1000 மில்லியன் டொலரை சேமிப்பாக பெற்ற இலங்கை

கடந்த வருடத்தோடு ஒப்பிடபடுமிடத்து இறக்குமதி செலவினம் 6.5 வீதத்தால் குறைந்துள்ளது என்று ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய தெரிவித்தார். இதன்மூலம் ஆயிரம் மில்லியன் டொலர் சேமிக்கப்பட்டுள்ளது.இந்த சேமிக்கப்படட் வெளிநாட்டு நிதி வேறு அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் பத்து பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாட்டை அண்மையில் அரசாங்கம் நீக்கியுள்ளது. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான இறக்குமதியை அரசாங்கம் கட்டுப்படுத்தியுள்ளமை இங்கு குறிப்பிடதக்கது. இதேவேளை, தேசிய நுகர்வு விலைச்சுட்டெனுக்கு அமைவாக கடந்த ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது … Read more

LPL போட்டியை இலவசமாக பார்வையிட வசதி

LPL போட்டியை இலவசமாக பார்ப்பதற்கு, பார்வையாளர்களுக்கு  சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதற்கமைவாக (21) ஆரம்பமான லங்கா பிரீமியர் தொடரின் இறுதிப் போட்டி வரையில் போட்டியை பார்வையிடுவதற்கு பார்வையாளர்களுக்கு சந்தர்ப்பம் உண்டு. கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டு மைதானத்தில் சி மற்றும் டி பார்வையாளர் அரங்கின் கீழ் பிரிவில் இருந்து போட்டியை பார்வையிடுவதற்கு பார்வையாளர்களுக்கு இதற்கமைவாக  சந்தர்ப்பம் உண்டு. கடந்த 11 நாட்களாக நடைபெற்ற தொடரின் 20 போட்டிகளுக்கு பின்னர் ,பிரீமியர் தொடரின் இறுதி … Read more

பண்டிகை காலத்தை முன்னிட்டு டிசம்பர் 24, 25, 26, 31, ஜனவரி 01 மின் துண்டிப்பு இல்லை

பண்டிகை காலத்தை முன்னிட்டு டிசம்பர் 24, 25, 26, 31, ஜனவரி 01 திகதி ஆகிய நாட்களில் மின் துண்டிப்பு இடம் பெறாது என்று மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்தார். நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். இதேவேளை ஜனவரி மாதத்தில் மின் துண்டிப்பு 2.20 நிமிடங்கள் மாத்திரம் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். எதிர்வரும் ஜனவரி மாதம் மின்சார கட்டண அதிகரிப்பு  இடம்பெறும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். … Read more

'விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயற்சி': திருச்சியில் கைதுசெய்யப்பட்ட இலங்கையர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

திருச்சி சிறப்பு முகாமில் கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த கிம்புலா எல குணா உள்ளிட்ட 09 பேரை, எதிர்வரும் ஜனவரி 03ஆம் திகதி வரை புழல் சிறையில் அடைக்க என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 9 பேரும்,சென்னையை அடுத்த பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்பு நேற்று முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  போதைப் பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் போதைப் … Read more

பெரும்போகத்திற்காக நெல் விவசாயிகளுக்கு 20,000 ரூபா கொடுப்பனவு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இம்முறை பெரும்போக நெற் பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் ஆகக்கூடியது 20,000ரூபா வரை பண உதவியை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இக்கொடுப்பனவு மீள அறவிடப்பட மாட்டாது என்பதுடன் முற்றிலும் நன்கொடையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கமைய ஒரு ஹெக்டயர் அல்லது அதனிலும் குறைவான நிலப்பரப்பில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள சிறிய அளவிலான நெல் விவசாயிகளுக்கு 10,000 ரூபாவும் ஒரு ஹெக்டயரிலும் அதிக நிலப்பரப்பில் விவசாயத்தில் … Read more

தினேஷ் ஷாப்டர் படுகொலை:4 தொலைபேசி இலக்கங்கள் குறித்து விசாரணை

தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் படுகொலை தொடர்பாக 4 தொலைபேசி இலக்கங்கள் குறித்து பகுப்பாய்வு அறிக்கைகளை பெற்றுக் கொள்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. குறித்த தொலைபேசி இலக்கங்களுக்கு உள்வந்த மற்றும் வெளிச்சென்ற அழைப்புக்கள் குறித்த பகுப்பாய்வு அறிக்கைகளை பெற்றுக்கொள்ளுமாறு பொலிசாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, பொரளை பொலிஸாரின் கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன ககுலவல, சம்பந்தப்பட்ட நான்கு தொலைபேசி இலக்கங்களுக்கு பெறப்பட்ட அழைப்புகள் தொடர்பான விரிவான அறிக்கையை … Read more

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதற்கு இலங்கை காத்திருக்கிறது! நந்தலால் வீரசிங்க

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதற்கு, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட இருதரப்பு கடன் வழங்குநர்களிடமிருந்து நிதியுதவிக்கான உத்தரவாதத்திற்காக இலங்கை காத்திருக்கிறது என்று இலங்கையின் மத்திய வங்கி ஆளுநர் பி.நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை கடந்த சில மாதங்களாக, சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய, மூன்று முக்கிய இருதரப்பு கடன் வழங்குநர்களுடன், கடன் மறுகட்டமைக்க பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. விரைவில் சாதகமான பதில் இந்தநிலையில் அந்த நாடுகள், விரைவில் சாதகமான பதிலை வழங்கும் என்று எதிர்பார்ப்பதாக … Read more

பேலியாகொட மத்திய மீன் சந்தை குறைபாடுகள்:ஆராய்வதற்காக அமைச்சர்கள் கண்காணிப்பு விஜயம்

பேலியாகொட மத்திய மீன் சந்தையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாக ஆராய்வதற்காக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன ஆகியோர் (21) கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டனர். சந்தைக்கான வாகனத் தரிப்பிடத்தினை விஸ்தரிப்பதற்கான ஏதுநிலைகள் தொடர்பாக இதன்போது ஆராய்ந்தனர் குறித்த விடயம் தொடர்பாக ஏற்கனவே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கவனம் செலுத்தப்பட்டு வருகின்ற நிலையில், சந்தை வளாகத்தின் அருகில் காணப்படுகின்ற வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான தரிசு நிலத்தில் வாகனத் தரிப்பிடத்தினை விஸ்தரிப்பது … Read more

எழிலன் எங்கே? – இராணுவம் பதில் கூற வேண்டும் என்று சம்பந்தன் வலியுறுத்து

இராணுவத்திடம் எழிலன் (சசிதரன்) சரணடைந்திருந்தால் அல்லது எழிலனை அவரது குடும்பத்தினர் இராணுவத்திடம் ஒப்படைந்திருந்தால் அல்லது அவரை இராணுவத்தினர் கைது செய்திருந்தால் அவருக்கு என்ன நடந்தது என்பதை இராணுவத்தினர் தெரிவிக்க வேண்டும். அது அவர்களின் கடமை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இராணுவத்தினர் ஒருபோதும் விலக முடியாது இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலனை நீதிமன்றில் முற்படுத்த வேண்டும் அல்லது அவருக்கு … Read more