வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கொரோனா நிலைமை குறித்து டெல்லியில் நேற்று (21) நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சீனாவில் தற்போது உருமாறிய கொரோனாவான ஒமைக்ரானின் துணை வைரஸ் பிஎப்.7 வேகமாக பரவி வருகிறது. தீவிரமாக பரவும் இந்த வைரஸ் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலும் பரவியுள்ளது. இந்த பிஎப்.7 வைரஸ் அலை இந்தியாவில் பரவி விடக்கூடாது என்பதற்காக … Read more

வாகன விபத்துக்களில் நாளாந்தம் இறப்போரின் எண்ணிக்கை 8

வாகன விபத்துக்களில் அதிகரிப்பு காணப்படுவதாக பொலிஸ் வாகன தலைமையகத்தின் கல்வி மற்றும் பொதுஜன பாதுகாப்பு பொலிஸ் பரிசோதகர் சேனக கமகே தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் (21) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வாகன விபத்துகளில் இறப்பவர்களின் எண்ணிக்கையில் பெரும்பாலானவர்கள் மோட்டார் சைக்கிளில் செலுத்துபவர்கள் என்று அவர் தெரிவித்தார். மோட்டார் சைக்கிள்களுக்கான தலை கவசத்தின் தரம் குறித்து சமீபத்தில் வெளியான புதிய வர்த்தமானி அறிவிப்பில் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும் என்றும் … Read more

மஹிந்தவுக்கு நெருக்கமான பெண் ஒருவரி்ன் மோசடி அம்பலம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரத்தியேக பணியகத்தில் உள்ள செயலாளர் ஒருவரின் மனைவிக்கு முறையற்ற வகையில் நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இலங்கையில் ஆராய்ச்சி நிறுவனமொன்றின் தலைவராக குறித்த பெண் நியமிக்கப்பட்டுள்ளர். அவர் வாரத்தில் ஒரு நாள் மாத்திரமே அங்கு பணிக்கு வருவதாகவும் தெரியவந்துள்ளது. தலைவரின் நியமனம் கடந்த மாதம் துறைக்கு பொறுப்பான அமைச்சரவை அமைச்சரால் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சர்ச்சைக்குரிய பெண் சாதாரண தர பரீட்சையில் கூட சித்தியடையவில்லை என அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். இருந்தபோதிலும், … Read more

உயிரிழந்த வர்த்தகர் இரகசியமாக சந்திக்க சென்ற நபர் யார்..! இருவருக்காக சிற்றுண்டி கொள்வனவு

தினேஷ் சாப்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்ற போது சாரதி எவரும் உடன் இருக்கவில்லை என்பதும், குறித்த பயணத்திற்காக சாப்டர் காரை அவரே செலுத்திச் சென்றுள்ளமையும் விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவ்வாறான நிலையில் மிக தனிப்பட்ட பயணமாக அவர் அப்பயணத்தை முன்னெடுத்திருப்பதும் அப்படி அவர் இரகசியமாக சந்திக்க சென்ற நபர் அல்லது நபர்கள் யார் என்பது தொடர்பில் வெளிப்படுத்தவும் விசாரணைகள் இடம்பெறுகின்றன. இதேவேளை சம்பவத்தன்று தினேஷ் சாப்டர், மலலசேகர மாவத்தையிலுள்ள உணவகத்தில் இருவருக்கு தேவையான சிற்றுண்டிகளை கொள்வனவு … Read more

உள்ளூராட்சி மன்ற தேர்தல் குறித்து விசேட வர்த்தமானி அறிவிப்பு

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்காக தேசிய தேர்தல் ஆணைக்குழுவினால் அனைத்து நிர்வாக மாவட்டங்களுக்கும் தெரிவு அத்தாட்சி அதிகாரிகள் மற்றும் உதவி தெரிவு அத்தாட்சி அதிகாரிகளை நியமித்து விசேட வர்த்தாமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தல் கட்டளைச் சட்டத்தின் கீழ் 04 (1) சரத்தின் கீழ் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை நடைமுறைப்படுத்தி தேர்தல் ஆணைக்குழு இந்த நியமனங்கள் மேற்கொண்டுள்ளளது. வர்த்தமானி அறிவிப்பு பின்வருமாறு: http://documents.gov.lk/files/egz/2022/12/2311-26_T.pdf  

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கும் ,இலங்கை மது, போதைவஸ்து தகவல் நிலையத்திற்கும் இடையில் உடன்படிக்கை

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை ,கலாசராப் பீடத்திற்கும் இலங்கை மது மற்றும் போதைவஸ்து தகவல் நிலையத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. ‘பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் மது, புகையிலை மற்றும் போதைப்பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வையும் அறிவையும் மேம்படுத்தி  பிராந்திய, சமூக பிரச்சினைகளை கையாளச் செய்தல்’ எனும் கூட்டு நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதுதொடர்பான நிகழ்வு (20) ஒலுவில் வளாகத்தில் இடம்பெற்றது. கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம் பாஸில் தலைமையில் … Read more

ஜி20 நாடுகளின் தலைவராக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அளித்துள்ள நன்மைகள் அயல் நாடுகளுக்கு பலம் – பிரதமர் தினேஷ் குணவர்தன

பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களின் அழைப்பின் பேரில், இன்று (21.12.2022) சீதாவக்க தாவரவியல் பூங்காவிற்கு வருகை தந்த இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பூங்காவில் மரக்கன்று ஒன்றை நட்டினார். ஜி20 நாடுகளின் தலைவராக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அளித்துள்ள நன்மைகள் அயல் நாடுகளுக்கு பலம்– பிரதமர் தினேஷ் குணவர்தன “இலங்கையின் பசுமை அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு இந்தியாவின் உதவி வழங்கப்படும்.” -இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்த … Read more

கொழும்பு, கம்பஹா, களுத்துறை கண்டி மாவட்டங்களில் டெங்கு நோயாளர்கள்

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. தற்போது 58 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அதிக டெங்கு அனர்த்த வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளன என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், இந்த வருடத்தில் 72,903 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் 40,998 நோயாளிகளர்கள் அதிகமாக பதிவாகியுயள்ளனர். அத்துடன், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கை ரூபாவிற்கு எதிரான டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இன்றைய தினத்திற்கான (22.12.2022) நாணயமாற்று வீதத்தினை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி இலங்கையில் அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதியானது 361.08 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதியானது 371.66 ரூபாவாக காணப்படுகிறது. ஸ்ரேலிங் பவுண்ட் ஸ்ரேலிங் பவுண்டொன்றின் கொள்முதல் பெறுமதியானது 435.06 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதேவேளை விற்பனை பெறுமதியானது 451.96 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. குவைத் தினார் மற்றும் கட்டார் ரியால் குவைத் தினாரின் பெறுமதியானது 1185.94 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை கட்டார் … Read more