மின்வெட்டு நேரத்தில் மாற்றம்:வெளியான புதிய அறிவிப்பு

மின்வெட்டு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய இன்று(31) மற்றும் நாளை (01) மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மீண்டும்  ஜனவரி 2 ஆம் திகதி மின்வெட்டு மேலும் ஜனவரி 2 ஆம் திகதி 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அதன் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.   இதற்கமைய A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் குறித்த … Read more

நாட்டில் 10 வீதமான ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன! அசேல சம்பத்

நாட்டில் சுமார் 10 வீதமான ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் சுமார் 40000த்திற்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் இயங்கி வந்ததாக தெரிவித்துள்ளார். நாட்டில் தற்பொழுது நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால் இவ்வாறு ஹோட்டல்கள் மூடப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.  முட்டை விலை ஹோட்டல்களுக்கு மக்கள் வருகை தருவதிலும் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டில் போதியளவு முட்டை விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர்கள் கூறினாலும் உண்மையில் … Read more

அமெரிக்க டோலருக்கு நிகரான இந்திய ரூபா மதிப்பிலும் வீழ்ச்சி

இந்தியாவில் 2022-ம் ஆண்டில் அமெரிக்க டோலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. 2021 இறுதியில் அமெரிக்க டோலருக்கு நிகரான ரூபா இந்திய நாணயத்தில் 74.33-ஆக இருந்த நிலையில், தற்போது 82.74 ரூபாவாக சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் ரூபாய் மதிப்பு, ஒரே ஆண்டில் 10%-க்கு மேல் சரிந்திருப்பது, 2013-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல்முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது

பணவீக்கம் 2022 திசெம்பரில் மேலும் தளர்வடைந்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசுஇ 2013=100)1 ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022 நவெம்பரின் 61.0 சதவீதத்திலிருந்து 2022 திசெம்பர் 57.2 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்து, 2022இன் இரண்டாம் அரைப்பகுதியில் குறைந்தளவான வாசிப்பைப் பதிவுசெய்தது. அதையொத்த போக்கினைத் தொடர்ந்து, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2022 நவெம்பரின் 73.7 சதவீதத்திலிருந்து 2022 திசெம்பரில் 64.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2022 நவெம்பரின் 54.5 சதவீதத்திலிருந்து 2022 திசெம்பரில் 53.4 … Read more

இலங்கை சுபீட்ச சுட்டெண் – 2021

இலங்கை சுபீட்சச் சுட்டெண் (SLPI) 2021இல் 0.796 கொண்ட சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்ததுடன், இது, கொவிட்-19 உலகளாவிய பெருந்தொற்றினால் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த 2020ஆம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட 0.764 உடன் ஒப்பிடுகையில் சிறிதளவு அதிகரிப்பினைக் காட்டியது. ‘பொருளாதார மற்றும் வியாபாரச் சூழல்’, ‘மக்கள் நலனோம்புகை’ மற்றும் ‘சமூக பொருளாதார உட்கட்டமைப்பு’ ஆகிய துணைச்சுட்டெண்களில் ஏற்பட்ட சிறிதளவு அதிகரிப்புக்கள் இலங்கை சுபீட்சச் சுட்டெண்ணில் ஏற்பட்ட சிறிதளவு அதிகரிப்பிற்குப் பங்களித்தன. 2021இல் பொருளாதார மற்றும் வியாபாரச் சூழல் துணைச் சுட்டெண்ணில் … Read more

இன்றும் நாளையும் மின்சாரத் துண்டிப்பு இடம்பெறாது

நாடளாவிய ரீதியில் இன்று(31)ம் நாளை (01) யும் மின்சாரத்துண்டிப்பு இடம் பெறாது என்று அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை,ஜனவரி மாதம் 2ஆம் திகதி முதல் நாளந்தம் இரண்டு மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் என்ற காலப்பகுதிக்கு மின்சாரத்துண்டிப்பை மேற்கொள்ள இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரமளித்துள்ளது. இதற்கமைய பகல் நேரத்தில் ஒருமணித்தியாலமும், இரவு நேரத்தில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் என்ற அடிப்படையில் மின்சாரத்துண்டிப்பு மேற்கொள்ளப்படும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  

2022 இல் ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைத்த 11,000 விண்ணப்பங்களுள் 10,360 இன் பணிகள் நிறைவடைந்துள்ளன

2022 ஆம் ஆண்டு மருத்துவ உதவிக்காக 1500 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் ஜனாதிபதி நிதியத்தின் பணிகளை மிகவும் திறம்படச் செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை.மருத்துவ உதவித் தொகை மற்றும் நோய்களின் பட்டியலை புதுப்பிக்க நடவடிக்கை.ஜனாதிபதி நிதியத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள 11,000 விண்ணப்பங்களுள் 10,360 விண்ணப்பங்கள் தொடர்பான பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் டபிள்யூ.ஏ. சரத்குமார தெரிவித்தார். அநேகமான விண்ணப்பங்களுடன் தொடர்புபட்ட கொடுப்பனவுகள் ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய விண்ணப்பங்களுக்கான கொடுப்பனவுகளையும் எதிர்வரும் ஓரிரு வாரங்களில் … Read more

ஐரோப்பிய நாடுகளின் மொழியை பயில இலங்கையர்களுக்கு வாய்ப்பு

அரச கருமமொழிகள் திணைக்களத்தின் மொழிக்கல்விக் கூடம் பல பாடநெறிகளை ஜனவரி மாதத்தில் ஆரம்பிக்கவுள்ளது. சிங்களம், தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜேர்மனி, ஹிந்தி, இத்தாலி, ஜப்பான், ரஷ்ய, சீன, அரேபிய மற்றும் கொரிய மொழிகள் இதன் கீழ் போதிக்கப்படவுள்ளன. பாடநெறிக்கான காலம் ஆறு மாதங்களாகும். திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத் தளத்தின் ஊடாக மாதிரி விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். வரையறுக்கப்பட்ட அளவு விண்ணப்பதாரிகளே சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர். மேலதிக விபரங்களுக்கு 0112 889 457 அல்லது 0112 888 934 முதல் ஒன்பது … Read more

மலசலகூடத்துக்காக வெட்டப்பட்ட குழியில் வீழ்ந்து 7 வயது சிறுவன் மரணம்

அம்பாறை – ஆலையடிவேம்பில் மலசலகூடத்துக்காக வெட்டப்பட்ட குழியில் வீழ்ந்து 7 வயது சிறுவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட கண்ணகி கிராமத்தில் நேற்று (29.12.2022) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ரவிக்குமார் லதீஸ் எனும் சிறுவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குடிதண்ணீர் தட்டுப்பாடு குடிதண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் குறித்த பகுதியில் மலசலகூடத்துக்காக வெட்டப்பட்ட குழியில் நிரம்பும் நீரை அவ்வப்போது சில தேவைகளுக்காகச் சிறுவனின் குடும்பம் பயன்படுத்தியுள்ளது. இதனை அவதானித்துள்ள அந்தச் சிறுவனும் … Read more