மட்டக்களப்பில் மூன்று புதிய பதிவாளர்கள் நியமனம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று, மண்முனை தென் எருவில் பற்று, மற்றும் போரைதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவுகளுக்கான பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப் பதிவாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரனினால் இன்று (29) வழங்கப்பட்டன. கிழக்கு வலய பிரதிப் பதிவாளர் நாயகம் கே. திருவருளின் ஏற்பாட்டில் மண்டூர், நவகிரி நகர் மற்றும் ஆரையம்பதி பிரதேச பிரிவுகளுக்கான பிறப்பு, இறப்பு பதிவாளர்கள் மூவருக்கான நியமனக் கடிதங்கள் இதன்போது விநியோகிக்கப்பட்டன. இம்மாவட்டத்தில் 25 பதிவாளர்களுக்கான வெற்றிடங்கள் … Read more

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 10 பேருக்கு கொரோனா

வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்த மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்த 10 பேருக்கு இதுவரையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 889 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் இதுவரை 10 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. உருமாறிய கொரோனா பி.எப்.7 வகையை சேர்ந்த வைரஸ், பல்வேறு நாடுகளில் வெகுவேகமாக பரவி வருகிறது. முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் இந்தியாவில் தீவிரப்படுத்தப்பட்டு, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். … Read more

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இவ்வருடம் ஆரம்பிக்கப்பட்ட 215 திட்டங்களில் 175 திட்டங்கள் பூர்த்தி

திறைசேரி ஒதுக்கீட்டின் கீழ் 10,600 மில்லியன் ரூபா,  இந்த ஆண்டில் செயல்படுத்தப்பட்ட 215 திட்டங்களில் கிட்டத்தட்ட 175 திட்டங்கள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன என்று  நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.  அதன்படி மேலும் 40 திட்டங்களின் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வருடம் நாடு முகம்கொடுத்துள்ள பொருளாதார சூழல் காரணமாக   அந்தத் திட்டங்களை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக  அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.   ஆனால் அந்த 40 திட்டங்களின் பணிகளை அடுத்த ஆண்டுக்குள்  முடிக்க   விடயத்திற்குப் … Read more

Arrival Cards அட்டைகளை ஜனவரி முதல் இணைய வழியில் பூர்த்தி செய்ய வசதி

இலங்கைக்கு வரும் மற்றும் வெளியேறும் இலங்கையர்கள் , வெளிநாட்டவர்கள் ஜனவரி முதலாம் திகதி முதல் குடிவரவு மற்றும் குடியகல்வு  Arrival Cards அட்டையை இணையவழி மூலம் பூர்த்தி செய்வதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒழுங்குகள் செய்யப்ட்டள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடிவரவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.immigration.gov.lk அல்லது  https://eservices.immigration.gov.lk  ஆகியவற்றின் ஊடாக , மூன்று நாட்களுக்குள் இலங்கைக்கு வருவதற்கு அல்லது புறப்படுவதற்குச் செல்வதற்கு முன்னர் இந்த அட்டையை பூர்த்தி செய்ய … Read more

சீனாவில் பிளாஸ்டிக் பைகளில் சுற்றி குவிக்கப்பட்டுள்ள உடல்கள் : வெளியான திடுக்கிடும் தகவல் (Video)

சீனாவில் இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் குளிர்கால சூழலில் கோவிட் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. நாளாந்தம் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சீனாவில், வெளிப்படை தன்மை குறைவாகவும், அந்நாட்டு செய்திகள் அரசால் தணிக்கை செய்யப்பட்ட பின்னரே வெளிவரும் சூழலும் காணப்படுகிறது. இந்த நிலையில், சீனாவில் கோவிட்க்கு பலியான உடல்களை பிளாஸ்டிக் பைகளில் சுற்றி குவித்து வைத்த காணொளி வெளிவந்து பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் பத்திரிகையாளரான ஜெனிபர் ஜெங் என்பவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், மேற்குறிப்பிட்ட அதிர்ச்சிகர … Read more

