இலங்கையில் இணையத்தின் ஊடாக பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு எச்சரிக்கை

இணையத்தின் ஊடாக பல்வேறு பொருட்களை விற்பனை செய்வதாக விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றி இரண்டு கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகையை மோசடி செய்த கும்பலில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரையில் இந்த ஒழுங்கமைக்கப்பட்ட கும்பலினால் பாதிக்கப்பட்ட 32 பேர் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர்கள் நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் வசிப்பவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர்களில் வங்கி மேலாளர்கள், விரிவுரையாளர்கள், … Read more

கன்சர்வேடிவ் கட்சி படும் தோல்வியை சந்திக்கும்!பிரித்தானியாவின் சர்ச்சைக்குரிய நபர் எச்சரிக்கை

பிரித்தானியாவின் சர்ச்சைக்குரிய நபராக அழைக்கபடும் முன்னாள் அமைச்சர் ஜேக்கப் ரீஸ்-மோக் பிரித்தானிய கன்சர்வேடிவ் கட்சி தவிர்க்க முடியாத தோல்வியை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரித்தானியாவில் 202 5ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கன்சர்வேடிவ் கட்சி தொழிலாளர் கட்சியை விட 20 புள்ளிகள் குறைவடைந்துள்ளமையினால் இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கயைம, முன்னாள் அமைச்சருமான ஜேக்கப் ரீஸ்-மோக் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பதிலாக தேர்தலில் களமிறங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. … Read more

அம்பாறையில் பலப்படுத்தப்பட்டுள்ள இராணுவ பாதுகாப்பு

இலங்கை அரசாங்கத்தால் நாடு முழுவதும் பாதுகாப்பினை பலப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முழுமையாக பாதுகாப்பு நடவடிக்கைகளை இராணுவத்தினர் மேற்கொண்டுள்ளனர். அம்பாறையில் கரையோரப் பிரதேசங்களான கல்முனை, காரைதீவு, சாய்ந்தமருது, நிந்தவூர், சம்மாந்துறை, அக்கரைப்பற்று போன்ற பிரதேச முக்கிய சந்திகளில் இராணுவம் பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கமைய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர். சம்மாந்துறை கல்முனை நகர் பகுதியில் பெரும்பாலான வர்த்தக நிலையங்களிற்கு முன்பாகவும் மின்தடை ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில் மக்களின் பாதுகாப்பினi கவனத்திற் கொண்டும் இராணுவத்தினர் செயற்பட்டு வருகின்றனர். … Read more

பல கோடி ரூபா மோசடி! சிறையில் இருந்து வெளியே வந்த திலினியின் அறிவிப்பு

தான் சிறையில் ஓய்வாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்ததாக, பாரிய நிதி மோசடியுடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள திலினி பிரியமாலி தெரிவித்துள்ளார். பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு  விளக்கமறியலில்  தடுத்துவைக்கப்பட்டிருந்த திகோ குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் திலினி பிரியமாலி இன்று மாலை பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். திலினி பிரியமாலிக்கு தலா 50,000 ரூபா பெறுமதியான 08 சரீரப் பிணைகளும், தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான 20 சரீரப் பிணைகளும் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கவலை இல்லை … Read more

வர்த்தகர் தினேஷ் ஷாப்ட்டரின் மர்ம மரணம்! உத்தியோகபூர்வ தகவல்கள் குறித்து ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட செய்தி

மர்மமான முறையில் உயிரிழந்த பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  அலுவலகம் விசேட  அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.  தினேஷ் ஷாப்டரின் மரணத்துடன் தொடர்புடைய ஊடக செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.    பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் குறித்து குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியிடப்படும் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் ஊடகங்களில் வெளியாகும் பல்வேறு தகவல்கள் காரணமாக, சில … Read more

யாழில் டெங்கு நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு

கடந்த 10 வருடங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் (2022) டெங்கு நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் வைத்திய அதிகாரி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மாவட்ட மட்ட சுகாதார மேம்பாட்டுக் குழு கூட்டம் ,யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (27) நடைபெற்ற போதே வைத்திய அதிகாரி இதனை குறிப்பிட்டார். இந்த வருடம் டெங்கு நோய் தாக்கத்திற்குள்ளானவர்களாக 3,294 பேர் … Read more

லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!

எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.   இதன்படி, எதிர்வரும் நாட்களில் விநியோகிப்பதற்கு தேவையான எரிவாயு போதுமான அளவு கையிருப்பில்  இருப்பதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.  இதன் காரணமாக பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  இது தொடர்பில் அவர் மேலும்  தெரிவிக்கையில்,  நுகர்வுக்கு தேவையான அளவு எரிவாயு கையிருப்பில் உள்ளது. கோவிட் தொற்று காரணமாக இரண்டு வருடங்களின் பின்னர் நத்தார் மற்றும் புதுவருட கொண்டாட்டங்கள் காரணமாக … Read more

பருத்தித்துறை நகர சபை புதிய தவிசாளர் தெரிவு ஒத்திவைப்பு

யாழ்., வடமராட்சி, பருத்தித்துறை நகர சபைக்கான புதிய தவிசாளர் தெரிவு கோரல் இன்மையால் ஒத்திவைக்கப்பட்டது. கடந்த 5 ஆம் திகதி அன்று பருத்தித்துறை நகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட வேளை ஒரு மேலதிக வாக்கால் அது தோற்கடிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 19 ஆம் திகதி மீண்டும் வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளை சிறிது நேரம் முன்னராக தவிசாளர் யோ. இருதயராஜா … Read more

ஜனவரி முதல் “சாரதி திறன் மதிப்பெண்” முறை

வாகனங்களை செலுத்தும் பொழுது சாரதிகளினால் இடம்பெறும் தவறுகளுக்காக நடைமுறைப்படுத்தப்படும் “சாரதி திறன் மதிப்பெண் ” “Driver Skill Score System”  முறையை அடுத்த மாதம் தொடக்கம் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார். இதற்கமைவாக வாகனங்களை செலுத்தும் பொழுது சாரதிகளினால் நெடுஞ்சாலைகளில் மேற்கொள்ளப்படும் தவறுக்கு புதிய முறையில் புள்ளி வழங்குதல் மற்றும் அதற்கான தண்டனை வழங்குவதற்கான முறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதற்கான ஆரம்ப நடைமுறைகள் தற்பொழுது தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை அமைச்சரவையின் அனுமதிக்காக … Read more

கிளிநொச்சி புதிய பேருந்து நிலையம் விரைவில் மக்களிடம்….

நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள கிளிநொச்சி புதிய பேருந்து நிலையம் விரைவில் மக்களிடம் கையளிக்கப்படும். நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இது தொடர்பான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த பேருந்து நிலையத்தின் நிர்மாணப் பணிகளுக்காக செலவிடப்பட்ட மொத்தத் தொகை 94 மில்லியன் ரூபா ஆகும்.  2016ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டு வரை இலங்கை பொறியியல் கூட்டுத்தாபனம் இதன் ஒருபகுதியில் நிர்மாணப் பணிகளை மேற்கொண்டது. பின்னர், நகர அபிவிருத்தி அதிகாரசபை … Read more