குரங்கம்மை நோயாளிக்கு தேசிய தொற்று நோயியல் விஞ்ஞானப் பிரிவில் சிகிச்சை

குரங்கம்மை நோயாளிக்கு தேசிய தொற்று நோயியல் விஞ்ஞானப் பிரிவின் சிகிச்சையளிக்கப்படவுள்ளது.. குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தயாராக உள்ளதாக அதன் பணிப்பாளர் டொக்டர் ஹசித அத்தநாயக்க தெரிவித்துள்ளார். இதுவரை குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் டுபாயிலிருந்து இலங்கை வந்தவர்களாவர். குரங்கம்மை நோய்க்கான அறிகுறிகளை இலகுவாக அடையாளம் காண முடியும் என பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் … Read more

காலிமுகத்திடலுக்கு பேரணியாக சென்ற பெண்கள் இருவர் கைது!

களுத்துறையில் இருந்து காலிமுகத்திடலுக்கு நடை பேரணியாக சென்ற இரு பெண்களை பாணந்துறை கொரகாபொல பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். இக் கைது நடவடிக்கைக்கு இடையூறாக இருந்ததாக மற்றொரு பெண் மற்றும் ஆண் ஒருவரும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மாணவ செயற்பாட்டாளர்களை விடுக்கக்கோரி போராட்டம் மாணவ செயற்பாட்டாளர்களான வசந்த முதலிகே மற்றும் கல்வேவ சிரிதம்ம தேரர் ஆகியோரை விடுவிக்கக்கோரியே களுத்துறையிலிருந்து கொழும்பு வரை இன்று (12) காலை பேரணியாக செல்ல இவ்விரு பெண்களும் முற்பட்டுள்ளனர்.      … Read more

மலேசியாவில் இருந்து, 22 ஆயிரம் மெற்றிக் தொன் யூரியா உரம்

உலக வங்கியின் கடனுதவியின் கீழ் ,ஒரு தொகை யூரியா உரத்தை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் நாளை மறு தினம் 14ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. 22,000 மெட்ரிக் தொன் கொண்ட இந்த கப்பல் மலேசியாவிலிருந்து இலங்கைக்கு வருவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.  2022/2023 பெரும்போக, நெல் மற்றும் சோளச் செய்கைக்காக யூரியா உர கொள்வனவிற்காக 105 மில்லியன் டொலர் கடனுதவியை வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. அந்தக் கடனுதவியின் கீழ், பெறப்படும் … Read more

நாட்டின் பாதுகாப்பான இருப்புக்கு பாதுகாப்புத் துறை மற்றும் மூலோபாய திறன்களின் முக்கியத்துவத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட போட்டித்தன்மையுடன் கூடிய பொருளாதாரமே இலங்கையின் ஒரே குறிக்கோளாக இருப்பதனால், முப்படைகளின் பாதுகாப்பு மற்றும் மூலோபாயத் திறன்களின் அவசியம் குறித்தும் அதற்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பதன் முக்கியத்துவம் தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் வலியுறுத்தினார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (11) நடைபெற்ற சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இதனைக் குறிப்பிட்டார்.   ஆயுதப் … Read more

ஆளும் தலைவர்கள் சட்ட கட்டமைப்பிற்குள் நாட்டின் பொருளாதாரத்திற்கு பொறுப்புக் கூறும் அடித்தளம் இடப்பட்டுள்ளது- சாகல ரத்நாயக்க.