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஆரம்பம்

2022 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று (29) ஆரம்பமானது. அனைத்து மாவட்டங்களிலும் இந்த பணிகள் நடைபெற்று வருவதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 18 ஆம் திகதி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெற்றது. 2022 புலமைப்பரிசில் பரீட்சை 2,894 நிலையங்களில் நடைபெற்றதுடன், 334,698  பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.2023 ஜனவரி மாதமளவில் பரீட்சை முடிவுகளை வெளியிடக்கூடியதாக இருக்கும் என்றும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.  

30,000 அரச ஊழியர்கள் 31 ஆம் திகதி ஓய்வு – மக்களுக்கான அரச சேவையில எந்த பாதிப்பும் ஏற்படாது

30,000 அரச ஊழியர்கள் 31 ஆம் திகதி ஓய்வு – மக்களுக்கான அரச சேவையில எந்த பாதிப்பும் ஏற்படாதுசுமார் 30,000 அரச ஊழியர்கள் நாளை மறுதினம் 31 ஆம் திகதி ஓய்வு பெறவுள்ளனர்.அவர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் ஆயுதப்படையினர், நியதிச்சபைகள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் ஊழியர்கள் இடம்பெற்றுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்தார்.பெருமளவிலான அரச ஊழியர்கள் ஓய்வு பெற்றாலும் பொது மக்களுக்கான அரச சேவையில எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் இராஜாங்க அமைச்சர் … Read more

இலங்கையில் ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்

எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் இலங்கைக்கு பிரவேசிக்கும் மற்றும் நாட்டிலிருந்து வெளியேறும் வெளிநாட்டவர்கள் மற்றும் இலங்கையர்கள், வருகை மற்றும் புறப்பாடு அட்டையை இணையத்தளத்தில் பூர்த்திசெய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.immigration.gov.lk அல்லது eservices.immigration.gov.lk என்ற இணையத்தளத்திற்குச் செல்வதன் மூலம், புறப்படுவதற்கு அல்லது வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் உரிய அட்டையை நிரப்புவதற்கான வசதிகள் உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. விமான நிலையத்தில் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை … Read more

The Heart to Heart International அமைப்பிடமிருந்து மேலும் இலங்கைக்கு நன்கொடை

அமெரிக்க ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நேஷனல் The Heart to Heart International என்ற சர்வதேச அமைப்பு, மேலும் ஒரு தொகை மருந்து பொருட்களை இலங்கை;கு நன்கொடையாக வழங்கியுள்ளது.. இவற்றின் பெறுமதி 7.27 மில்லியன் அமெரிக்க டொலர்கள்..   இந்த அமைப்பு இலங்கைக்கு இதுவரையில் 19.9 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருந்து பொருட்களை  நன்கொடையாக வழங்கியுள்ளதாக அமெரிக்காவிலுள்ள இலங்கை தூதரகம்; தெரிவித்துள்ளது.

ஜப்பானில் இலவச வேலை வாய்ப்பு! வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்ட அறிவிப்பு

ஜப்பானில் இலவச வேலை வாய்ப்புகளுக்கான விளம்பரத்தின் அடிப்படையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு நேற்று (28) காலை பெருமளவானோர் வருகை தந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனினும் 20 காலியிடங்களுக்கான விளம்பரம் மாத்திரமே பிரசுரிக்கப்பட்டமை அங்கு சென்ற பின்னர் மக்களுக்கு தெரியவந்தது.  நீண்ட வரிசையில் பலர் காத்திருப்பு பத்தரமுல்லையில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு நீண்ட வரிசையில் பலர் காத்திருந்தனர். பணியகம் வெளியிட்ட முகநூல் பதிவின் அடிப்படையில் நாடு முழுவதிலுமிருந்து பலர் அங்கு வந்த இலங்கை வெளிநாட்டு … Read more