அனைத்து சவால்களுக்கு மத்தியிலும் சகலரினதும் எதிர்பார்ப்பை நிறைவேற்ற பொறுப்புடன் புதிய வருடத்தில் அணிவகுப்போம்

அனைத்து சவால்களுக்கு மத்தியிலும் சகலரினதும் எதிர்பார்ப்பை நிறைவேற்ற பொறுப்புடன் புதிய வருடத்தில் அணிவகுப்போம் – புத்தாண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ தெரிவிப்பு முன்னெப்பொழுதும் இல்லாத அளவு சவால்களுக்கு நாடு முகங்கொடுத்திருகு்கும் நிலையில் நாட்டிலுள்ள உயரிய நிறுவனத்தின் பணியாட் தொகுதியினர் என்ற ரீதியில் மக்களின் எதிர்பார்ப்புக்களை பொறுப்புடன் நிறைவேற்ற புதிய வருடத்தில் அனைவரும் அணிவகுக்க வேண்டும் என பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ இன்று (02) பாராளுமன்ற பணியாட் … Read more

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் சிறிதளவு மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு ,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 ஜனவரி03ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 ஜனவரி 0 3ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும். நாடடின் ஏனைய பிரதேசங்களில்பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.  

பரந்துபட்ட கூட்டமைப்பை உருவாக்க வலியுறுத்தி சம்பந்தனுக்கும் மாவைக்கும் ரெலோ, புளொட் தலைவர்கள் கடிதம்

தற்போதைய காலத்தின் தேவையை உணர்ந்து தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பரந்துபட்ட அமைப்பாக மாற்ற வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா ஆகியோருக்கு ரெலோ மற்றும் புளொட் தலைவர்களால் கடிதம் அனுப்பி வைக்கப்படவுள்ளது. மத்திய குழுக் கூட்டம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்துக்கு முன்னதாக இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்படும் என்று நம்பகரமாகத் … Read more

சமூக வலைத்தளங்களில் பலரது பாராட்டுக்களை பெற்ற சிரேஷ்ட வைத்திய அதிகாரி மீது தாக்குதல்

பதுளை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி பாலித ராஜபக்ச மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்றைய தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சிறுமியொருவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஆத்திரமடைந்த மக்கள் வைத்தியசாலையில் குழப்பத்தில் ஈடுபட்டுள்ளதுடன் வைத்தியர் பாலித ராஜபக்சவை தாக்கியுள்ளனர். சம்பவம் தொடர்பில், வைத்தியர் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, சந்தேகத்தின் பேரில் … Read more

அதிஷ்டம் கிட்டவுள்ள மூன்று ராசிக்காரர்கள்:அதிலும் தனுசு ராசிக்காரர்களுக்கு-நாளைய ராசிபலன்

பிறந்திருக்கும் ஆங்கில புது வருடம் எந்தெந்த ராசியினருக்கு எப்படி அமைய போகின்றது என்பது அனைவரின் மனதிலும் இருக்கும் ஓர் விடயமாகும். நாளை என்ன நடக்கும் என்று அறியும் சக்தி பொதுவாக மனிதர்களுக்கு இருப்பது அசாத்தியமான ஒன்றாகும். ஆனால் வேதத்தின் கண்ணாக விளங்கும் ஜோதிடத்தின் மூலம் நமது நாளைய தினத்தின் பலனை நாம் அறியும் சாத்தியம் உள்ளது. எனவே நாளொன்றுக்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு நடந்து … Read more

வளமான இலங்கைக்காக ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் புத்தாண்டில், பணியைத் தொடங்கிய அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு

இலங்கையின் பொருளாதாரத்தின் மிக முக்கிய வருடமான 2023 ஆம் ஆண்டில், தமது பொறுப்புகளை எவரும் தட்டிக்கழிக்கக் கூடாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார். புதிய வருடத்தில் வளமான இலங்கைக்காக ஒன்றிணைந்து தம்மை அர்ப்பணிக்குமாறு அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். 2023 புத்தாண்டில் ஜனாதிபதி அலுவலக ஊழியர்களுடன் இணைந்து இன்று (02) காலை தமது கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிக்க … Read more