சுவர்ணமஹால் பினான்ஸ்சியல் சேர்விஸஸ் பிஎல்சி – உரிமத்தை இரத்துச்செய்தல்

2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் 37(3) ஆம் பிரிவின் நியதிகளின் பிரகாரம், 2022 திசெம்பர் 28ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் சுவர்ணமஹால் பினான்ஸ்சியல் சேர்விஸஸ் பிஎல்சிக்கு வழங்கப்பட்ட நிதித்தொழில் உரிமத்தினை இரத்துச்செய்வதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை தீர்மானித்துள்ளது. அதற்கமை, நிதித்தொழில் சட்டத்தின் கீழ் நிதித்தொழிலில் ஈடுபடுவதற்கு 2022 திசெம்பர் 28 தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் சுவர்ணமஹால் பினான்ஸ்சியல் சேர்விஸஸ் பிஎல்சி அனுமதிக்கப்படாது. மேலும், 2000ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க நிதிக் … Read more

உலகின் அதிநவீன தொழில்நுட்பத்துடன்கூடிய அம்பேவெல பால் பண்ணையின் புதிய பிரிவுக்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்!

அம்பேவெல பண்ணைக்கு அருகாமையில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட 30 ஏக்கர் காணியை உடனடியாக அம்பேவெல பண்ணைக்கு வழங்கி அதன் அபிவிருத்திக்குத் தேவையான வசதிகளை முன்னெடுக்குமாறும், அதனை மேய்ச்சல் நிலமாகப் பேணி, கறவை மாடுகளின் உணவுத் தேவையை வழங்கும் கட்டமைப்புடன் இணைக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் நுவரெலியா மாவட்டச் செயலாளர் மற்றும் ஆணையாளருக்கு பணிப்புரை விடுத்தார். அம்பேவெல பண்ணைக்குச் சொந்தமான ‘யுனைடட் டெய்ரீஸ் லங்கா லிமிடட் அம்பேவெல’ புதிய பிரிவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் நேற்று … Read more

“மாகாணங்களின் அதிகாரங்கள் யாவும் மீண்டும் கையளிக்கப்பட வேண்டும்” – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தினால் இல்லாது செய்யப்பட்ட மாகாணங்களுக்கான அதிகாரங்கள் அனைத்தும் மீளவும் மாகாண சபைகளிடம் கையளிக்கப்பட வேண்டும் என்ற விடயம்   வலியுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மேலும், நடைமுறைச் சாத்தியமான வழிமுறையை ஏற்றுகொண்டு வெளிப்படைத் தன்மையுடன் செயற்படக் கூடிய தமிழ் தரப்புக்களுடன் இணைந்து,  தமிழ் மக்களின் அரசியல் அபிலாசை தொடர்பான விடயத்தில் செயற்படுவதற்கு தயாராக இருப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பாக … Read more

65 வீதத்தால் மீண்டும் அதிகரிக்குமா மின் கட்டணம்

மின்கட்டணத்தை 65 சதவீதத்தால் அதிகரிக்கும் எவ்வித யோசனைகளும் ஆணைக்குழுவிற்கு இதுவரை முன்வைக்கப்படவில்லை என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மின்கட்டணத்தை அதிகரிக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது என்பதை நாட்டு மக்கள் விரைவில் அறிந்துக் கொள்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.  இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,  முழுமையான மின்கட்டணத்திற்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்காத காரணத்தினால் தான் தற்போது இரண்டரை மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது என மின்சார சபை குறிப்பிட்டுள்ளமை நிராகரிக்கத்தக்க கருத்தாகும். … Read more

நேபாள் நாட்டின் புதிய பிரதமர் பிரசந்தாவுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன வாழ்த்து

நேபாளத்தின் புதிய பிரதமராக மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ள புஷ்ப கமல் தஹல் அவர்களுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். நேபாளத்தின் பிரதமராக மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளதையிட்டு இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமர் என்ற வகையில் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். ஆழமான நட்புறவையும் நெருங்கிய உறவுகளையும் கொண்ட நெருக்கமான தெற்காசிய அயல் நாடுகளான இலங்கையும் நேபாளமும், இரு நாடுகளும் எதிர்கொள்ளும் தற்போதைய சவால்களை வெற்றிகொள்ளவும், ஒத்துழைப்பிற்கான புதிய வாய்ப்புகளை … Read more

