அறநெறி பாடசாலைகளை முன்னெடுத்துச் செல்வதில் பல சவால்கள் – பிரதமர்

அறநெறி பாடசாலைகளை முன்னெடுத்துச் செல்வதில் பல சவால்கள் உள்ளன. இந்த சவால்கள் குறித்து சமகால அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். அறநெறி பாடசாலைகளை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கு அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் ஆற்றும் பணிகள் மகத்தானவை என்றும் பிரதமர் கூறினார். களனி ரஜமஹா விகாரையில் வழிபாடுகளில ஈடுபட்ட மேற்கொண்ட பிரதமர், களனி ரஜமஹா விகாரையில் சங்கைக்குரிய கொள்ளுப்பிட்டி மஹிந்த சங்கரக்கித தேரரைச் சந்தித்தார். அதன் பின்னர், நாரஹேன்பிட்டி அபயராம … Read more

ATM இயந்திரங்களில், பண மோசடி செய்த கும்பல்

வங்கிகளின் ATM இயந்திரங்களில் இருந்து பண மோசடி செய்த கும்பல் குறித்த தகவல்கள் வெளியாகியிருப்பதாக பொலிசார் தெரிவித்தனர். இந்த சம்பவங்கள் குறித்து விரிவான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக குறிப்பிட்ட பொலிஸார் கடந்த சில தினங்களில் இடம்பெற்ற சம்பவங்களில் சுமார் ஒரு கோடி 50 இலட்சம் ரூபா மோசடி இடம்பெற்றுள்ளது. இந்த மோசடிக்காரர்களை கைது செய்வதற்கு பொது மக்களின் உதவியையும் பொலிஸார் நாடியுள்ளனர்.

2023ல் எண்கணிதத்தில் நடக்கவிருக்கும் மாற்றங்கள் (Video)

மனித வாழ்க்கையில் எண்களும் எழுத்துக்களும் எதோ ஒரு வகையில் தொடர்பு கொண்டுள்ளன. எண் கணிதம் வைத்து வாழ்க்கைக்கு தேவையான பிரதானமான பலன்களை ஜோதிட சாஸ்திரம் போல கூற முடியாது என்றாலும் நம் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்துகொள்வோம். ஒருவருடைய பிறந்த தேதி, வீட்டின் இலக்கம், பெயர் எழுத்துக்களின் கூட்டுத்தொகை போன்ற எண்களுக்கும் அவருக்கு நிகழக்கூடிய இன்ப துன்பங்களுக்கும் தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது. ஒருவருக்கு அவர் பெயரை மாற்றி அவருக்கு சாதகமான எண் … Read more

அரச ஊழியர்கள் உறுதிமொழி மேற்கொள்ளும் முக்கிய வைபவம் பிரதமர் தலைமையில் நாளை

அரச சேவையில் மனித வளத்தை உரிய முறையில் முகாமைத்துவம் செய்து தற்போது நிலவும் சவால்களை வெற்றி கொள்ள முடியும் என்று அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நாடு சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில் ஊழியர்கள் முன்னரிலும் பார்க்க சிறப்பான முறையில் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, புத்தாண்டில் அரச ஊழியர்கள் தமது பணிகளை ஆரம்பித்து உறுதிமொழி மேற்கொள்ளும் முக்கிய வைபவம் பிரதமர் … Read more

இன்று முதல் அமுலாகும் வருமான வரி – வெளியான முழுமையான விபரம்

வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட வரித் திருத்தங்கள் உட்பட பல தீர்மானங்கள் இன்று முதல் அமுலுக்கு வருகின்றன. அதற்கமைய இன்று முதல் அமுலுக்கு வரும் மாதாந்த சம்பளத்திற்கும் தனிநபர் வருமான வரி விதிக்கப்படும். மாதாந்த சம்பளம் 150,000 ரூபாவாக இருந்தால் மாதாந்த வரியாக 3500 ரூபா அறவிடப்படும். மாதச் சம்பளம் 02 லட்சம் ரூபாய் என்றால், மாத வரித் தொகை 10,500ரூபாவாகும். 250,000 ரூபா மாதாந்த சம்பளம் பெறும் நபர் 21,000 ரூபாவையும், 300,000 ரூபா சம்பளம் … Read more

கடனை, திருப்பி செலுத்துவதில் சிரமங்களை ……….

