பிரதமர் தினேஷ் குணவர்தனவின் புத்தாண்டு வாழ்த்து

“அனைத்துவிதமான சவால்களையும் வெற்றிகொண்டு சிறந்ததோர் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். குறிப்பாக உணவுப் பாதுகாப்பு மற்றும் கிராமியப் பொருளாதார மறுமலர்ச்சிக்கு முன்னுரிமை அளித்து, ஏனைய அனைத்துத் துறைகளுக்குமான அபிவிருத்தி முயற்சிகளில் செயற்திறமாகப் பணியாற்றுவோம். மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கின்ற தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான மூலோபாயங்களுடன் செயற்பட்டு, மலரும் புத்தாண்டில் வளமானதொரு தேசத்தை கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.”

சூனியம் செய்வதற்காக புதைக்கப்பட்ட பெண்ணின் தலையை வெட்டி எடுத்து சென்ற மர்ம நபர்கள் (Video)

மத்திய மாகாணத்திற்குட்பட்ட தலகிரியாகம தென்னகோன்புர பொது மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலத்தை தோண்டி எடுத்த சிலர், தலையை வெட்டி எடுத்துச் சென்றதாக கலேவெல பொலிஸார் தெரிவித்தனர். இந்த பொது மயானத்திற்கு அருகில் நடந்து சென்ற ஒருவர் இதனை பார்த்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இதனைக் கண்ட நபர் உயிரிழந்தவரின் மகளுக்கு அறிவித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இது தொடர்பில் உயிரிழந்தவரின் மகள் கலேவெல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, பொலிஸ் குழுவொன்று அங்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இது … Read more

முன்னாள் பாப்பரசர் 16ஆவது பெனடிக் காலமானதாக வத்திக்கான் அறிவிப்பு

முன்னாள் பாப்பரசர் 16ஆவது பெனடிக் இன்று காலமானதாக வத்திக்கான் அறிவித்துள்ளது. மறைந்த முன்னாள் பாப்பரசருக்கு 95 வயது. ஜெர்மனியை சேர்ந்த பெனடிக்ட், 2005 ஆம் ஆண்டு கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக பதவியேற்றார். ஆனால் 8 ஆண்டுகளிலேயே அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர், கடந்த 10 ஆண்டுகளாக தனது ஓய்வு காலத்தை வத்திக்கானில் உள்ள மடாலயத்தில் கழித்து வந்த நிலையில்,பாப்பரசர்  பெனடிக்ட் காலமானார்.

2022ஆம் ஆண்டு நிறைவடைவதற்கு இன்னும் சில மணித்தியாலங்களே

2022ஆம் ஆண்டு நிறைவடைவதற்கு இன்னும் சில மணித்தியாலங்களே உண்டு. பொருளாதார நெருக்கடி மற்றும் பாரிய மக்கள் போராட்டத்திற்கு மத்தியில் அரசியலில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்திய ஆண்டாக விடைபெறும்  2022ஆம் ஆண்டு வரலாற்றில் பதிவாகி உள்ளது. அரசியல் யாப்புக்கு அமைவாக பாராளுமன்றத்தின் மூலம் ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்பட்ட நிகழ்வும் இந்த ஆண்டில் இடம்பெற்றுள்ளமை முக்கிய அம்சமாகும். நீண்டகாலமாக நிலவிய ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாட்டுக்கும் குறிப்பிடத்தக்க தீர்வும் இந்தாண்டில் காணப்பட்டமை இலங்கை வரலாற்றில் மற்றுமொரு நிகழ்வாகும். … Read more

எதிர்பாராத அதிஷ்டத்தால் கொட்டப்போகும் பண மழை! புது வருடத்தில் இரு ராசியினருக்கு விபரீத ராஜயோகம்

பிறக்கவுள்ள புத்தாண்டான 2023இற்கான ராசிபலன் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி 17இல் கும்ப ராசியில் சனிப் பெயர்ச்சி, ஆண்டின் நடுவில் ஏப்ரல் 22இல் மீன ராசியில் குரு பெயர்ச்சி, பிற்பகுதியில் அக்டோபர் 30இல் ராகு – கேது பெயர்ச்சி என நடக்கிறது. எனவே அடுத்த வருடம் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியான பலன்கள் கிட்டப் போகின்றன என்பதை பார்க்கலாம். மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Source … Read more

