அமெரிக்ககாவில் பனிப்புயல்: 250 மில்லியன் அமெரிக்கர்கள் , கனேடியர்கள் பாதிப்பு

அமெரிக்காவை பாதித்துள்ள பனிப்புயல் காரணமாக இதுவரையில் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த புயலினால் அமெரிக்காக மற்றும் கனடா நாட்டைச் சேர்ந்த சுமார் 250 மில்லியன் மக்ககள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். புயலின் விளைவாக அமெரிக்காவில், 1.5 மில்லியன் மக்கள் ஏற்கனவே மின்சார துண்டிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெக்சாஸில் இருந்து கனடாவின் கியூபெக் சிட்டி வரை 3200 கிலோமீற்றர்களுக்கு பனிப்புயல் பரவியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் … Read more

இரண்டு நாட்களுக்கு மழை .காற்று அதிகரிக்கும்

இலங்கைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை ,தேசியவளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப்பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 டிசம்பர்25ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2022டிசம்பர்24ஆம் திகதிநண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் திருகோணமலைக்கு வடகிழக்காக 350 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. அது நாளை இலங்கையைக் கடக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதியின் தாக்கம் காரணமாக அடுத்த இரண்டு நாட்களில்(டிசம்பர் 25ஆம், 26ஆம் திகதிகளில்) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை நிலைமையும் காற்று நிலைமையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. … Read more

தாழமுக்கம் நாளை இலங்கையை கடக்கக் கூடிய சாத்தியம்

இலங்கைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை ,தேசியவளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப்பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 டிசம்பர் 24ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் திருகோணமலைக்கு வடகிழக்காக 350 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. அது நாளை இலங்கையைக் கடக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனவே, மன்னாரிலிருந்து காங்கேசந்துறை, திருகோணமலை, மற்றும்மட்டக்களப்புஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்டஆழம்கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளிலும் தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும்(07N – 17N, 80E … Read more

இம்மாத இறுதியில் ஓய்வுபெறவுள்ள 25000 அரச ஊழியர்கள்! எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

ஓய்வுபெறும் அரச ஊழியர்களுக்கு பதிலாக புதிய அரச ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வது குறித்து பரிசீலிக்க பொது நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசெம்பர் 31ஆம் திகதியுடன் 60 வயது பூர்த்தியான 25 ஆயிரம் அரச ஊழியர்கள் ஓய்வு பெறவுள்ளனர். இந்நிலையில், இவ்வாறு ஓய்வுபெறவுள்ள 25 ஆயிரம் அரச ஊழியர்களுக்கும் குறைவான ஊழியர்களை மாத்திரமே திரும்ப அரச சேவையில் இணைத்துக் கொள்ள அமைச்சு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓய்வுபெறும் வயதை நீட்டிக்க … Read more

ஒரு கிலோ கிராம் ஏலக்காயின் விலை 14,000 ரூபா வரை அதிகரிப்பு

தற்போது சந்தையில் ஒரு கிலோ கிராம் ஏலக்காயின் விலை 12000; முதல் 14000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. நாட்டில் பயிரிடப்படும் ஏலக்காயின் அளவு குறைந்துள்ளமையே இந்த விலை அதிகரிப்புக்கு காரணம் என்று தேசிய மசாலாப் பொருட்கள் விற்பனைச் சபை தெரிவித்துள்ளது. பதப்படுத்தப்பட்ட ஒரு கிலோ கிராம் ஏலக்காக்கு சுமார் ஆறு கிலோ கிராம் பச்சை ஏலக்காய் தேவைப்படுவதுடன், சந்தையில் ஒரு கிலோ கிராம் பச்சை ஏலக்காயின் விலை தற்போது 7000 – 8000 ரூபாய் வரை உள்ளது. … Read more

விமானப் பணிப்பெண் ஆட்சேர்ப்பு நிறுவனம் என்ற போர்வையில் பாலியல் இலஞ்சம்

விமானப் பணிப்பெண் ஆட்சேர்ப்பு நிறுவனம் என்ற போர்வையில், இணையவழியூடாக நேர்முகப் பரீட்சை நடாத்தி, அழகான பெண்களின் நிர்வாணப் புகைப்படங்களை பெற்றுக்கொண்டு பாலியல் இலஞ்சம் பெற முயன்ற ஒருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஹங்குரன்கெத்த பிரதேசத்தைச் சேர்ந்த, நீர்ப்பாசன வடிகாலமைப்பு சபையில் பணிபுரிகின்ற ஒருவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. குற்றப்பபுலனாய்வுத் திணைக்களத்தின், கணனி மோசடி விசாரணைப்; பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லகீ ரன்தெணியவிடம், சம்பவத்திற்குள்ளான மாத்தளை மற்றும் கண்டி பிரதேசங்களைச் சேர்ந்த … Read more

ஒலிம்பியாட் பதக்கம் வென்றவர்கள்

அபாகஸ் ஒலிம்பியாட் சர்வதேசப் போட்டியில் கலந்து கொண்ட இலங்கையைச் சேர்ந்த மாணவர்கள் 18 பதக்கங்களை வென்று நேற்று (23) நாட்டை வந்தடைந்தனர். இப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 18 மாணவர்கள் பங்குபற்றியுள்ளனர்.  18 மாணவர்களும் பதக்கங்களை வென்றுள்ளமை விசேட அம்சமாகும். தாய்வானின் தாய்பே நகரில் கடந்த 12 முதல் 20 வரை நடைபெற்றது. இந்த அபாகஸ் ஒலிம்பியாட்டு போட்டி பல வயதுக் குழுக்களின் அடிப்படையில் நடைபெறும் உலகின் அதிவேக கணிதப் போட்டியாகும்.

முல்லைத்தீவில்  தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொழில் வாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கும் நேக்கில் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு (23) முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.  முல்லைத்தீவு மாவட்ட செயலக மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தொழில் வாய்ப்பிற்கு தேவையான உள ஆற்றலை மேம்படுத்துவது எவ்வாறு, நேர்முகப் பரீட்சையை எதிர்கொள்வது எவ்வாறு, தொழில்வாய்ப்பில் இணைவது எவ்வாறு போன்ற விடயங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.   கல்விப் பொதுத்தராதார உயர்தரம் மற்றும் பட்டப்படிப்பை நிறைவு … Read more

பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு! நபரொருவர் 24 மணிநேர கண்காணிப்பில் – வெளியாகும் தகவல்

பிரபல வர்த்தகர் தினேஷ் சாப்டர் படுகொலை விவகாரத்தில் இதுவரையிலான விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் சந்தேகத்தை தோற்றுவித்துள்ள நபர் ஒருவரை சி.ஐ.டி சிறப்புக் குழுவொன்று 24 மணிநேரமும் கண்காணித்து வருகிறது. குறித்த நபர் தொடர்பில் இதுவரையில் உறுதியான சாட்சியம் ஒன்று விசாரணையாளர்களுக்கு கிடைக்காத நிலையிலேயே அவரைக் கைது செய்யாது பல கோணங்களில் சிறப்பு விசாரணைகள் இடம்பெறுவதாக விசாரணையாளர்கள் தெரிவித்தனர். தினேஷ் சாப்டர் கொலை செய்யப்பட முன்னர், கொலை செய்யப்பட்ட பின்னர் குறித்த நபரின் நடவடிக்கைகள் தொடர்பில் சிறப்பு … Read more