வர்த்தக வங்கிகளில் பெற்றுள்ள கடனை திருப்பி செலுத்துவதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ள கடனாளிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இந்த கடனாளிகளுக்கு தேவைப்படும் பட்சத்தில் கோரிக்கையின் அடிப்படையில் கடனை திருப்பி செலுத்துவதற்கு வசதிகள் செய்யப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி: விவசாயிகளுக்கு நிவாரணங்கள்

பெரும்போக உற்பத்தி நடவடிக்கைகளுக்காக குறைந்த வருமானம் கொண்ட விவசாயிகளுக்கு பல நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஏ.எச்.எம்.எல்.அபேரட்ன தெரிவித்துள்ளார். இதன் முதற்கட்ட நடவடிக்கை பதுளை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் கீழ் யூரியா உரத்தை வழங்குவது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

டுபாய் விமான நிலையத்தில் கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நிலைமை

டுபாய் விமான நிலையத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டுபாய் விமான நிலையத்தின் விசேட பிரமுகர் முனையத்தை இலவசமாக பயன்படுத்த அனுமதிக்குமாறு ராஜபக்ஷ கோரிக்கை விடுத்திருந்த போதிலும், அந்த கோரிக்கையை டுபாய் அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். இது தொடர்பான தொகையை கோட்டாபய ராஜபக்ஷ செலுத்த வேண்டும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதற்கமைய, இலங்கை நாணயத்தில் 260,000 ரூபாவை செலுத்துமாறு விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Source link

13 ஆவது திருத்தச்சட்டத்தை அகற்ற ரணில் திட்டம்

Courtesy: koormai பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை முற்றாக நீக்கம் செய்து இந்தியத் தலையீட்டை இல்லாமல் செய்வதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கம். தற்போது புதுடில்லியில் இலங்கைக்கான தூதுவராக அமைச்சரவை அந்தஸ்த்துடன் பதவி வகிக்கும் முன்னாள் அமைச்சர் மிலிந்த மொறகொட 13 ஐ இலங்கை அரசியல் யாப்பில் இருந்து அகற்றுவற்கான திட்டங்களை வகுத்து வருகிறார் என்பதைச் சமீபகால அணுகுமுறைகள் காண்பிக்கின்றன. மிலிந்த மொறகொட 2002 சமாதானப் பேச்சுக் காலத்தில் எவ்வாறு ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக் கோரிக்கையைத் தரமிறக்கும் சர்வதேச … Read more

புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

உலகம் முழுவதும் வீசும் பொருளாதார சூறாவளி, சமூக மற்றும் அரசியல் புயலின் மத்தியில் வரவிருக்கும் புதிய வருடம் நம் அனைருக்கும் சவால் மிக்க ஒன்றாக அமையவுள்ளது. இவை அனைத்துக்கும் மத்தியில் சிறிய தீவின் குடிமக்களாகிய நாம் உறுதியாகவும், சுயாதீனமாக எழுந்து நிற்பதற்கு காணப்படும் வாய்ப்புக்கள் குறைவாகும். இருந்தபோதும் இது செய்ய முடியாதது அல்ல. எமது நாட்டின் சுதந்திரத்தின் பவள விழா கொண்டாடப்படும் 2023ஆம் வருடத்தின் ஆரம்பத்தில், இதேபோன்று கவனமாக, பொறுப்புடனும், கௌரவமாகவும் எவ்வாறு இருப்பது என்ற நோக்கத்துடனேயே … Read more