நாட்டின் தலைவர்கள் சட்ட கட்டமைப்பிற்குள் நாட்டின் பொருளாதாரத்திற்கு பொறுப்புக்கூற வேண்டிய பின்னணியை உருவாக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் அடித்தளமிட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். அண்மையில் வத்தளை திக்ஓவிட்ட மீன்பிடி துறைமுக வளாகத்தில் நிறுவப்பட்ட Northwest Marine Lanka Pvt Ltd நிறுவனத்தின் புதிய படகுத் தளத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.   பொருளாதார முகாமைத்துவத்தில் பொருத்தமற்ற தீர்மானங்களை மேற்கொள்வதன் … Read more

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் (ICRC) தலைவி பாதுகாப்பு செயலாளரைச் சந்தித்தார்

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் (ICRC) தலைவி செவரீன் ஷப்பாஸ் (நவம்பர் 09) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களை சந்தித்தார். பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த ஷப்பாஸ் அவர்களை பாதுகாப்பு செயலாளர் அன்புடன் வரவேற்றார். இந்த சந்திப்பின் போது ஜெனரல் குணரத்ன மற்றும் திருமதி ஷப்பாஸ் ஆகியோருக்கு இடையில் சுமுகமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. பாதுகாப்பு செயலாளர் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் சேவைகளை பாராட்டியதுடன் அதன் எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தார். இலங்கையில் … Read more

சமாதானத்தை நிலைநாட்டுவதில் முப்படையினர் ,பொலிஸார் மாத்திரமன்றி சிவில் பாதுகாப்பு திணைக்களமும் பெரும் பங்களிப்பை வழங்கி

நாட்டில் நாம் இன்று அனுபவித்து வரும் சமாதானத்தை நிலைநாட்டுவதில் முப்படையினர் மற்றும் பொலிஸார் மாத்திரமன்றி சிவில் பாதுகாப்பு திணைக்களமும் பெரும் பங்களிப்பை வழங்கியதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்தார். மொரட்டுவ கட்டுபெத்தவில் உள்ள சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் தலைமையகத்திற்கு (நவம்பர் 10) விஜயம் செய்த பாதுகாப்பு செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் முன்னேற்றம் தொடர்பில் மீளாய்வு செய்த பாதுகாப்பு செயலாளர், அதன் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் … Read more

அரசியலமைப்புப் பேரவையை ஸ்தாபிப்பது தொடர்பான அடிப்படை விடயங்கள் கலந்துரையாடல் 

இருபத்தோராவது அரசியலமைப்புத் திருத்தத்தில் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்புப் பேரவையை ஸ்தாபிப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவின் கோரிக்கைக்கு அமைய இரு கூட்டங்கள் கடந்த 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் நடைபெற்றன. இக்கூட்டங்களில் பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன, எதிர்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச மற்றும் அரசியலமைப்புப் பேரவைக்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் கலந்துகொண்டனர். அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய அரசியலமைப்புப் … Read more

உணவுப் பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கையை உருவாக்க சம்பந்தப்பட்ட சகல நிறுவனங்களையும் உள்ளடக்கிய குழு

நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதுதிப்படுத்துவதற்கான தேசிய கொள்யை உருவாக்க சம்பந்தப்பட்ட சகல நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய உப குழுவொன்றை அமைப்பதற்கு  (09) கூடிய தேசிய கொள்கைகளைத் தயாரிப்பது தொடர்பான தேசிய பேரவையின் உபகுழுவில் தீர்மானிக்கப்பட்டது. குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்றுமுன்தினம் (09) கூடியபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. கமத்தொழில் மற்றும் கடற்றொழில் அமைச்சு, அந்த … Read more

அனைத்து அரச சேவைகளுக்கும் ஒன்றிணைந்த பொறிமுறையொன்றை அமைப்பதற்கு…..

அனைத்து அரச சேவைகளுக்கும் ஒன்றிணைந்த பொறிமுறையொன்றை அமைப்பதற்கு குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழுவின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக உப குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அரச சேவையில் பிரதான செயற்திறன் குறிகாட்டிகளை (KPIs) ஸ்தாபிப்பதற்கான கொள்கைகளை தயாரிப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு உப குழு அண்மையில் (08) கூடிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். நாட்டின் அரச பொறிமுறையுடன் தொடர்புடைய சேவைகள் ஒருங்கிணைந்ததாக … Read more