ஜி20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றது

ஜி-20 மாநாட்டின் தலைமை பொறுப்பை இந்தோனேசியா இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. இந்தியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 19 நாடுகளும், ஐரோப்பிய கூட்டமைப்பும் ஒன்றிணைந்துள்ள ஜி-20  இரண்டு நாள் உச்சி மாநாடு இந்தோனேசியாவில் பாலி தீவில் கடந்த 15 ஆம் திகதி ஆரம்பமானது.. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன், சீன ஜனாதிபதி ஜின்பிங், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரான் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் பங்கேற்ற … Read more

கொழும்பில் குறிவைக்கப்படும் செல்வந்தர்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கொழும்பில் வாழும் கோடீஸ்வரர்களுக்கு ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் கடந்த சில நாட்களாக கொள்ளையர்களினால் பாரிய அச்சுறுத்தலான நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் கோடீஸ்வரர்கள் பாதுகாப்பற்ற நிலைமையில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் கொழும்பு 7 பகுதியில் திருட்டு சம்பவங்கள் பாரிய அளவில் அதிகரித்துள்ளதுடன் அதற்கான வீடியோக்கள் வெளியாகியுள்ளது. கொழும்பு 7ல் உள்ள பல வீடுகளில் திருடர்கள் நுழைந்து கொள்ளையடித்த காட்சிகள் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. Source link

இலங்கையில் இன்று முதல் அதிகரிக்கும் கட்டணங்கள்

இலங்கையில், அதிகரிக்கப்பட்ட கடவுச்சீட்டு கட்டணங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது.  இன்றையதினம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து வகையான கடவுச் சீட்டு கட்டணங்களையும் திருத்த குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தீர்மானித்து, அது தொடர்பான அறிவிப்பை நேற்று வெளியிட்டிருந்தது. அதிகரிக்கப்பட்ட கட்டணங்கள் இதன்படி, ஒருநாள் சேவை கடவுச் சீட்டுக் கட்டணம் 15 ஆயிரம் ரூபாவில் இருந்து 20 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  மேலும், சாதாரண சேவை கட்டணத்தை 3,500 ரூபாவில் இருந்து 5 ஆயிரமாக அதிகரிக்க குடிவரவு … Read more

மோசடி செய்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பண மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நாட்டில் கடந்த காலத்தில் எரிபொருள் தட்டுப்பாடு நேரத்தில் மண்ணெண்ணெய் மற்றும் டீசல் என்பவற்றை பெற்றுத் தருவதாக கூறி, பிரதேசவாசிகளிடமிருந்து பல லட்சம் ரூபா பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு அமைவாகவே நேற்றையதினம் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரை இன்றையதினம் (16) நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவர் விளக்கமறியலில் … Read more

விருச்சிக ராசியில் சூரியனின் பெயர்ச்சி ! நான்கு ராசியினருக்கு குபேர ராஜயோகம்-நாளைய ராசிபலன்

ஜோதிடத்தில் சூரியனுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. சூரியனின் பெயர்ச்சி பல ராசிகளை பாதிக்கும். ஜோதிட சாஸ்திரப்படி இந்த ராசி மாற்றத்தால் பல ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. சூரியனின் சஞ்சாரத்துடன், சில ராசிகளின் சுப காலம் துவங்க இருக்கிறது. சிலருக்கு துன்பம் ஏற்பட போகிறது. இந்த ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறப்போகிறது என்பதை பார்க்கலாம்.  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்    Source … Read more

பெருந்தோட்ட கைத்தொழில்துறை வரலாற்றில் , கடந்த வருடம் அதிகூடிய வருமானத்தை ஈட்டியுள்ளது

பெருந்தோட்ட கைத்தொழில்துறை வரலாற்றில், கடந்த வருடம்  3.8 பில்லியன் டொலர்கள் வருமானத்தை பெற்றுள்ளது. இது உண்மையானது. பொய் என்றால் தான் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் கைத்தொழில் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன இன்று (16) பாராளுமன்றத்தில் தெரிவவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 27/2 இன் கீழ் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன் போது இன்று தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன என்பதை இல்லையென எவ்வாறு கூற முடியும் … Read more

சமகி ஜன பலவேகயவுடன் இணைந்து பயணிக்க சம்மதித்ததாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மைக்கு மாறானவை

சமகி ஜன பலவேகயவுடன் இணைந்து பயணிக்க சம்மதித்ததாக சமூக ஊடகங்களில் தம்மைப் பற்றி வெளியான செய்திகள் முற்றிலும்   உண்மைக்கு மாறானவை என்று முன்னாள் அமைச்சர் டபிள்யூ. டி. ஜே. செனவிரத்ன இன்று (16) பாராளுமன்றத்தில் அறிவித்தார். மேலும், கடந்த மார்ச் மாதம் முதல் நாட்டில் ஏற்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் மற்றும் அப்போதைய அரசாங்கத்தின் செயற்றிறன் இன்மை காரணமாக தான் பாராளுமன்றத்தில் தனியாக செயற்பட தீர்மானித்தேன். தற்போது எதிர்க்கட்சியின்  சுதந்திர உறுப்பினராக செயற்படுகிறேன். அரசாங்கத்தின் நல்ல … Read more

சிங்கப்பூர் – இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை துரிதமாக அமுல்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்

சிங்கப்பூர் – இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மிகக் குறுகிய காலத்தில் நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். சிங்கப்பூர் – இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இன்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார் . இது தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், தற்போதுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் விரைவான தீர்வுகளை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி … Read more

மன்னார் மறைமாவட்ட ஆயர் ,ஜனாதிபதியை சந்தித்தார்.

மன்னார் மறைமாவட்ட ஆயர் பிடெல்ஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை உள்ளிட்ட குழுவினர் இன்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை சந்தித்தனர். மன்னார் காணிப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியிடம் விளக்கமளிக்கப்பட்டதுடன், அது தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், அப்பிரச்சினைகளுக்கு தீர்வுகாண உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார். மடு யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவது தொடர்பிலும் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. … Read more

வெளிநாடுளுக்கான இலங்கை மாணவர்களுக்கு கல்வி வீசா – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அவுஸ்திரேலியா மற்றும் கனடாவில் கல்வி கற்க மாணவர் வீசா வழங்குவதாகக் கூறி கல்வி ஆலோசனை நிறுவனத்தை நடத்தி நிதி மோசடி செய்த நபரை கொழும்பு மோசடி விசாரணைப் பணியக அதிகாரிகள் நேற்று கைது செய்துள்ளனர். செவன் ஸ்டார் மற்றும் ஐ.எம்.சி க்ளோப் என்ற இரண்டு உலகளாவிய கல்வி ஆலோசனை நிறுவனங்களை நடத்தி இந்த பாரிய நிதி மோசடியில் மொஹமட் ரெம் அஹமட் பஸ்லி என்றபவர் ஈடுபட்டுள்ளதாக கொழும்பு மோசடி விசாரணை பிரிவு குறிப்பிட்டுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு … Read more