கடற்றொழிலாளர்களுக்கு மீண்டும் அறிவுறுத்தல்

தென்கிழக்கு வங்காள விரிகுடாகடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள வட அந்தமான் கடற்பரப்புகளிலும் காணப்படுகின்ற குறைந்த அழுத்தப் பிரதேசம் பெரும்பாலும் இன்று 19 ஆம் திகதியளவில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம்காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களம் நேற்று மாலை  விடத்துள்ள அறிக்கையில் ,குறைந்த அழுத்தப் பிரதேசம், மேற்கு- வடமேற்குதிசையில் நகர்ந்து நவம்பர் 20 ஆம் மற்றும்21 ஆம்திகதிகளில் இலங்கையின்வடக்குக்கரையை அண்மிக்கக்கூடியசாத்தியம் காணப்படுகின்றது.   எனவே, காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய மற்றும் ஆழம் … Read more

இலங்கையில் ஒன்லைனில் பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு எச்சரிக்கை..!

இலங்கையில் ஒன்லைனில் பல்வேறு பொருட்களை விற்பனை செய்வதற்காக விளம்பரங்களை வெளியிடுவோரின் வங்கிக் கணக்குகளில் நுட்பமாக நுழையும் கும்பல் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. அதற்கமைய, இதுவரையில் 60 லட்சம் ரூபாவை மோசடி செய்த கும்பலை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இணையம் மற்றும் ஊடுருவல் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் ஒன்லைன் ஊடாக வர்த்தகம் செய்யும் சுமார் இருபது பேர் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நீண்ட … Read more

சங்கைக்குரிய அட்டமஸ்தானாதிபதி தேரரை ஜனாதிபதி சந்தித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் சங்கைக்குரிய அட்டமஸ்தானாதிபதி கண்டி பிரதம சங்கநாயக்க அதி. வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரதன நாயக்க தேரரைச் சந்தித்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார். நேற்று (18) பிற்பகல் ஜனாதிபதி, வரலாற்றுச் சிறப்புமிக்க அநுராதபுர புனிதஸ்தலத்திற்கு விஜயம் செய்து நாயக்க தேரரை சந்தித்து நலம் விசாரித்தார்.   ஜனாதிபதியுடன் சிநேகபூர்வ சந்திப்பொன்றை மேற்கொண்ட தேரர், பிரித் பாராயணம் செய்து ஆசீர்வாதங்களை வழங்கினார். நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் இந்நிகழ்வில் … Read more

பிரித்தானிய மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

பிரித்தானியாவில் விலைவாசி உயர்வால் மக்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில் பிரித்தானிய மக்களுக்கு வழங்கப்படவுள்ள உதவித்தொகை தொடர்பில் விரிவான தகவலை உள்ளடக்கிய சிறப்பு அறிக்கையை நிதியமைச்சர் ஜெர்மி ஹன்ட் வெளியிட்டுள்ளார். விலைவாசி உயர்வு இதற்கமைய விலைவாசி உயர்வால் நெருக்கடியை எதிர்கொள்ளும் மக்களுக்கு 900 பவுண்டுகள் உதவித்தொகை வழங்கப்படும் என நிதியமைச்சர் ஜெர்மி ஹன்ட் அறிவித்துள்ளார். குறித்த அறிக்கையில்,விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள முதியவர்களுக்கும் 300 பவுண்டுகள் உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. அத்துடன் மாற்றுத்திறனாளிகளுக்கு 150 பவுண்டுகளும் வழங்கப்பட உள்ளது. மேலும், … Read more

மெட்டா இந்தியாவின் புதிய தலைவராக சந்தியா தேவநாதன் நியமனம்

மெட்டா இந்தியாவின் தலைமைப் பொறுப்பை சந்தியா தேவநாதன் ஏற்றுக்கொண்டுள்ளார். பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவின் இந்தியத் தலைமைப் பொறுப்பில் இருந்த இரண்டு முக்கிய அதிகாரிகள் இராஜினாமா செய்ததையடுத்து சந்தியா தேவநாதன் மெட்டா இந்தியாவின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். உலக அளவில் 22 ஆண்டு அனுபவத்துடன் வங்கிகள், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் தொழில்முனைவோராக பிரசித்தி பெற்ற இவர்  டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றவராவார். 2016 முதல் அவர் மெட்டா நிறுவனத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. … Read more

கொட்டாஞ்சேனையில் ஒருவர் கைது

கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி அலரிமாளிகைக்குள் அத்துமீறி நுழைந்து பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு தெற்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளினால் குறித்த நபர் (17) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நபர் 44 வயதுடையவர் எனவும் அவர் கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை கொழும்பு தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பெண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு உண்மை சம்பவம்! திகில் பதிவு

மனித வாழ்வில் எந்தளவிற்கு தெய்வ சக்தியின் ஆதிக்கம் இருக்கிறதோ அந்தளவு அமானுஷ்யங்களும் நடக்கின்றன என்பது பலரது நம்பிக்கை. இவற்றில் பலர் திகிலூட்டும் அனுபவங்களை பெற்றுள்ளதாக பகிர்ந்துள்ளனர். அந்த அனுபவங்களை நேரடியாக நாமே பெறாவிட்டாலும் கூட கதையாக கேட்கும் போதே பீதியில் ஆழ்த்தும் சம்பவங்கள் பல. ஒரு சில சம்பவங்கள் உலகளவில் பலரையும் நடுங்க வைத்து ஆட்டங்காண வைத்துள்ளன. அப்படியொரு அவிழாத மர்ம சம்பவத்தை உள்ளடக்கி வருகிறது இவ்வாரத்திற்கான நிசப்தம் நிகழ்ச்சி,   Source link

கடனை மறுசீரமைப்பது குறித்து அரசாங்கம் எந்தத் தீர்மானத்தையும் எடுக்கவில்லை

உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பது குறித்து அரசாங்கம் எந்தத் தீர்மானத்தையும் எடுக்கவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க  (17) தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் வலைத்தளத்தில் பதிவொன்றை பதிவிட்டு தெரிவித்துள்ளார்.  “உள்நாட்டு வங்கித் துறை, காப்புறுதித் துறை, மற்றும் ஓய்வூதிய நிதிகள் ஆகியவற்றில் பாதிப்புகளை உண்டாக்கும் எவ்வித கடன் சீரமைப்புகளையும் மேற்றக்கொள்ளவில்லை எனவும் கூறியுள்ளார். உள்நாட்டுக் கடன்களை மறுசீரமைப்பது தொடர்பாக அண்மையில் அறிவிக்கப்பட்ட ஊகங்களுக்கு எவ்வித அடிப்படை விடயங்களும் இல்லை என இராஜாங்க அமைச்சர் சேமசிங்க மேலும் … Read more

வாகன விபத்தில் இராணுவ மேஜர் உட்பட மூவர் உயிரிழப்பு

கல்கமுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ மேஜர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.  அவர்கள் பயணித்த வாகனம் சுவரில் மோதி குறித்த விபத்து இடம்பெற்று இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் கல்கமுவ, இஹலகம பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், உயிரிழந்த இராணுவ மேஜர் 35 வயதுடைய எனவும்  அடையாளம் காணப்பட்டுள்ளார்.