பாடசாலை மாணவர்களை போதைப்பொருள் பாவனையில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை

தற்போது, மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதனால், கல்வி அமைச்சு அது தொடர்பான உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜந்த தலைமையில், கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் உரிய நிறுவனங்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது. இதன்போது, பாடசாலைகளில், போதைப்பொருள் பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. தற்போது கல்வி அமைச்சினால் 2020.07.29 ஆம் திகதி (20/2020 இலக்க) வெளியிடப்பட்டுள்ள ‘கல்வி நிறுவன … Read more

பாரம்பரிய அரசியலுக்கும் அப்பால் நாட்டுக்கான பொறுப்புக்களை நிறைவேற்ற அனைத்து அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்

அரசாங்கத்திடம் அனைத்துப் பொறுப்புக்களையும் ஒப்படைத்து அடுத்த தேர்தலில் அதிகாரத்தைப் பெற முயற்சிக்கும் பாரம்பரிய அரசியல் முறையிலிருந்து விலகி நாட்டுக்கான தார்மீகப் பொறுப்பை நிறைவேற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் வலியுறுத்தினார். பணவீக்கம் அதிகரித்துள்ளமையால் ஏற்பட்டுள்ள பொருட்களின் விலையேற்றம் காரணமாக மக்கள் எதிர்நோக்கியுள்ள இக்கட்டான நிலைமையை நாம் மறந்து விடவில்லை என்றும், நாட்டின் பொருளாதார பிரச்சினைகளை கட்டம் கட்டமாக தீர்த்து அடுத்த வருடம் மக்களுக்கு மேலும் நிவாரணங்கள் வழங்கப்படுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார். பாரம்பரிய … Read more

சீனாவில் பரவும் ஒமிக்ரோன் – இலங்கையிலும் பரவும் அபாயம்

சீனாவில் பரவி வரும் புதிய ஒமிக்ரோன் மாறுபாடுகளினால் பாதிக்கப்பட்ட நான்கு நோயாளிகள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளனர். இதனுடன் எதிர்காலத்தில் மீண்டும் முகக் கவசம் பாவனையை கட்டாயமாக்கும் யோசனை ஒன்றும் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், நாட்டிற்கு வரும் வெளிநாட்டினரை மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கருத்தும் உள்ளது. இதேவேளை, இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டுமென சுகாதார தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த கொரோனா காலத்தில், இலங்கையில் பதிவாகிய முதலாவது கொரோனா தொற்றுக்குள்ளான … Read more

 தடை செய்யப்பட்ட  இயந்திர திறன் (1000) கொண்ட மோட்டார் சைக்கிள்கள் 

உதிரி பாகங்களாக பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு பொறுத்தப்பட்ட அதிக சக்திவாய்ந்த இயந்திர திறன் கொண்ட ஆறு மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கம்பஹா குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த மோட்டார் சைக்கிள்களை வைத்திருந்ததாக கூறப்படும் ஹேனகம பிரதேசத்தை சேர்ந்த 64 வயது மற்றும் 26 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு பாகங்களை ஒன்றிணைத்துப் பொறுத்தப்பட்ட இந்த மோட்டார் சைக்கிள்கள், இந்நாட்டில் பயன்படுத்த தடை செய்யப்பட்ட 1000 CC இயந்திர திறனைக் … Read more

வானிலை தொடர்பில் வெளியான எச்சரிக்கை! 25ஆம் திகதி இலங்கையில் ஏற்படும் மாற்றம்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டிருந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக வலுவடைந்து திருகோணமலைக்கு வடகிழக்காக 420 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. அது டிசம்பர் 24 ஆம், 25 ஆம் திகதிகளில் இலங்கையைக் கடக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனவே, கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் மன்னாரிலிருந்து காங்கேசந்துறை, திருகோணமலை, மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளிலும் … Read more

சீன எரிபொருள் மானியத்தை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை

ஒரு ஹெக்டெயருக்கு குறைவான நிலத்தில் நெற்செய்கையில் ஈடுபடும் ஒவ்வொரு விவசாயிக்கும், சீனாவினால் வழங்கப்படும் எரிபொருள் மானியத்தை இலவசமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு கிடைத்த 10.06 மில்லியன் லீற்றர் எரிபொருள் மானியத்தில் இருந்து 6.98 மில்லியன் லீற்றர் எரிபொருளை இலங்கையின் நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு நிவாரணமாக வழங்க தீர்மானித்துள்ளதாக விவசாயம், வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.   அத்துடன் இவ்வாறு கிடைக்கப்பெற்ற … Read more

மேல் மாகாணத்தில் தேவைக்கு ஏற்ப மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு அனுமதி

மேல்மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் ,தேவைக்கு ஏற்ப அத்தியாவசிய மருந்துகளை வெளியில் கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் பின்னர் நேற்று (22) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். கேள்வி – கம்பஹா வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் பிரிவில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒருங்கிணைப்புக் குழு எடுத்த நடவடிக்கை என்ன? பதில் – சில … Read more

LPL இறுதிப் போட்டிக்கு ஜப்னா கிங்ஸ் அணி தகுதி

கண்டி பெல்கன்ஸ் அணிக்கு எதிரான முதல் தகுதிகாண் போட்டியில் டக்வர்த் லுவிஸ் முறையில் 24 ஓட்டங்களால் வெற்றியீட்டிய நடப்புச் சாம்பியன் ஜப்னா கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. LPL தொடரில் கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்று (21) நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய வனிந்து ஹசரங்க தலைமையிலான கண்டி அணி 20 ஓவர்களுக்கும் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ஓட்டங்களையே பெற்றது. இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணியின் இன்னிங்ஸில் … Read more