இலவச அரபு மொழி பாட கருத்தரங்கு

இந்த வருடம் உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச அரபு மொழி பாட கருத்தரங்கு நாளை புத்தளம் இஸ்லாஹியா பெண்கள் அரபுக் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புத்தளம், மதுரங்குளி, கற்பிட்டி, சிலாபம், அனுராதபுரம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளிலுள்ள பாடசாலைகள் மற்றும் அரபுக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் இதில் பங்கேற்கலாம்.

இலங்கையில் நடந்த போராட்டத்தின் பின்னணியில் இருக்கும் மறைகரம்! அம்பலமான சர்வதேச சதி

இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பாரிய போராட்டங்களுக்கு பின்னால் சர்வதேச சதி இருப்பதாக எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.  சிங்கள தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  தொடர்ந்தும் தெரிவிக்கையில்,  போராட்டத்தை முன்னின்று நடத்துவதில் ‘போன் எகெய்ன்’ (Born Again) என்ற குழு, பிரதான பங்குதாரராக செயற்பட்டது. ஒன்றிணைந்து இயங்கிய புலனாய்வுச் சேவை போன் எகெய்ன் எனும் மதக் குழு போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றதுடன், சர்வதேச புலம்பெயர் அமைப்புகளும் காலி … Read more

முட்டையில் இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து! விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை

நாட்டுக்கு முட்டையை இறக்குமதி செய்தவன் மூலம் வைரஸ் தொற்று பரவும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக, “Avian Influenza” எனும் வைரஸ் நோய் இலங்கைக்கு வரும் அபாயம் அதிகம் என அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், முட்டை இறக்குமதி செய்ய எடுக்கப்பட்டுள்ள முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சந்தையில் முட்டை விலை அதிகரிப்பு காரணமாக முட்டையை இறக்குமதி செய்ய அரசாங்கம்  தீர்மானித்துள்ளது. இலங்கைக்கு … Read more

முட்டை இறக்குமதிக்கு அமைச்சரவை அங்கீகாரம்

சந்தையில் தற்போது நிழவுகின்ற முட்டை தட்டுப்பாட்டிற்கு தீர்வாக, தேவை ஏற்படின் தற்காலிகமாக வெளிநாட்டிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (03) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இதுதொதொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், சந்தையில் முட்டை ஒன்றை கொள்வனவு செய்வதற்கு 50 ரூபாவிற்கு மேல் செலுத்த வேண்டியுள்ளது. இதனால், விசேடமாக பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு … Read more

பாடசாலைகளுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கு புதிய நடைமுறை

பாடசாலைகளில் தரம் 2 முதல் 11 வரையில் (தரம் 6 தவிர்ந்த) மாணவர்களை உள்வாங்குவதற்கு புதிய நடைமுறையை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (03) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தற்போது நடைமுறையில் உள்ள சுற்றறிக்கை ஏற்பாடுகளை மேலும் நெறிப்படுத்துவதன் ஊடாக, இடைநிலை வகுப்புக்களில் வேறு பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்ளின் … Read more

அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை மாற்றுவது தொடர்பில் மீண்டும் அவதானம்

தாதியர்கள், விசேட வைத்தியர்கள், புகையிரத சாரதிகள் போன்ற விசேட அரச ஊழியர்களின் ஓய்வு காலம் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. டிசம்பர் மாதம் 31ஆம் திகதியில் இருந்து கிட்டத்தட்ட 30,000 அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றதன் பின்னணியில் இந்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன, பல்வேறு துறைகளில் அரச உத்தியோகத்தர்களின் ஓய்வுபெறும் வயதை குறைந்தது 65 ஆக அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக … Read more

நீண்ட இழுபறிக்கு பின்னர் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரிக்கு அதிபர் நியமனம் (video)

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் அதிபராக இருந்த திரு பயஸ் ஆனந்தராஜா கடந்த 30ஆம் திகதி(30/12/2022) ஓய்வுபெற்றதை அடுத்து அந்த வெற்றிடத்திற்கு பதில் அதிபராக ஒரு ஆசிரியை ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார்.  எனினும், அந்த ஆசிரியையின் நியமனத்தை பாடசாலை அபிவிருத்திச் சங்கம்,  பழைய மாணவர்கள்  உள்ளிட்ட பலரும் முற்றுமுழுதாக ஏற்க மறுத்தனர். பிரச்சினைக்குத் தீர்வு அத்துடன், புதிய அதிபராக அருட்தந்தை லொபோனை நியமிக்க வேண்டும் என தெரிவித்து, பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களும் நேற்றைய தினம்  வகுப்பறைகளை பகிஸ்கரித்தனர். … Read more

இலங்கை வந்த பிரான்ஸ் பிரஜையால் ஏற்பட்ட குழப்ப நிலை

இலங்கையில் பிரான்ஸ் நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் பிரான்ஸ் நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்பற்ற முறையில் நாயை வளர்த்த பிரான்ஸ் பிரஜையே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அளுத்கம களுவாமோதர பிரதேசத்தில் ஐந்து பேரையும் வீடுகளில் வளர்க்கப்பட்ட இரண்டு நாய்களையும் கடித்துள்ளது. இதயைடுத்து பிரான்ஸ் நாட்டவர் கைது செய்யப்பட்டதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர். பெந்தோட்டை அங்ககொட பிரதேசத்தில் வசிக்கும் எரிக் மார்ஷல் பெர்னாட் கோல்மன் என்ற 84 வயதான பிரான்ஸ் பிரஜை ஒருவரே இவ்வாறு … Read more

இலங்கை- இந்திய கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முதலாவது ரி-ருவென்டி கிரிக்கெட் போட்டி

சுற்றுலா இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான முதலாவது ரி-ருவென்டி கிரிக்கெட் போட்டி இன்று (03) நடைபெறவுள்ளது. மும்பை வாங்கடே மைதானத்தில் போட்டி இன்றிரவு ஏழு மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இலங்கை அணிக்கு தசுன் சாணக்கவும், இந்திய அணிக்கு ஹட்ரி;க் பாண்டியாவும் தலைமை தாங்குகின்றனர். இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுலா சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, மூன்று ரி-ருவென்டி போட்டிகளிலும் ,மூன்று ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் விளையாடவுள்ளன. இலங்கை அணிக்கு தசுன் சாணக்கவும், இந்திய அணிக்கு ஹட்ரிக் பாண்டியாவும் தலைமை … Read more

எதிர்வரும் 5ம் திகதி நாடு தழுவிய ரீதியில் முடங்கப் போகும் துறை! வெளியானது எச்சரிக்கை

நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்கப் போராட்டத்தில் குதிக்கப் போவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வரவு செலவுத் திட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நியாயமற்ற வரி அறவீட்டுத் திட்டத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு இந்த போராட்டம் முன்னெடுக்கப்படும் என அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நாடு தழுவிய ரீதியில் எதிர்ப்பு போராட்டம் எதிர்வரும் 5ம் திகதி நாடு தழுவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளிலும் எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படும் என சங்கம் தெரிவித்துள்ளது. உத்தேச வரித் திட்டமானது மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார … Read more