இலங்கை
125 மஹிந்திரா SUVக்கள் இலங்கை பொலிசாருக்கு கையளிப்பு
இந்தியாவிலுள்ள மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 125 SUVக்கள் இந்திய உயர் ஸ்தானிகர் கௌரவ கோபால் பாக்லே அவர்களால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ டிரான் அலஸ் அவர்களிடம் 2022 டிசம்பர் 22ஆம் திகதி வைபவரீதியாக கையளிக்கப்பட்டிருந்ததுடன் இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திரு.எஸ்.ஹெட்டியாராச்சி மற்றும் பொலிஸ் மா அதிபர் திரு.சி.டி.விக்ரமரத்னே ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். 2. இந்திய அரசாங்கத்தால் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டிருந்த 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி திட்டத்தின்கீழ், இலங்கையின் சட்ட … Read more
தந்தையாக என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது – ரிஷி சுனக் உருக்கம்
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு உயர்கல்வி மறுக்கப்பட்டுள்ளமைக்கு பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் கண்டனம் வெளியிட்டுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரதமர் ரிஷி சுனக், ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு உயர்கல்வி மறுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தனது டுவிட்டரில் உருக்கமான கருத்தினையும் வெளியிட்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ள தலீபான் அமைப்பினர், பெண்களுக்கான சுதந்திரத்தை பறித்து வருகின்றனர்.இந்த முடிவு மாணவிகளை கண்ணீரில் தள்ளியுள்ளது. தலிபான்களின் அட்டூழியம் இரு மகள்களுக்கு தந்தை என்ற நிலையில், பெண்களுக்கு கல்வி மறுக்கப்படுகின்ற ஒரு உலகத்தை என்னால் கற்பனை செய்துகூட … Read more
விகாரையின் அறையொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவன்
ஹொரண, ஹல்தொட்ட, லெனவர ரஜமஹா விகாரையில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவனின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. மொரகஹஹேன, வீதியகொட பிரதேசத்தில் வசித்த12 வயதுடைய யெஷித் ஜும்ஹாமின் சடலமே இவ்வாறு இன்று (23) ஹொரண பிரதான நீதவான் சந்தன கலன்சூரிய முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. விசாரணை சடலத்தை மீட்டு சட்ட வைத்திய அதிகாரியை பிரேத பரிசோதனை செய்யுமாறு ஹொரண நீதிமன்றத்தின் உத்தரவு கிடைத்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். … Read more
பாலுக்குள் விழுந்த பல்லி:ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் வைத்தியசாலையில் அனுமதி
பாலுக்குள் பல்லி விழுந்து மயக்கமுற்ற நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலஸ்தோட்டம் பகுதியிலேயே நேற்று(22.12.2022) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாலில் பல்லி விழுந்த சம்பவம் இதன்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 01 வயது 04 , 05 மற்றும் 09 வயது,63 வயது உடையவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார். பாட்டி பாலை காய்ச்சி சிறுவர்களுக்கும் கொடுத்துவிட்டு தானும் அறுந்திய போது … Read more
மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்வையிட வாய்ப்பு
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையை பாடசாலை மாணவர்கள் ,இன்று (23) முதல் நாளையும் (24), நாளை (25)மறுதினமும் இலவசமாக பார்வையிட முடியும். மிருகக்காட்சிசாலையால் பாடசாலை மாணவர்களுக்காக கல்வி கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொழுதுபோக்கிற்கான நிகழ்ச்சிகளுடனான இந்த கண்காட்சி காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என்று மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் தெரிவித்தனர். இதேவேளை நாளை 24ம் திகதி 60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகள் மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்வையிடலாம். அவர்களுக்காகவும் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, … Read more
காத்தான்குடியில் பல சமூகத்தை ஒன்றிணைக்கும் திறந்த பள்ளிவாயல்
திறந்த பள்ளி என்ற ஓப்பன் மஸ்ஜித் திட்டத்தின் கீழ் புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆ பள்ளிவாயலை பார்வையிடும் நிகழ்வு (22) நேற்று வியாழக்கிழமை இடம் பெற்றது. இப்பள்ளிவாயல் பலஸ்தீனத்தில் உள்ள முஸ்லிம்களின் முதலாவது தொழுகை திசை (கிப்லா) அமைந்துள்ள அல் அக்ஸா பள்ளிவாசலை ஒத்த வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. சிங்கள, தமிழ், சமூகங்களைச் சேர்ந்த சகோதர சகோதரிகள் அரச அதிகாரிகள் என பலர் இன, மத பேதமின்றி, அனைத்து சமூகங்களைச் சேர்ந்தவர்களும் இப்பள்ளிவாயலைப் பார்வையிடும் நிகழ்வில் கலந்து கொண்டனர். … Read more
உயிரை குடிக்கும் அமானுஷ்ய கிராமம்! தலைதெறிக்க ஓடிவந்த உண்மை சம்பவம்
மனித வாழ்வில் எந்தளவிற்கு தெய்வ சக்தியின் ஆதிக்கம் இருக்கிறதோ அந்தளவு அமானுஷ்யங்களும் நடக்கின்றன என்பது பலரது நம்பிக்கை. இவற்றில் பலர் திகிலூட்டும் அனுபவங்களை பெற்றுள்ளதாக பகிர்ந்துள்ளனர். அந்த அனுபவங்களை நேரடியாக நாமே பெறாவிட்டாலும் கூட கதையாக கேட்கும் போதே பீதியில் ஆழ்த்தும் சம்பவங்கள் பல. ஒரு சில சம்பவங்கள் உலகளவில் பலரையும் நடுங்க வைத்து ஆட்டங்காண வைத்துள்ளன. அப்படியொரு கதிகலங்க வைக்கும் விடை தெரியாத மர்மம் அடங்கிய உண்மைச் சம்பவமொன்று தொகுப்பாக, Source link
ஐ.நா.வின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் தலைமையிலான பிரதிநிதிகள் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு
ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்திய பணியகத்தின் பணிப்பாளர் திரு. இந்திரிக்க ரத்வத்தை தலைமையிலான பிரதிநிதிகள் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களை சந்தித்தனர். கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரயிலுள்ள பாதுகாப்பு அமைச்சில் இன்று (டிசம்பர் 22) இந்த சந்திப்பு இடம்பெற்றது. பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த இந்திரிக்க ரத்வத்தை தலைமையிலான குழுவினர் பாதுகாப்புச் செயலாளரினால் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து இவர்களுக்கிடையில் சுமூகமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில் பாதுகாப்புச் … Read more
மதிப்பீட்டு நடவடிக்கைகளை ஒழுங்குமுறைப் படுத்துவது தொடர்பில் கோபா குழுவுக்கு …
அரசாங்க நிறுவனங்களில் மதிப்பீட்டு நடவடிக்கைகளை விஸ்தரிப்பதற்கு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவுக்கு (கோபா குழு) ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பான விசேட நிகழ்வொன்று கோபா குழு உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் பாராளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்றது. கோபா குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கபீர் ஹசிம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை மதிப்பீட்டு சங்கத்தின் (Sri Lanka Evaluation Association / SLEvA) பிரதிநிதிகள் வளவாளர்களாகக் கலந்துகொண்டனர். தேசிய மதிப்பீட்டு சட்டமூலத்தின் பூர்வாங்க வேலைகளை நிறைவு செய்து பாராளுமன்றத்தில் … Read more