இலங்கையில் தீவிரமடையும் கோவிட் தொற்று! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் தற்போது கோவிட் தொற்றாளர்களில் அதிகரிப்பு ஏற்பட்டு வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. நாட்டில் கடந்த வாரத்தில் 40 கோவிட்த்தொற்றுக்கள் பதிவாகியுள்ளதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.  பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எனவே, நோய்த்தொற்றுகள் அதிகரித்துள்ள நாடுகளில் இருந்து நாட்டிற்குள் பிரவேசிப்பவர்களை மையமாக வைத்து கோவிட் வைரஸ் கண்டறியும் முறைமை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சில நாடுகள், சீனாவிலிருந்து வருபவர்கள் மீது கோவிட் சோதனை மற்றும் சாத்தியமான தனிமைப்படுத்தல் … Read more

384 நிறுவனங்களிடமிருந்து மருந்துகளை கொள்வனவு செய்வதை இடைநிறுத்திய சுகாதார அமைச்சு

பல்வேறு முறைகேடுகள் காரணமாக முந்நூற்று எண்பத்து நான்கு நிறுவனங்களிடமிருந்து மருந்துக் கொள்வனவுகளை சுகாதார அமைச்சு இடைநிறுத்தியுள்ளது. தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபை, அரச மருந்து ஒழுங்குமுறை கூட்டுத்தாபனம் மற்றும் மருத்துவ வழங்கல் திணைக்களம் ஆகியவற்றின் பரிந்துரையின் பேரில், இந்நிறுவனங்களிடமிருந்து மருந்து கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. பணம் செலுத்துவதில் ஏற்பட்ட சிக்கல் இந்த இடைநிறுத்தம் 2015 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை செய்யப்பட்டது. மருந்துகளை இறக்குமதி செய்யும் போது பணம் செலுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் … Read more

அனுமதியின்றி கோடிக்கணக்கில் முதலீடு! வெளியான அறிக்கை

இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனம் அரச வங்கி ஒன்றின் நிலையான வைப்பு கணக்கில் 7 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை முதலீடு செய்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது. சுற்றறிக்கையின் பிரகாரம் அனுமதி பெறாமல் கடந்த 2019, டிசம்பர் 31 ஆம் திகதியளவில் மொத்தமாக ஒரு கோடியே 92 லட்சத்து 61,864 ரூபாய் மற்றும் 2020 ஜனவரி மாதம் ஐந்து கோடியே 15 லட்சம் ரூபாயையும் முதலீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2019 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை … Read more

இந்தியாவுக்குவரும் 6 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு ……

சீனா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட 6 நாடுகளின் பயணிகளுக்கு இந்தியாவில் கொரோனா பாதிப்பின்மை சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதேபோன்று அந்த நாடுகளின் விமான சேவைகளை மேற்பொள்ளும் நிறுவனங்களுக்கு புதிய வழிகாட்டு விதிகளை இந்திய அரசாங்கம் வழங்கியுள்ளது. சீனா, ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங்காங் ஆகிய நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து அந்த நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருகை தரும் பயணிகள் கொரோனா பாதிப்பின்மை சான்றிதழை வழங்க வேண்டியது கட்டாயம் என இந்திய அரசாங்கம் … Read more

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மரியாதை நிமிர்த்தம் சந்தித்தார் யாழ் மாவட்ட கட்டளை தளபதி!

யாழ் மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ணா போதோட்ட, மரியாதை நிமிர்த்தம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இன்று சந்தித்துக் கலந்துரையாடினார். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில், அண்மைக்காலமாக அதிகரித்துள்ள மாட்டுத் திருட்டு, போதைப் பொருள் பாவனை, வாள் வெட்டு உட்பட்ட சமூக விரோதச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. மேலும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாத வகையில், உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருக்கின்ற காணிகளை விடுவித்தல் மற்றும் … Read more