அடைமழை: கண்டி மாத்தளை மாவட்டங்களில் கூடுதல் பாதிப்பு

அடைமழை காரணமாக மத்திய மாகாணத்தில் உருவான இடர்நிலையைத் தணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண பிரதம செயலாளர் காமினி ராஜரட்ன தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட சகல அரச திணைக்களங்களுடனும் இணைந்து, மீட்பு நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து வருவதாக திரு. ராஜரட்ன தெரிவித்தார். இடர்காப்பு முகாமைத்து நிலையம் இன்று காலை விடுத்த புள்ளிவிபரங்களுக்கு அமைவாக கண்டி, மாத்தளை மாவட்டங்களில் கூடுதல் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. கண்டி மாவட்டத்தில் இரு மரணங்கள் சம்பவித்தன. மத்திய மாகாணம் முழுவதிலும் 375 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 630 பேர் … Read more

காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. இது மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை கன்னியாகுமரி கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளுக்கு நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,தமிழகத்தில் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு … Read more

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சுனாமி நினைவு கூறல்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சுனாமி நினைவு கூறல் அனுஷ்டிக்கப்பட்டது மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த் தலைமையில் மாவட்ட செயலக வளாகத்தில் தேசிய பாதுகாப்பு நிகழ்வு இன்று இடம்பெற்றது. சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 18 வருடங்கள் பூர்த்தியாகின்றதை முன்னிட்டு உயிரிழந்தவர்களை நினைவுகூறும் முகமாக ஈகை சுடர் ஏற்றி காலை 9.25 முதல் 9.27 வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந் நிகழ்வில் மேலாதி அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்ஜனி முகுந்தன் … Read more

வீட்டிற்கு செல்லும் பெருமளவு அரச ஊழியர்கள்!

ஓய்வுபெறும் அரச ஊழியர்களுக்கு பதிலாக புதிய அரச ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் செயலாளர் அனுர திசாநாயக்க தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அரச ஊழியர்கள் 60 வயதில் ஓய்வுபெற வேண்டும் என்ற அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைய இந்த வருட இறுதியில் பெருமளவான அரச ஊழியர்கள் ஓய்வுபெறவுள்ளனர். இந்த நிலையில் அரச ஊழியர்களை சமநிலைப்படுத்தும் நோக்கில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் பரிந்துரைகள் இந்த குழுவில் … Read more

அம்பாறை மாவட்டத்தில் பரவலாக மழை

அம்பாறை மாவட்டத்தில் இன்று  (26) காலை 08.30 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலத்துக்குள் சாகாமம் பிரதேசத்தில் 49.0 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. தீகவாபி பிரதேசத்தில் 38.2 மில்லிமீற்றரும், அக்கரைப்பற்று பிரதேசத்தில் 35.4 மில்லிமீற்றரும், எக்கல் ஓயா பிரதேசத்தில் 26.0 மில்லிமீற்றரும், லகுகல பிரதேசத்தில் 22.5 மில்லிமீற்றரும், இங்கினியாகல நீர்ப்பாசனக் குளத்தில் 15.2 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளதாக பொத்துவில் வானிலை அவதான நிலைய கடமை நேரப் பொறுப்பதிகாரி ஏ.எஸ். சாதிக் தெரிவித்துள்ளார். மாலை வேளையில் பலத்த காற்றுடன் … Read more

அம்பாறை மாவட்டத்தில், சுனாமி நினைவேந்தல் நிகழ்வு

சுனாமி கடற்பேரழிவுக்கு 18 ஆண்டுகள் நிறைவடைவதையடுத்து அம்பாறை மாவட்டத்தில் நினைவேந்தல் நிகழ்வு இன்று (26) இடம்பெற்றது. கடற்போரழிவினால் பெரும் உயிரிழப்பு உடமைகள், சொத்துக்கள் என பாதிப்பு இந்த மாவட்டத்திலும் இடம்பெற்றது. மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பு ஏற்பாடு செய்த துஆ பிராத்தனை மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பள்ளிவாசல் கலாச்சார மண்டபத்தில் அமைப்பின் தலைவர் ஏ.எல்.எம். இம்தியாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் குரான் ஓதி தமாம் செய்யப்பட்டதுடன் சுனாமி நினைவுரையை மௌலவி எம்.ஜவாத் ரஸா பிர்தௌஸ் (அல் ஹாபிழ்) … Read more

கல்முனை மாளிகைக்காடு கமு/கமு/ அல்- ஹுசைன் வித்தியாலயத்தில்..

18 வரடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சுனாமிப்பேரலையில், கல்முனை கல்வி வலய மாளிகைக்காடு கமு/கமுஃ அல்- ஹுசைன் வித்தியாலயம் 58 மாணவர்களை இழந்தது. இதுதொடர்பான நினைவு தின நிகழ்வும், துஆ பிராத்தனையும் பாடசலை அதிபர் ஏ.எல்.எம்.ஏ. நழீர் தலைமையில் பாடசலையில் இன்று (26) இடம்பெற்றது.

தாழமுக்கம் வலுவிழப்பு – சில மாகாணங்களில் 75 மி.மீ மழைவீழ்ச்சி

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு ,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 டிசம்பர்26ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 டிசம்பர் 26ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது தாழமுக்கம் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக வலுவிழந்துள்ளதுடன் அது இன்று காலை (டிசம்பர் 26ஆம் திகதி) இலங்கையின் மேற்குக் கரையோரப் பிரதேசங்களுக்கு நகரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதி நாட்டை விட்டு விலகிச் செல்வதன் காரணமாக, இலங்கையின் வானிலையில் இதன் தாக்கம் இன்று … Read more