யேசு பிரான் அவதரித்த நத்தார் தினம் இன்றாகும்

சமாதானத்தின் தேவன் எனப் போற்றி புகழப்படும் யேசு பிரான் அவதரித்த நத்தார் தினம் இன்றாகும். .கிறிஸ்மஸ் (Christmas) அல்லது கிறிஸ்த்து பிறப்புப் பெருவிழா (நத்தார் ) ஆண்டு தோறும் இயேசு கிறிஸ்த்துவின் பிறப்பைக் குறிக்க கொண்டாடப்படும் விழாவாகும் உலகெங்கிலும் வாழும் கோடிக்கணக்கான கிறிஸ்தவர்;கள் யேசு பாலகனின் பிறப்பை இன்று(25) கொண்டாடுகிறார்கள். பெத்லஹேமில் ஒரு மாட்டுத் தொழுவத்தில் இவ்வுலகிற்கு அவதரித்த யேசுபாலகன் மனித வர்க்கத்தின் பாவங்களை நீக்குவதற்காக பிறந்ததை இன்றைய தினம் மக்கள் நினைவு கூருகின்றனர். பல்வேறு நாடுகளிலும் நத்தார் … Read more

பிரதமரின் நத்தார் தின வாழ்த்துச் செய்தி

உலகை யதார்த்தபூர்வமாக நோக்குவதற்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூருகின்ற நத்தார் பண்டிகையை, அன்பையும், மனித மாண்பையும், மனிதநேயத்தையும் மதிக்கும் ஒரு சமுதாயத்திற்கான புதியதோர் அடித்தளமாக ஆக்கிக்கொள்வோம். அது ஒடுக்கப்பட்ட மக்களை அதிலிருந்து விடுவித்து, சிறந்ததோர் சமுதாயத்தை உருவாக்க தன்னை அர்ப்பணித்த இயேசு கிறிஸ்துவின் போதனைகளின் அடிப்படையிலான உண்மையான காலத்தின் தேவையாகும். வெறுப்பையும் குரோதத்தையும் ஒழித்து, மோதல்கள் தீர்க்கப்பட்டு பொருளாதாரம் மற்றும் உணவுப் பயிர்கள் செழித்து விளங்கும் சுபீட்சமானதொரு இலங்கையை கட்டியெழுப்புவதற்கு இந்த நத்தார் தினத்தை … Read more

“உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனிதர்கள்மேல் பிரியமும் உண்டாவதாக” – லூக்கா 2:14

கிறிஸ்து பிறந்த திருநாள் இன்றாகும். இயேசு கிறிஸ்து பிரான் எப்பொழுதும் மக்களுக்கு பணக்காரர், ஏழை என்ற வேறுபாடு காட்டாத ஒரு உன்னதத் தலைவராவார். அவர்கள் இறைவனின் குழந்தையாக இந்தப் பூமியில் பிறந்த நாளில், மிகவும் ஏழ்மையான மற்றும் அப்பாவி மனித சமூகமாக இருந்த மேய்ப்பாளர்கள், தேவதூதர்கள் அவர்களுக்கு நல்ல செய்தியைக் கொண்டு வந்ததாக எடுத்துக்கொண்டனர். மிகவும் சவாலுக்கு மத்தியில் முழு உலகமும் நத்தார் பண்டிகையைக் கொண்டாடும் இந்நாளில் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியிலும் இறைவனின் நித்திய ஆன்மீக சுகம் … Read more

நத்தாரை முன்னிட்டு 309 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

நத்தாரை முன்னிட்டு 309 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் மூன்று பெண்களும் அடங்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் நாளை சிறைகளில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜெனரல் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு , அரசியலமைப்பின் 34 ஆவது சரத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக கைதிகள் அனைவருக்கும் விசேட பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். அதன்படி,பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ள தண்டனையை அனுபவித்துவரும் கைதிகளின் எண்ணிக்கை 237 ஆகும். தண்டனைக்ககாலம் ஒரு மாதம் குறைக்கப்பட்ட … Read more

போதைப் பொருள் குற்றச் சாட்டு: சட்டத்தை அமுல்படுத்துவதற்கு மேல் நீதிமன்றம்

போதைப் பொருள் பகிர்ந்தளிக்கும் குற்றச் சாட்டுக்களுக்கு உள்ளாபவர்களுக்கு எதிராக விரைவாக சட்டத்தை அமுற்படுத்துவதற்கு மேல் நீதிமன்றத்தை ஸ்தாபித்தல் போன்றவற்றை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக் ஷ தெரிவித்துள்ளார். போதைப்பொருள், நாட்டிற்குள் வருவதைத் தடுப்பதற்காக முப்படையினருடன் இணைந்து அரசாங்கம் விசேட வேலைத்திட்டத்தை ஆரம்பித்திருப்பதாக தெரிவித்த அமைச்சர், ஐஸ் போதைப் பொருளை தடைசெய்யப்பட்ட பொருளாக கருதும் சட்டம் இயற்றல், கடற்படை, சுங்கத் திணைக்களம் ஆகிய பிரிவுகளைப் பலப்படுத்தி ,தேடுதல் நடவடிக்கையினை ஆரம்பித்தல் மற்றும் போதைப் பொருள் பகிர்ந்தளிக்கும் குற்றச் சாட்டுக்களுக்கு … Read more

தனவரவை பெறப்போகும் இரு ராசிக்காரர்கள்: அதிலும் மிதுன ராசிக்காரர்களுக்கு-நாளைய ராசிபலன்

இன்னும் சில நாட்களில் புது வருடம் பிறக்கப்போகின்றது. இந்த புதிய வருடத்தில் எந்தெந்த ராசியினருக்கு எப்படி அமைய போகின்றது என்பது அனைவரின் மனதிலும் இருக்கும் ஓர் விடயமாகும். மகிழ்ச்சியும் மன நிம்மதியான வாழ்க்கையைத்தான் இன்றைக்கு பலரும் விரும்புகின்றனர். பொருளாதார வளம் இருந்தாலே பலருடைய மனதிலும் நிம்மதி குடியேறும் நிலையில் தற்போதைய சூழ்நிலை அமைந்துள்ளது. எனவே இவ்வாறான நிலையில் நாளைய தினம் தனவரவை பெறப்போகும் இரு ராசியினர் யார் என்பதை பார்க்கலாம். உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து … Read more

இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் வகையில் ,கிறிஸ்தவ மக்கள் ஆன்மீக நடவடிக்கைகளில்….. ..

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடுவதற்காக, கிறிஸ்தவ மக்கள் ஆன்மீக ரீதியான தயார்படுத்தலில் ஈடுபட்டுள்ளதாக எமது பிராந்திய ஊடக அதிகாரிகள் தெரிவித்தனர்.. வறிய மக்களுக்கு உதவுவதே இந்த வருட நத்தார் தினத்தின் தொனிப்பொருள் என கொழும்பு உயர் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி மெக்ஸ்வெல் சில்வா தெரிவித்துள்ளார். இதேவேளை பேராயர், கர்தினால் மல்க்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலான நத்தார் தின நள்ளிரவு ஆராதனை பன்னிப்பிட்டிய கிறிஸ்து ராஜா தேவாலயத்தில்; இன்றிரவு 11.45க்கு ஆரம்பமாகும். தமிழ் மொழி மூலமான நத்தார் நல்லிரவு ஆராதனைகள் … Read more