எல்.பி.எல் தொடரில் அடுத்த ஆண்டு புதிதாக ஒரு அணி

லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்) தொடரில் அடுத்த ஆண்டு புதிதாக ஒரு அணி சேர்க்கப்படவிருப்பதாக லங்கா பிரீமியர் லீக் தொடரின் பணிப்பாளர் சமன்த தொடன்வில தெரிவித்துள்ளார். 2023 தொடரில் வட மாகாணம் அல்லது வட மத்திய மாகாணத்தில் இருந்து புதிய அணி ஒன்றை பார்க்க முடியும் என்றும் அவர் கூறினார். இதேவேளை LPL தொடரின் இறுதிப் போட்டியில் Colombo Stars அணியை வீழ்த்தி தொடர்ந்து 3 ஆவது முறையாகவும் Jaffna Kings  அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.. … Read more

வானிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்:இலங்கைக்குள் நுழைந்துள்ள தாழமுக்கம் (video)

தென்மேற்கு வங்கான விரிகுடாவில் உருவான தாழமுக்கம் இலங்கையின் கிழக்கு கடற்கரை வழியாக இலங்கைக்குள் நுழைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த தாழமுக்க நிலை நாட்டை ஊடறுத்து செல்லவுள்ள நிலையில், எதிர்வரும் மணித்தியாலங்களில் நாட்டின் பல பாகங்களில் கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. எனவே, கடலுக்குச் செல்லும் போது கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளதுடன் மக்களுக்கும் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதலாம் இணைப்பு தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த … Read more

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: இலங்கை வழியாக குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளை நோக்கி நகரக்கூடும்

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 08:30 மணி அளவில் நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 320 கிலோமீட்டர் தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று மதியம் இலங்கை கடற்கரையை திரிகோணமலைக்கு தெற்கே கடந்து, மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து நாளை (26) காலையில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவக் கூடும். என்று சென்னை வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. … Read more

துணுவிலவில் வீடொன்றில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இரு சகோதரரிகள் உயிரிழப்பு

சீரற்ற காலநிலையினால் அக்குறணை, துணுவில பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மண்மேடு சரிந்து விழுந்ததினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரரிகள் உயிரிழந்துள்ளனர். இவர்கள் 18, 19 வயதுடையவர்களாவர். அனர்த்தம் நிகழ்ந்த போது வீட்டில் 5 பேர் தங்கியிருந்தனர். உயிரிழந்த இருவரின் மற்றுமொரு சகோதரி பலத்த காயமடைந்துள்ளார்.இந்த அனர்த்தம் இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதேவேளை, மண்மேடு சரிந்து விழ்ந்ததினால் மாவனெல்லையில் இருந்து ஹெம்மாதகம ஊடாக கம்பளைக்கு செல்லும் பிரதான வீதியில் மூன்றாவது மைல்கல் பகுதி வீதி … Read more

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் செயல்பட அறிவுறுத்தல்

தற்போது பெய்து வரும் மழையினால் பல பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வழிந்தோடும் நிலையை எட்டியிருப்பதாக எமது ஊடக பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யான் ஓயா மற்றும் ராஜாங்கனை நீர்த்தேக்கங்களின் 02 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் டி.அபேசிறிவர்தன தெரிவித்துள்ளார். தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 06 வான் கதவுகள் தலா 03 அடி வீதம் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் டி.அபேசிறிவர்தன தெரிவித்துள்ளார். தெதுறு … Read more

நான்கு மாவட்டங்களில் மண்சரிவு அனர்த்த நிலை

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நான்கு மாவட்டங்களில் மண்சரிவு அனர்த்த நிலை இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. கண்டி, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் இந்த அனர்த்த நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் பேச்சாளர் தெரிவித்தார். குறித்த பிரதேசங்களின் மலைப்பாங்கான மற்றும் சரிவான பிரதேசங்களில் வாழும் மக்கள் மண்சரிவுக்கான அறிகுறிகள் தென்பட்டால் அதுதொடர்பில் விளிப்புடன் செயல்படுமாறு நிறுவனம் அறிவித்துள்ளது..

சீரற்ற காலநிலையினால் மலையக ரெயில் சேவைகள் பாதிப்பு

சீரற்ற காலநிலையினால் மலையக ரெயில் சேவைகள் தற்காலிகமாக வரையறுக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் மண்மேடு சரிந்து விழுந்திருப்பதானாலேயே ரெயில் போக்குவரத்து வரையறுக்கப்பட்டிருப்பதாக ரெயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (25) இரவு சேவையில் ஈடுபடவிருந்த கொழும்பு-பதுளை, பதுளை-கொழும்பு ஆகிய இரண்டு இரவு நேர தபால் ரயில்களும், கோட்டையிலிருந்து காலை 9:45 மணிக்கு பதுளை நோக்கிச் செல்லவிருந்த ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பிலிமத்தலாவயில் இருந்து பேராதனை வரையான ரெயில் பாதையில்; மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. உலப்பனை … Read more

வளிமண்டல திணைக்களத்தினால் விசேட வானிலை அறிவிப்பு

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ,விருத்தியடைந்த தாழமுக்கம் இலங்கையின் கிழக்குக் கரை ஊடாக பிரவேசித்துள்ளதுடன், அது நாட்டுக்குக் குறுக்காக நகர்ந்துவருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று நண்பகல் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாழமுக்கம் நாளையளவில் (டிசம்பர் 26ஆம் திகதி) இலங்கையின் மேற்குக் கடற்பரப்புகளுக்கு நகரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் … Read more

ஜனாதிபதியின் நத்தார் தின வாழ்த்து

இருளை நீக்கி மனிதர்களிடத்தே சுபீட்சத்தை ஏற்படுத்தும் உண்மையான ஒளியின் வருகையையே நத்தார் பண்டிகைக் குறிக்கின்றது. ஏழைகள், ஒடுக்கப்பட்டோர் ஆகியோருக்கு விடுதலையைப் பெற்றுக் கொடுத்து விடுதலையின் மகிழ்ச்சியை பறைசாற்றும் ஒரு மகிழ்ச்சியான பண்டிகை இதுவாகும். பெத்லஹேமில் ஒரு ஏழைத் தொழுவத்தில் பிறந்த குழந்தையே இயேசு கிறிஸ்து ஆவார். இவர் உலகை யதார்த்தமாகப் பார்ப்பதில் பிறப்பிலிருந்தே முன்மாதிரியாகத் திகழ்ந்தார். சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களை விடுவித்து சிறந்த சமுதாயத்தை உருவாக்க அவர் தன் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தார். இலங்கையின் தற்போதைய சமூக, … Read more

பல மாகாணங்களில் 150 மி மீ. மேற்பட்ட கன மழை

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழ முக்கம் கிழக்கு கரையோரத்தின் ஊடாக நாட்டிற்குள் பரவேசித்து ,இலங்கை ஊடாக நகர்ந்துவருவதாக வளிமணடலவியல் திணைக்களம் இன்று (25) காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு, ஊவா, மேல் மத்திய , சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் பொலநறுவ மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மி மீ. … Read more