இராஜதந்திர ,உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பவர்களுக்கான வீசா 2022 டிசம்பர் 24 முதல் இலங்கை , கம்போடியாவால் விலக்கு

Sri Lanka and Cambodia Exempt Visa for holders of Diplomatic and Official Passports with effect from 24 December 2022 The Agreement on Exemption of Visa Requirements for holders of the Diplomatic and Official Passports between Sri Lanka and Cambodia signed on 10 May 2022, at the Ministry of Foreign Affairs and International Cooperation at Phnom … Read more

யாழில் போதைமாத்திரைகள் வைத்திருந்த இளைஞர்கள் கைது!

18 கிராம் உயிர்கொல்லி ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஆயிரம் உயிர்கொல்லி போதைமாத்திரைகளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்., ஆனைக்கோட்டை – ஆறுகால்மடம் மற்றும் கொக்குவிலைச் சேர்ந்த 24, 25 வயதுடைய இருவரே இவ்வாறு நேற்று மாலை கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான குழுவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர். கொழும்பிலிருந்து ஒருவர் இவற்றை வழங்கினார் என்று … Read more

08 அமைச்சரவை அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

08 அமைச்சரவை அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு, நீர்ப்பாசன மற்றும் கல்வி அமைச்சுக்களின் செயலாளர்களின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீடிப்பு. 2023 ஜனவரி 01, முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இந்த நியமனங்களை வழங்கியுள்ளார். இதன்படி, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் புதிய செயலாளராக, எம்.எம்.பி.கே. மாயாதுன்னே நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இதற்கு முன்னர் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி … Read more

களுத்துறை மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் ….

களுத்துறை மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் பிரசன்ன…  களுத்துறை மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை உடனடியாக வழங்குமாறு விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகார சபைக்கு அறிவித்துள்ளார். கடன் பெற்றவர்களின் கடன் தவணைகளில் பல கோடி ரூபா … Read more

அக்குரணை நகருக்கான நீர் ,மின்விநியோகம் வழமை நிலைக்கு திரும்பியுள்ளது

அக்குரணை நகருக்கான நீர் மற்றும் மின்விநியோகம் வழமை நிலைக்கு திருப்பியுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக பிரதான மின்விநியோகக் கம்பம் சரிந்து வீழ்ந்து, நீர்விநியோகக் குழாய் வெடித்திருந்ததால், அக்குரணை நகரின் பல இடங்களில் நீர் மற்றும் மின்விநியோகம் பாதிக்கப்பட்டிருந்தது. திருத்தப் பணிகள் பூர்த்தியாகி, விநியோகம் சீர்செய்யப்பட்டுள்ளது. வெள்ளத்தால் சேறு படிந்த வீதிகளையும், கட்டடங்களையும் சுத்தப்படுத்தி வருவதாக அக்குரணை பிரதேச சபையின் தவிசாளர் திரு.இஸ்திஹார் தெரிவித்துள்ளார். இதேவேளை பிங்கா-ஓயா பெருக்கெடுத்ததால் பெரிதும் பாதிக்கப்பட்ட அக்குரணை நகரில், வெள்ளப் பெருக்கு காரணமாக … Read more

மாணவர்களை போதைப்பொருள் காரர்களிடம் இருந்து மீட்டெடுக்க ஒத்துழைப்பு வழங்குமாறு பொலிஸார் கோரிக்கை

இரத்மலானை மற்றும் கல்கிஸை பிரதேசத்தில் முக்கிய பாடசாலை மாணவர்களை இலக்காக கொண்டு மாவா போதைப் பொருள்  விற்பனையுடன் சம்பந்தப்பட்ட நபர் ஒருவர் விற்பனைக்காக தயார்படுத்தி இருந்த 7200 மில்லிகிராம் மாவா  போதைப்பொருடன் கல்சிசை பொலிஸ் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இரத்மலானை பிரதேசத்தை சேர்ந்த 58 வயதான நபர்.. சந்தேக நபர் , கொழும்புக்கு கொண்டு வரப்பட்ட மாவா போதை பொருளை வீட்டிலிருந்து பொதி செய்து இரகசியமான முறையில் பாடசாலை வளவில் நடமாடி நீண்ட காலமாக விற்பனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். … Read more

2023ஆம் ஆண்டுக்கான விடுமுறைகள்! வெளியான அறிவித்தல்

எதிர்வரும் 2023ஆம் ஆண்டிற்கான விடுமுறை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.  விடுமுறை நாட்களை பட்டியலிட்டு வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.  பொது விடுமுறைகள் மற்றும் வங்கி விடுமுறைகள் என்பன உள்ளடங்கிய அறிவித்தலே இவ்வாறு வெளியாகியுள்ளது.  Source link

இலங்கைக்கு சுற்றுலா பயணத்தை மேற்கொள்ளுமாறு பிரபல பிரிட்டன் பத்திரிக்கை கோரிக்கை

குறைந்த செலவுடனான விசேட விடுமுறை பொதி வழங்கப்படுவதாகவும், இதனால் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பிரிட்டனின் பிரபல பத்திரிக்கையான டெய்லி மெயில் Daily Mail  உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த பத்திரிகையில் இது தொடர்பாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கையில் தற்போது வழங்கப்படும் சொகுசு சுற்றுலா பொதியை பெற்றுக்கொள்வதற்காக மிக குறைந்த தொகையை ஒதுக்குவதற்கான சந்தர்ப்பம் சுற்றுலா பயணிகளுக்கு நீண்ட காலத்திற்கு பின்னர் கிடைக்கும் சந்தர்ப்பமாகும். ஆர்ப்பாட்டம் மற்றும் உணவு பற்றாக்குறை முதலான அச்சத்தின் காரணமாக … Read more

அதிக வரவேற்பை பெற்ற யாழ் – சென்னை விமான சேவை – குறைக்கப்படும் கட்டணங்கள்

யாழ்ப்பாணத்துக்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவை இரு நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாரத்தில் மூன்று நாட்கள் இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திற்கு விமானங்கள் வந்து அன்றைய தினமே இந்தியாவிற்கு திரும்பும். ஒரு விமானப் பயணத்தில் 60 பயணிகளுக்கு பல வசதிகளுடன் பயணிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கட்டுநாயக்காவுக்கும் சென்னைக்கும் இடையிலான விமானப் பயணச்சீட்டுக் கட்டணங்களும் … Read more