ஜனவரி முதல் ,பிரதான நகரங்களுக்கு இடையிலான புதிய ரயில் நேர அட்டவணை 

பிரதான நகரங்களுக்கு இடையிலான திருத்தப்பட்ட புதிய ரயில் நேர அட்டவணை  ஜனவரி முதல் வாரத்தில் இருந்து அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த புதிய அட்டவணை பல கட்டங்களாக நடைமுறைப்படுத்த என்று எதிர்பார்க்கப்படுவதாக ரயில்வே பொது முகாமையாளர் டி.எஸ்.குணசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி, சில நேரங்களில் ரயில் பயணத்தின் ஆரம்ப நேரம் அதிகபட்சமாக 15 நிமிடங்களுக்கு உட்பட்டு திருத்தப்படலாம் என்று அவர் கூறினார்.

திங்கட்கிழமை (26 ஆம் திகதி) விசேட அரச விடுமுறை தினம்

எதிர்வரும் திங்கட்கிழமை (26 ஆம் திகதி) விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சரான பிரதமர் தினேஸ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். கிறிஸ்மஸ் தினம் வார விடுமுறை தினமான 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. இதனால் திங்கட்கிழமை (26 ஆம் திகதி) விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேசிய மாணவர் படையணிக்கு சீனா 5 மில்லியன் ரூபா நன்கொடை

இலங்கைக்கான சீன தூதரகம் தேசிய மாணவர் படையணியின் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக 5 மில்லியன் ரூபாவை நன்கொடையாக பாதுகாப்பு அமைச்சிற்கு வழங்கியுள்ளது. இந்த நன்கொடை பாதுகாப்பு அமைச்சில் புதன்கிழமை (டிசம்பர் 21) பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களிடம் கொழும்பில் உள்ள சீன தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேர்ணல் வான் டொங் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோரின் … Read more

கொழும்பு வரும் வாகன சாரதிகளுக்கு பொலிஸார் விடுக்கும் விசேட அறிவிப்பு

தாமரைக் கோபுரம், ஜனாதிபதி செயலகம் மற்றும் காலி முகத்திடல் அண்மித்த பகுதிகளில் இடம்பெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை பார்வையிடுவதற்காக வாகனங்களில் வருவோர் தமது வாகனங்களை நிறுத்த வேண்டிய இடங்கள் குறித்து பொலிஸார் விசேட அறிவித்தலை விடுத்துள்ளனர். சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் ,இம்மாதம் 19ம் திகதி முதல் எதிர்வரும் 28ம் திகதி வரை தாமரைக் கோபுரத்தை அண்மித்த பகுதிகளில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. அதனை கண்டுகளிப்பதற்கு வருவோரின் வசதி கருதி வாகனங்களை கீழே குறிப்பிட்டுள்ள இடங்களில் நிறுத்துவதற்கு வசதிகள் செய்யப்பட்டள்ளன. … Read more

அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு மற்றும் போனஸ் தொடர்பில் வெளியான சுற்றறிக்கை

அரசாங்க ஊழியர்களுக்கு சேமிக்கப்பட்ட விடுமுறை நாட்களுக்கான கொடுப்பனவு மற்றும் போனஸ் கொடுப்பனவு வழங்கப்படுவது தொடர்பில் சுற்றிக்கை வெளியிடப்பட்டுள்ளது. திறைசேறி செயலாளர் கே.எம்.மஹிந்த சிறிவர்தனவின் கையொப்பத்துடன் இந்த சுற்றறிக்கைகள் நேற்றைய தினம் (21.12.2022) வெளியிடப்பட்டுள்ளன.  கொடுப்பனவு வழங்குவதை கட்டுப்படுத்த அறிவுறுத்தல் இதன்படி அரச ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் கொடுப்பனவுகள் வழங்குவதை கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அதிகபட்ச வரம்பு 25000 ரூபாவிற்கு உட்பட்டு பணம் செலுத்த முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களுக்கு போனஸ், … Read more

மின் துண்டிப்பு நேரம்: அதிகரிக்கப்பட மாட்டாது

நிலக்கரிக்கான தட்டுப்பாடு காரணமாக மின் துண்டிக்கப்படும் நேரம் அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்படும் தகவல் உண்மைக்குப் புறம்பானது என்று நிலக்கரி கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்துள்ளார். நாட்டுக்கு அடுத்த மாதம் ஆறாம் திகதியிலிருந்து தொடர்ச்சியாக நிலக்கரி கிடைக்கும் என்றும் அவர் கூறினார். நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயற்பாட்டிற்கு அவசியமான நிலக்கரி கொள்வனவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது,இதனால் 300 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாமல் போவதன் காரணமாக, டிசம்பர் 31ஆம் திகதிக்கு பின்னர் 10 மணித்தியால மின் வெட்டு … Read more

வாகனம் சாரதிகளை கண்காணிக்கும் அதிநவீன உபகரணம்

போதைப்பொருள் பாவித்து நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டுபவர்களை அடையாளம் காண தேவையான அனைத்து நவீன தொழிநுட்ப உபகரணங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன. எதிர்வரும் நாட்களில் அந்த உபகரணங்களை பயன்படுத்தி சோதனைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் போதையில் வாகனம் செலுத்தும் நபர்களை கைது செய்வதற்கும் அவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதற்கும் சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நாளாந்தம் வாகன விபத்துக்களில் சுமார் 8 பேர் உயிரிழப்பதாகவும் மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் 4 அல்லது … Read more

பாடசாலை விடுமுறை

நத்தார் தினத்தை முன்னிட்டு நாளை வெள்ளிக்கிழமை தொடக்கம் ஜனவரி மாதம் முதலாம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. 2022 – 3ஆம் தவணைக்கான இரண்டாம் கட்டம் ஜனவரி மாதம் 2ஆம் திகதி தொடக்கம் 20ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.   2022 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த (உயர் தரப்) பரீட்சை – 2022 ஆம் ஆண்டில் நடாத்துதல் மற்றும் 2022 பாடசாலை மூன்றாம் தவணையை … Read more

சுங்க பிரிவினரால் கைப்பற்றப்பட்ட வாகனங்களை பொலிஸ் நிலையங்களுக்கு வழங்க நடவடிக்கை

இலங்கை சுங்க திணைக்களத்தினால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ,அரச சொத்தாக பிரகடனப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வாகனங்களை போதைப்பொருள் சோதனைகள் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கை பொலிஸாருக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்திற்கு நேற்று (21)  கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்த இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய “போதைப்பொருள் சுற்றிவளைப்பு உட்பட பொலிஸாரின் சோதனைகளுக்கு பயன்படுத்துவதற்கு, இந்த வாகனங்கள் வழங்கப்படவுள்ளதாக” தெரிவித்தார்.. இந்த வாகனங்களை பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் தற்போதுள்ள … Read more