மாணவி ஒருவரின் மோசடி செயல்! நீதவான் பிறப்பித்துள்ள உத்தரவு

முகநூலில் விளம்பரம் செய்து இலட்சக்கணக்கான பணத்தை மோசடி செய்த  மாணவியை கிருலப்பணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.   சொக்லேட் விளம்பரம் செய்து இவ்வாறு ஐந்து இலட்சம் ரூபா வரையில் மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   பலவிதமான சொக்லேட்டுகளை விற்பதாக முகப்புத்தகத்தில் விளம்பரம் செய்துள்ளார். அதன்படி, விண்ணப்பித்தவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு இந்த மோசடி செய்தது தெரியவந்துள்ளது. கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர் கிரம பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதவான் பிறப்பித்த உத்தரவு இந்த முன்பதிவுகள் அதே … Read more

சர்ச்சைக்குரிய குறுஞ்செய்தி! தினேஷ் சாப்டர் மரணத்தில் நீடிக்கும் மர்மம்

மர்மமான முறையில் உயிரிழந்த தமிழ் வர்த்தகர் தினேஷ் சாப்டரின் மரணம் குறித்து   தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  இந்த நிலையில் தினேஷ் சாப்டரின் மரணம் குறித்து அவரது மாமியாரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சர்ச்சைக்குரிய குறுஞ்செய்தி தொடர்பில் அவரிடம் இவ்வாறு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  மாமியாருக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி வர்த்தகர் தினேஷ் சாப்டர் உயிரிழப்பதற்கு சில நாட்களுக்கு மன்னர் அவரது மாமியாருக்கு இந்த குறுஞ்செய்தியை அனுப்பி வைத்துள்ளார்.  மிகச் சிறந்த மகளை வளர்த்தமைக்கு உங்களிற்கு … Read more

சிறந்த உணவுகள் பட்டியலில், இந்தியாவுகளுக்கு 5 ஆம் இடம்

உலகின் தலைசிறந்த உணவுகள் என்ற பட்டியலில் இந்திய உணவுகளுக்கு 5 ஆம் இடம் இடம் கிடைத்துள்ளது. Taste atlas என்ற அமைப்பு உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள பொதுமக்களிடம் சுவை மிகுந்த உணவுகள் குறித்து கருத்துகளை கேட்டு தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் 4.72 புள்ளிகளுடன் இத்தாலிய உணவுகளுக்கு முதலிடமும், கிரீஸ், ஸ்பெயின், ஜப்பான் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளன. 4.54 புள்ளிகளுடன் இந்தியாவுக்கு 5ஆவது இடம் கிடைத்துள்ளதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது. இந்திய … Read more

மூடப்படும் நிறுவனங்கள்! 15 ஆயிரம் பேர் வேலை இழக்கும் அபாயம்

சுதந்திர வர்த்தக வலயங்களில் பணிபுரியும் சுமார் 15 ஆயிரம் ஆடைத் தொழிலாளர்கள் அடுத்த வருடம் முதல் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர் மையத்தின் அமைப்பாளர் காமினி ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.   14 சுதந்திர வர்த்தக வலயங்களில் 148,000 ஆடைத் தொழிற்றுறை தொழிலாளர்கள் உள்ளனர்,  இங்குள்ள அதிக செலவு காரணமாக ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன.  புதிய வரிச் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட  பிறகு மேலும் பல தொழிற்சாலைகளும் மூடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். … Read more

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் களுத்துறை மாவட்ட …….

களுத்துறை மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்குமாறு அந்த அதிகாரசபைக்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேற்று (27) அறிவித்திருந்தார். இது தொடர்பான அறிக்கை நேற்று (27) விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் கையளிக்கப்பட்டதன் பிறகு அவரது ஆலோசனைப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். இந்த நிதி மோசடி … Read more