வெளியேறியது இந்தியா.. இறுதிபோட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி

2022 ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அடிலெய்டு ஓவலில் இன்று (10) நடந்த இரண்டாவது அரைஇறுதியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரின் அதிரடியால் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. 2022 ரி20 உலகக் கிண்ணத்தை வெல்லும் அணிகளுள் ஒன்றாக கருதப்பட்ட இந்திய அணியின் இந்த தோல்வி இந்திய ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த முறை … Read more

குரங்கு அம்மை நோய் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் ஆண்களுக்கு ஏற்படும்

குரங்கு அம்மை நோய் வேகமாக பரவுவது ஆண்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதினாலேயே என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று (09) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த சமூக விசேட வைத்தியர் திந்தன பெரேரா உலகில் குரங்கு அம்மை நோய் ஏற்பட்ட 20 ஆயிரம் பேர் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் .து உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று பெண்களுக்கு அமைவாக ஆண்களுக்கு இந்த குரங்கு அம்மை நோய் ஏற்படக் கூடிய தன்மை பெருமளவில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. … Read more

 Facebook நிறுவனத்தில் இருந்து 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் நீக்கம்

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனத்தில் இருந்து 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கப்பட்டுள்ளனர். பேஸ்புக்கின் தலைமை நிறுவனமான மெட்டா இத்தகவலை அறிவித்துள்ளது. வருமானம் வீழ்ச்சி அடைந்ததை தொடர்ந்து செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையாக 11 ஆயிரம் ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் தெரிவிக்கையில், ‘மெட்டா நிறுவன வரலாற்றில் நாங்கள் செய்த மிகவும் கடினமான சில மாற்றங்கள் தொடர்பாக தகவலை இன்று பகிர்கிறேன். எங்கள் குழுவின் வலிமையை சுமார் 13 சதவீதம் … Read more

இலங்கையில் அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்துபவர்களுக்கு ஆபத்து

இலங்கையில் வாசனைத் திரவியங்கள் உள்ளிட்ட அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  தோல் மருத்து நிபுணர் வைத்தியர் நயனி மதரசிங்க இது குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.  வாசனை திரவியங்களை இறக்குமதி செய்வதற்கான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமையினால் நச்சு அழகுசாதனப் பொருட்கள் மற்றும் வாசனைத் திரவியங்கள் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நச்சு அழகுசாதனப் பொருட்கள் உள்ளூர் சந்தையில் இந்த நச்சு அழகுசாதனப் பொருட்கள் உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக வைத்தியர் நயனி மதரசிங்க … Read more

வடக்கு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு அடுத்த வருடத்திற்குள் தீர்வு- பாராளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை.

வடக்கு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு அடுத்த வருடத்திற்குள் தீர்வு காணப்பட வேண்டுமென தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள்இதற்காக வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அடுத்த வாரம் முதல் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவிருப்பதாகவும் கூறினார். இதேவேளை, காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்ந்து விசாரணைகளை நிறைவுசெய்வதற்காக மேலதிக குழுக்களை நியமித்து விசாரணைகளை துரிதப்படுத்துமாறு நீதி அமைச்சருக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.   அடுத்த வருடம் கொண்டாடப்படும் 75 ஆவது சுதந்திர தினத்தின் போது இந்தப்பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று … Read more

இலங்கையில் வாகனம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்! விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலங்கையில் வாகனங்களின் விலை தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.  இதன்படி, சந்தையில் தற்போது வாகனங்களின் விலையில் கடுமையான வீழ்ச்சி பதிவாகி வரவதாக தெரிவிக்கப்படுகின்றது. மிக வேகமாக வாகனங்களின் விலை வீழ்ச்சியடைந்து வருவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.   குறையும் விலைகள் மேலும், ஆக்ஸியோ, பிரீமியோ, ரைஸ், சிஎச்ஆர், வெசல், வேகன் ஆர், பாஸோ, விட்ஸ், கிரேஸ் போன்ற பல வகை கார்களின் விலைகள் குறைந்து வருவதாக அந்த சங்கத்தின் செயலாளர் பிரசாத் குலதுங்க தெரிவித்துள்ளார். Source link

ஓமானுக்கு செல்லும் இலங்கைப் பணிப் பெண்கள் விற்பனை! பொலிசார் பகீர் தகவல்

வீட்டுப் பணிப் பெண்களாக ஓமானுக்குச் செல்லும் இலங்கைப் பெண்களை ஏலம் விடப்பட்டு, விற்கப்படும் விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் இருவர் தலைமையிலான குழுவினர் ஓமானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.  முதலாம் இணைப்பு இலங்கையிலிருந்து பணிப்பெண்ணாக ஓமானுக்கு செல்லும் பெண்களை விற்பனை செய்யும் கும்பல் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இலங்கைப் பெண்களை விற்பனை செய்வதாக கூறப்படும் ஆட்கடத்தல் குழு குறித்து இலங்கையின் குற்றப் … Read more

உலக வங்கித் தலைவர், ஜனாதிபதி இடையில் எகிப்தில் சந்திப்பு.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் உலக வங்கித் தலைவர் டேவிட் மல்பாஸ்ஸிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று எகிப்தின் ஷாம் அல் ஷேக் நகரில் நடைபெற்றது. காலநிலை மாற்றம் தொடர்பான கோப்-27 மாநாட்டுடன் இணைந்ததாக இந்தச் சந்திப்பு முன்னெடுக்கப்பட்டது. இலங்கையில் சவாலுக்குள்ளாகியுள்ள பேரண்டப் பொருளாதாரம் மற்றும் சமூக நிலைமை தொடர்பில் உலக வங்கித் தலைவர் டேவிட் மல்பாஸ் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கலந்துரையாடினர். இச்சந்திப்பின்போது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த வேண்டியதன் உடனடி தேவைக் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.   தற்போதைய … Read more

வட்டுவாகல் முகத்துவாரம் அகலப்படுத்தப்பட்டுள்ளது

வட்டுவாகல் முகத்துவாரம் அகலப்படுத்தப்பட்டுள்ளது தாழ் நிலங்கள் மற்றும் பெரும்போகத்திற்காக விதைக்கப்பட்டுள்ள  வயல்களும் வெள்ளத்தில் மூழ்குவதாக பொதுமக்களும், விவசாயிகளும் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க நந்திக்கடலுடன் சங்கமிக்கும் பகுதியான வட்டுவாகல் முகத்துவாரப் பகுதியே இவ்வாறு அகலப்படுத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக நந்திக்கடல் நீரேரியின் நீர்மட்டம் அதிகரித்து வட்டுவாகல் பாலத்திற்கு மேலாக நீர் வழிந்தோடும் நிலை ஏற்பட்டுள்ளது.. இதனை கருத்தில் கொண்டு கடந்த வியாழக்கிழமை மாவட்ட செயலகத்தில் , இடம்பெற்ற கலந்துரையாடல் மற்றும் கடந்த 8 ஆம் திகதி மாலை … Read more

கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு விரைவாக ஆதரவு வழங்கப்படும் – அமெரிக்க தூதுவர்

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கை கடன் பெறுவதற்கு தேவையான கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு விரைவாக ஆதரவு வழங்கப்படும் என அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே சான், கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்திடம் தெரிவித்துள்ளார். அமெரிக்க விவசாய திணக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் கால்நடை வள அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண கால்நடை துறையில் ஈடுபட்டவர்களுக்கு தேவையான நிவாரணம் வழங்கப்படும் என்று தூதுவர்  தெரிவித்தார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி.ஜூலி சுங் ((Ms.Julie Chung) ) நேற்று முன்தினம் … Read more