்பு – காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய தரப்பினர் வழங்கிய தகவல்களுக்கு அமைய அவர், இலங்கையின் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தின் கோயம்புத்தூரில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி சிற்றூர்ந்து வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றது. இதன்போது குறித்த சிற்றூர்ந்தை செலுத்தியவர் என கூறப்படும் ஒருவர் … Read more

சுற்றுலா வீசாக்கள் மூலம் வெளிநாடு சென்றுள்ள பெண்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை 

சட்ட விரோதமான முறையில் சுற்றுலா வீசாக்கள் மூலம் வெளிநாடு சென்றுள்ள அனைத்துப் பெண்களுக்கு எதிராக பணியக சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.. இவ்வாறு வெளிநாடு சென்றுள்ள அனைத்துப் பெண்களையும் கருப்புப் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது. ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் கீழ் இயங்கும் சுரக்ஷா பாதுகாப்பு விடுதியில் தங்கியுள்ள இலங்கைப் பெண்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த 24ம் திகதி … Read more

வடமாகாணத்தில் குடி நீர் பிரச்சினையை தீர்க்க , நனோ தொழில்நுட்ப நீர் சுத்திகரிப்பு தொழிற்சாலைகள்

வடமாகாண மக்களின் சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்தி குடிநீர் பிரச்சினையை தீர்க்க 50 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்படும். இதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் தலா 23 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் நிறுவப்பட உள்ளன. அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் என்ற அரசின் கருத்தின் கீழ் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரையின் பிரகாரம் அமைச்சின் மீள்குடியேற்றப் பிரிவு, … Read more

கிளிநொச்சியில் போதையற்ற சமூகத்தை உருவாக்கும் விழிப்புணர்வு பேரணி

போதைப்பொருளற்ற சமூகத்தை உருவாக்கும் எண்ணக்கருவிற்கு அமைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழிப்புணர்வு பேரணியினை முன்னிட்டு விழிப்புணர்வு பதாதை தயாரிக்கும் போட்டி கிளிநொச்சி பாரதிபுரம் மகாவித்தியாலயத்தில் இன்று (03) இடம்பெற்றது. கிளிநொச்சி பாரதிபுரம் மகாவித்தியாலய பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் போதைப் பொருளற்ற சமூகத்தை உருவாக்கும் கவனயீர்ப்பு நிகழ்வு எதிர்வரும் 8ம் திகதி இடம்பெறவுள்ளது. அதன் முன்னேற்பாடாக குறித்த தலைப்பின் கீழ் விழிப்புணர்வு பதாதை தயாரிக்கும் போட்டியில் 75 மாணவர்கள் பங்குபற்றி தமக்குள் எழுந்த எண்ணக்கருவை பதாதைகள் ஊடாக வெளிப்படுத்தினர். போட்டியின் … Read more

அம்பாறை மாவட்ட திட்டமிடல் பதில் பணிப்பாளராக எச். பி. அனீஸ் நியமனம்

அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் பதவிக்கு, இலங்கை திட்டமிடல் சேவையைச் சேர்ந்த மாவட்ட செயலகத்தின் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எச். பி. அனீஸ் பதில் திட்டமிடல் பணிப்பாளராக, அம்பாறை மாவட்ட செயலாளர் ஜே. எம். ஏ டக்ளஸ் இன் முன்னிலையில் இன்று (03)  தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.  இதன்போது மேலதிக மாவட்ட செயலாளர் நிலந்த டி சொய்ஸா, உதவி மாவட்ட செயலாளர் விமங்ச செனவிரத்ன, அம்பாறை பிரதேச செயலக அனுருத்த சந்தருவன், பிரதான கணக்காளர் எஸ். எல். ஆதம்பாவா, மாவட்ட … Read more

மின் கட்டண திருத்தம்: அடுத்த வாரம் அமைச்சரைவயில் கலந்துரையாடப்படும்

மின் கட்டண திருத்தத்தை மேற்கொள்வது தொடர்பில் அடுத்த வாரம் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். இதன்படி, மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பில் எதிர்வரும் வாரத்தில் மேலும் கலந்துரையாடப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (03) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இந்தவிடயங்களை குறிப்பிட்டார்.

அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை மறுசீரமைப்பது தொடர்பில்…

பல்வேறு துறைகளில் அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை மறுசீரமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த அதிகாரிகளின் ஓய்வு பெறும் கால எல்லையை 65 ஆக அதிகரிப்பதற்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன தெரிவித்துள்ளார். தாதியர், விசேட வைத்தியர்கள், ரயில் சாரதிகள் உள்ளிட்ட துறைகள் இதில் அடங்குகின்றன. கடந்த 31 ஆம் திகதி 30 ஆயிரம் அரச ஊழியர்கள் ஓய்வு பெற்றனர். புத்தாண்டில் அரச ஊழியர்கள் மிகுந்த பொறுப்புடன் தமது … Read more