இலங்கையிலிருந்து சில நாடுகளுக்கு சுற்றுலா விசாவில் செல்ல தடை..! வெளியானது விபரம் (Video)
சுற்றுலா விசாவில் ஓமான் மற்றும் துபாய், அபுதாபி உள்ளிட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளுக்கு தொழிலுக்கு செல்ல வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தடை விதித்துள்ளது. ஓமானில் இந்நாட்டு பெண்களை பாலியல் நடவடிக்கைக்கு விற்பனை செய்யும் தகவல் வெளியானதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக தராதரம் பாராது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஸ்பகுமார இன்று (19.11.2022) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். … Read more