கல்வி நிர்வாக சேவையில் 800 வெற்றிடங்கள்

கல்வி நிர்வாக சேவையில் சுமார் 800 வெற்றிடங்கள் இருப்பதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இந்த வெற்றிடங்களை பூரணப்படுத்துவதற்கு விரைவில் பரீட்சை நடத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார். இதேவேளை ,அரசாங்கத்தின் புதிய ஓய்வு கொள்கைக்கு அமைவாக இம்மாதம் 31 ஆம் திகதி ஓய்வு பெறும் கல்வி அமைச்சின் அதிகாரிகளின் வெற்றிடங்களுக்கு தகுதியானவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் நடைமுறைக்கு வரும் புதிய முறைமை

சாரதி செய்யும் தவறுகளுக்கு புள்ளிகளை குறைத்து அதனுடன் தொடர்புடைய தண்டனைகளை விதிக்கும் புதிய முறைமையை இலங்கையில் நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விடயத்தை மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, வீதியில் செல்லும் சாரதிகள் வாகனத்தை செலுத்தும் போது செய்யும் தவறுகளுக்கு புதிய முறைமையின் கீழ் தகுதி புள்ளிகள் வழங்கப்படவுள்ளது. அபராதங்களை விதிக்கும் முறை இந்த நிலையில் அது தொடர்பான அபராதங்களை விதிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இது … Read more

மழையுடன் கூடிய காலநிலை குறையும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழ முக்கம் வலுவிழந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக இலங்கை மீது தாக்கம் செலுத்திய தாழமுக்க தற்போது நாட்டை விட்டு மேற்கு கரையோரமாக நகர்ந்து வருவதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் மழையுடன் கூடிய காலநிலை குறையும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டவியல் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் மெரல் மென்டிஸ் கூறினார். மத்திய மலைநாட்டின் நீரேந்து பிரதேசங்களிலும் தாழ்வார பிரதேசங்களிலும் மழைவீழ்ச்சி குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரையோரப் பிரதேசங்களிலும் … Read more

பிரபல நடிகர் சுஷாந்த் சிங் உயிரிழந்த விவகாரம்! பரபரப்பை ஏற்படுத்தியுள்ள வாக்குமூலம்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தற்போது பரபரப்புத் தகவலொன்று வெளியாகியுள்ளது. அனைத்து மொழி ரசிகர்களிடத்திலும் பிரபலமான பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மும்பையிலுள்ள பாந்த்ரா இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று வரை சுஷாந்த் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது மர்மமாக இருக்கும் நிலையில் சுஷாந்த் சிங் உடலுக்கு உடற்கூராய்வு செய்தவரின் வாக்குமூலம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி அவர் கூறுகையில், சுஷாந்த் … Read more

மண்சரிவு தொடர்பாக எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம்

குறைந்தளவான மழை பெய்தாலும், மண்சரிவு தொடர்பாக எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ; ஊடகப் பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி கூறினார். மலைப்பாங்கான பிரதேசங்களில், புதிதாக கட்டடங்களை அமைக்கும் போது, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் அனுமதி பெறப்பட வேண்டும். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் வழங்கப்படும் முன்கூட்டிய … Read more

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களில் மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு ,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 டிசம்பர்27ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 டிசம்பர்27ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை … Read more

இரட்டைக் குடியுரிமை பெற்றுக்கொள்ள பலர் விண்ணப்பம்

இரட்டைக் குடியுரிமை பெற்றுக் கொள்வதற்கு பலர் விண்ணப்பம் செய்துள்ளனர். கடந்த 2021ம் ஆண்டில் இரட்டைக் குடியுரிமை பெற்றுக் கொள்வதற்காக 5401 பேர் குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தில் விண்ணப்பம் செய்துள்ளனர். இவ்வாறு விண்ணப்பம் செய்தவர்களில் 1621 பேர் அவுஸ்திரேலியாவில் வசிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த 885 பேரும், அமெரிக்காவைச் சேர்ந்த 795 பேரும், கனடாவைச் சேர்ந்த 371 பேரும் விண்ணப்பம் செய்துள்ளனர். வழங்கப்பட்டுள்ள கடவுச்சீட்டுகள் மேலும், சுவிட்சர்லாந்து, சுவீடன், நியூசிலாந்து, பிரான்ஸ், டென்மார்க் உள்ளிட்ட நாடுகளைச் … Read more

குத்தகை வாகனங்கள் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் வெளியிட்ட சுற்றறிக்கை!

மாதாந்த கட்டணத்தைச் செலுத்தாதபோது, குத்தகை நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் வாகனங்களைக் கைப்பற்றுவதற்கு முயற்சிப்பின் வாகன உரிமையாளர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தால், அந்த நிறுவனங்கள் மாவட்ட நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொலிஸ் மா அதிபர் வெளியிட்டுள்ள புதிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாகனங்கள் கொள்ளை, திருட்டு போன்ற குற்றங்கள் நடந்தால், பொலிஸார் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அந்தச் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முறைப்பாடு மாதாந்த கட்டணத்தைச் செலுத்தாதபோது, குத்தகை … Read more

புதிய இலங்கைத் தூதுவர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் விசேட சந்திப்பு…

புதிய இலங்கைத் தூதுவர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் விசேட சந்திப்பு… முதலீட்டு ஈர்ப்பு, ஏற்றுமதி மற்றும் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் புதிய இராஜதந்திரத்தின் முக்கியத்துவம் குறித்து பிரதமர் வலியுறுத்து…. பாரம்பரிய இராஜதந்திர முறைக்குப் பதிலாக பொருளாதார இராஜதந்திரத்திற்கு உலகம் முன்னுரிமை அளித்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். இலங்கையின் புதிய தூதுவர்களுக்கும் பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களுக்கும் இடையில்  (டிசம்பர் 26) அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த கலந்துரையாடலில் 16 … Read more