பிரதான நகரங்களுக்கான,வானிலை முன்னறிவிப்பு 26.12.2022
பிரதான நகரங்களுக்கான,வானிலை முன்னறிவிப்பு 26.12.2022
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
பிரதான நகரங்களுக்கான,வானிலை முன்னறிவிப்பு 26.12.2022
இலங்கைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை ,தேசியவளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப்பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 டிசம்பர் 26ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது தாழமுக்கம் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக வலுவிழந்துள்ளதுடன் அது இன்று காலை (டிசம்பர் 26ஆம் திகதி) இலங்கையின் மேற்குக் கரையோரப் பிரதேசங்களுக்கு நகரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதி நாட்டை விட்டு விலகிச் செல்வதன் காரணமாக, … Read more
ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டர் தற்கொலை செய்து கொண்டாரா என்பது தொடர்பில் குற்றப் புலனாய்வாளர்களின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஷாப்ட்டர் தனது மாமியாருக்கு (மனைவியின் தாய்) எழுதியதாகக் கூறப்படும் கடிதத்தின் அடிப்படையில் புலனாய்வாளர்களின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. உணர்ச்சிகரமான கருத்துகள் அடங்கிய கடிதம் மற்றும் அவருக்கு அனுப்பப்பட்ட அந்தக் விடயங்கள் அடங்கிய குறுஞ்செய்தி குறித்து புலனாய்வாளர்கள் விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். . தினேஷ் ஷாப்டர் பயணித்த காரில் யாரும் பயணிக்கவில்லை என்பதற்கு … Read more
யாழ்ப்பாணம் – சென்னைக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் விமானத்தில் பயணிக்க பெருமளவு பயணிகள் காத்திருப்பதாக யாழ்.சர்வதேச விமான நிலைய செயற்பாட்டு முகாமையாளர் லக்ஷ்மன் வன்சேகர தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவை கடந்த 12 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விமான சேவை ஆரம்பிக்கப்பட்டு எட்டு நாட்களில் சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் வந்த விமானத்தில் 60 பயணிகள் பயணித்துள்ளதாகவும், 48 பயணிகள் சென்னைக்கு திரும்பி சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் … Read more
கொழும்பு மற்றும் பல பகுதிகளில் காற்றின் தரம் மீண்டும் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது. இந்த நிலையில் அடுத்த சில நாட்களில் காற்று மாசுபாடு சற்று அதிகரிக்கும் என தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பு எச்சரித்துள்ளது. வளிமண்டலத்தில் தூசி துகள்கள் அதிகரிப்பதால் காற்றின் தரம் பாதுகாப்பற்ற நிலைக்கு செல்லும். இதனால் வரும் நாட்களில் நாட்டில் மூடுபனி போன்ற நிலை தோன்றும். இலங்கையில் காற்று மாசு இலங்கையின் காற்று மாசுபாட்டிற்கான முக்கிய காரணங்களில் ஒன்று இந்தியாவில் இருந்து வீசும் பலத்த … Read more
கடும் மழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கிய கண்டி ரயில் நிலையத்தில், வெள்ளம் தற்போது வடிந்துள்ளது. ரயில் நிலைய பகுதியை துப்புரவு செய்யயும் பணிகள் இடம்பெற்றுவருகின்றன. இதேவேளை, கடும் மழை காரணமாக கண்டி மாவட்டத்தில் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல பகுதிகளில் நீர் வடிந்துள்ளதாக எமது ஊடக அதிகாரிகள் தெரிவித்தனர். மலையகத்தின் சில பிரதேசங்களில் மண்சரிவு ஏற்பட்டிருக்கிறது. கிழக்கு மாகாணத்தில் இடிமின்னலுடன் மழை பெய்வருகிறது..
சீனாவில் இருந்து இந்தியா திரும்பியவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது மாதிரி, மரபணு வரிசைப்படுத்துதல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவின் ஷாகஞ்ச்(Shahganj) பகுதியை சேர்ந்த 40 வயதான நபர், சீனாவில் தங்கி பணிபுரிந்த நிலையில், விடுமுறையை ஒட்டி வீடு திரும்பியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அறிகுறி ஏதும் இல்லாவிட்டாலும் வீட்டிலேயே அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more
பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மக்கள் மக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். இந்த ஆண்டின் கடைசி மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, 2022-ம் ஆண்டு இந்தியாவிற்கு பல்வேறு விதங்களில் சிறப்பாக அமைந்ததாக நினைவுகூர்ந்தார். இந்த ஆண்டு ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளதாகக் கூறிய இந்திய பிரதமர் , ஜி-20 நிகழ்ச்சியை மிகப்பெரிய இயக்கமாக முன்னெடுக்க … Read more
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தமிழ்நாட்டில் தற்போது புதுப்பிக்க பாகிஸ்தான் புலனாய்வு சேவை (ஐஎஸ்ஐ) முயற்சிப்பதாக இந்திய செய்தி வெளியிட்டுள்ளது. தென்னிந்திய மாநிலத்தில் விடுதலைப் புலிகளின் மறுமலர்ச்சியைத் தூண்டுவதற்கு பாகிஸ்தானின் புலனாய்வு சேவை (ISI) முயற்சித்து வருவதாக இலங்கையின் ஊடகமொன்றினை மேற்கோள் காட்டி இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் மறுமலர்ச்சி விடுதலைப் புலிகளின் மறுமலர்ச்சியை ஏற்பட்டுத்துவதற்காக, சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் ஆயுத கடத்தல்களை மேற்கொண்டதாக கூறப்படும் ஒன்பது இலங்கையர்களை இந்தியாவின் தேசிய புலனாய்வு முகவரகம் … Read more
வங்காள தேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. தொடர் வெற்றியின் மூலமாக, இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை தக்கவைத்து கொண்டுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. 2 ஆண்டுகளில் ஒவ்வொரு அணியும் பெரும் வெற்றியின் வீதத்தின் அடிப்படையில், 2 அணிகள் இறுதிப்போட்டிக்கு … Read more