கிளிநொச்சியில் கர்ப்பிணிப் பெண்களை மோசமாக நடத்தும் பெண் வைத்தியருக்கு எதிராக போராட்டம் (Video)

கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரியை இடமாற்றக் கோரி கர்ப்பிணி தாய்மார்கள், பொதுமக்கள் என பலர் ஒன்று கூடி கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை முன்பாக போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.  இப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது. சுகாதார வைத்திய அதிகாரி போராட்டம் இடம்பெறற்ற இடத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் நிமால் வருகை தந்து போராட்டக்காரர்களின் கருத்துக்களை செவிமடுத்ததுடன், இனி இதுபோன்ற பிரச்சினைகள் இடம்பெறாது என உறுதிமொழியளித்த பின்னர் போராட்டக்காரர்கள் அவ்விடத்தை விட்டு … Read more

இளைஞர் கடத்தப்பட்டு சித்திரவதை: ஹிருணிகாவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு-செய்திகளின் தொகுப்பு

டிபென்டர் வாகனம் ஒன்றில் இளைஞர் ஒருவரைக் கடத்திச் சென்று தடுத்து வைத்து சித்திரவதைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை 2023 ஜனவரி 30ஆம் திகதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்த வழக்கு இன்று (16) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இதன்போது பிரதிவாதி ஹிருணிகா பிரேமச்சந்திர சார்பில் ஆஜரான சட்டத்தரணி அஷான் பெர்னாண்டோ, இந்த … Read more

வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் வியாழன் (17.11.2022) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கடவுச்சீட்டுக்கு அறவிடப்படும் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொள்ள ரூ. 20,000/- ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.  சாதாரண சேவைகளின் கீழ் கடவுச்சீட்டுக்கான கட்டணம் ரூ. 5,000/- முதல் ரூ. 3,500/- ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.  Source link

பிரித்தானியாவின், மிகப் பிரபலமான கடவுச் சொற்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.  

பிரித்தானியாவின் மிகப் பிரபலமான கடவுச் சொற்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.     பிரபலமான பெயர்கள் மற்றும் விளையாட்டு அணிகள் விசேடமாக லிவர்பூல் அணி மிகவும் பலம் வாய்ந்த முன்னணி அணியாக 2022இல் அடையாளப்படுத்தப்பட்டது. அதன் கடவுச் சொல் தரமானது. ஆனால் இன்று பிரித்தானியாவில் நிகழ்நிலை கணக்குகளின் பாதுகாப்புத் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.. அத்துடன் அனைவரும் சிறந்த ‘கடவுச்சொல்‘ வைத்திருப்பதில் அவதானம் செலுத்துமாறு துறை சார்ந்தவர்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும் ‘கடவுச் சொல்1′ மற்றும் ‘கடவுச்சொல் 123’ போன்ற … Read more

The Non-Resident சிங்கப்பூர் உயர்ஸ்தானிகர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் சந்திப்பு

2022 நவம்பர் 13 முதல் 18 வரையான இலங்கைக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, சிங்கப்பூரின்The Non-Resident   உயர்ஸ்தானிகர் மாண்புமிகு சந்திர தாஸ் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை 2022 நவம்பர் 15, செவ்வாய்க் கிழமை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சப்ரி மற்றும் உயர்ஸ்தானிகர் தாஸ் இருவரும் கலந்துரையாடினர். சிங்கப்பூரின் வணிகப் பிரதிநிதிகள் குழுவொன்றும் … Read more

2023 செலவுத் திட்டம் குறித்து மத்திய வங்கி ஆளுநர்….

இம்முறை வரவுசெலவுத் திட்டம் பாரம்பரியமானதன்றி, பொருளாதார ஸ்திரத்தன்மையை மேலும் தக்க வைத்துக் கொள்வதற்கே வழிகாட்டுகின்றது. அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டத்தை முன்வைக்கும் போது, பொருளாதாரத்தின் தன்மையை நிலையாகப் பேணத்தக்கதாக காணப்படுகிறது. இவ்வரவு செலவுத் திட்டம் சம்பிரதாயமானதன்றி ஏற்பட்டுள்ள பொருளாதார ஸ்திரத்தன்மையை மேலும்; பாதுகாக்கக் கூடியதாக மாற்றும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.  ‘2023 தேசிய வரவு செலவுத் திட்டம் தொடர்பாக பிந்திய கருத்துக்களம்’  என்ற தொனிப்பொருளில் நேற்று (15) விசேட சபையின் கலந்துரையாடலில் … Read more

கடற்றொழிலாளர்களுக்கு விசேட அறிவுறுத்தல்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகியுள்ளது. அது மேலும் வலுவடைந்து நவம்பர் 19 ஆம்இ மற்றும் 20 ஆம் திகதிகளில் வடக்குக் கரையை அண்மிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால், ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் ,மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால்  வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு திணைக்களம் இன்று (16) நண்பகல் வெளியிட்டுள்ள … Read more

மில்லனிய மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம்: அதிபர் உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பிணை

மில்லனிய பகுதியில் மாணவர்களை துன்புறுத்தியமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அதிபர் மற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு  கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேராவினால் பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று (16) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல நீதவான் உத்தரவிட்டுள்ளார். பணம் திருட்டு  ஆசிரியர் ஒருவரின் பணத்தை திருடியதாகக் குற்றஞ்சாட்டி ஐந்தாம் ஆண்டில் … Read more