இரு சர்வதேச நாடுகளால் ஏமாற்றப் பட்ட கோட்டாபய

கோட்டாபய ராஜபக்ச நாட்டைவிட்டு வெளியேறிமைக்கு, வெளிநாட்டு கொள்கையும் காரணம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை தொடர்ந்தும் தெரிவிக்கையில், வெளிவிவகார கொள்கையை முறையாக கடைபிடிக்காமை காரணமாகவே,கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. அத்துடன், பொருளாதாரம் தொடர்பிலான முறையான ஆலோசனைகளை அவர் ஏற்றுக்கொள்ளாமையும் ஆட்சியின் வீழ்ச்சிக்கு பிரதான காரணமாகும். இதன் ஒட்டுமொத்த பிரதிபலனாகவே கோட்டாபய ராஜபக்சவிற்கு … Read more

காபன் வெளியேற்றத்தை குறைக்க இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு கொரிய ஜனாதிபதியின் விசேட தூதுவர் பாராட்டு

COP- 27 மாநாட்டில் பங்குபற்றவதற்காக எகிப்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும்    கொரிய ஜனாதிபதியின் காலநிலை மற்றும் சுற்றாடல் விவகாரங்களுக்கான விசேட தூதுவரும் அந்நாட்டுத் தூதுக் குழுவின் தலைவியுமான  நா குயூங் வொனுக்கும் (Na Kyung-Won) இடையிலான சந்திப்பு  07 அன்று  பிற்பகல் நடைபெற்றது.   காலநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்கொள்ள இலங்கை எடுத்துள்ள முயற்சிகளுக்குப் பாராட்டுத் தெரிவித்த  நா குயூங் வொன், நாட்டில் காபன் வெளியேற்ற வீதம் ஏற்கனவே குறைவாக இருக்கின்றபோதிலும் அதன் … Read more

கடவுச்சீட்டு விநியோகம் மீண்டும் ஆரம்பம்

குடியகல்வு குடிவரவு திணைக்களத்தின் கணனிக்கட்டமைப்பு வழமை நிலைமைக்கு திரும்பிய நிலையில் இன்று (09) காலை முதல் கடவுச்சீட்டு வழமைப் போன்று விநியோகிக்கப்படுவதாக குடியகல்வு குடிவரவு திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் பிரதி குடிவரவு கட்டுப்பாட்டாளர் திருமதி பியூமி பண்டார தெரிவித்துள்ளார். நேற்று (08) வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்காக திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கீடு செய்த விண்ணப்பதாரர்களுக்கு இன்று (09) கடவுச்சீட்டு விநியோகிக்கப்படும் என்று ஊடக பேச்சாளர் பிரதி குடிவரவு கட்டுப்பாட்டாளர் திருமதி பியூமி பண்டார மேலும் தெரிவித்தார்

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 26,000 பேருக்கு ஆசிரியர் நியமனம் – கல்வி அமைச்சர்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்ட அரசாங்க ஊழியர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த இன்று (9) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமனம் பெற்ற 26,000 பேரை எதிர்வரும் ஜனவரி மாதத்தில் ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குவதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டார். பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சன் எழுப்பிய வாய் மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கயில்  இவ்வாறு  அமைச்சர் குறிப்பிட்டார்.    இதற்காக 2018, 2019, 2020, 2021 காலப்பகுதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமனம் பெற்ற பட்டதாரிகள், … Read more

முதல் அரையிறுதி போட்டி நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் ….

ரி20 உலகக்கிண்ணத்தின் முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் சிட்னியில் இன்று (09) பலப்பரீட்சை நடத்துகின்றன. ரி20 உலகக்கிண்ணத்தின் சூப்பர்12 சுற்றின் முடிவில் குழு 1 இல் முதல் இரு இடங்களை பிடித்த நியூசிலாந்து (7 புள்ளி), இங்கிலாந்து (7 புள்ளி), குழு 2 இல் முதல் இரு இடங்களை பெற்ற இந்தியா (8 புள்ளி), பாகிஸ்தான் (6 புள்ளி) ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. குழு 1 இல் இடம் பெற்றிருந்த நடப்பு … Read more

நுளம்புகளின் பெருக்கம் நான்கு மடங்குகளாக அதிகரிப்பு – “டெங்கு” குறித்து விசேட எச்சரிக்கை

தற்போதைய மழையுடனான காலநிலை காரணமாக ,கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதம் நுளம்புகளின் பெருக்கம் நான்கு மடங்குகளாக அதிகரித்துள்ளது என்று சுகாதார சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம்  தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாட்டில் டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளதாக அதன் தேசிய அமைப்பாளர் டிஸ்னக திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் 42 வீதமானவர்கள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இ.போ.ச பஸ்களின் பயண செயற்பாடுகளை கண்காணிக்க புதிய செயலி (App)

இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் பயணத்தை ஆரம்பித்தது முதல் பயணம் முடியும் வரை உள்ள ஒவ்வொரு தரிப்படங்களுக்கும் இடையில் பயணிக்கும் நேரம் மற்றும் தூரத்தை கணிக்க டிஜிட்டல் வரைபடத்துடன் கூடிய செயலி (App) ஒன்றை பொறுத்துவதற்கு நில அளவைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த செயலிகள் (Apps) இலங்கை போக்குவரத்து சபையினால் இணைந்து தயாரிக்கப்படும் என்பதுடன், நில அளவைத் திணைக்களத்தினால் எண்ணக்கரு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் நில அளவையாளர் ஏ. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இந்த வரைபடத் திட்டம் கொழும்பு மாவட்டத்தில் … Read more

ஹூங்கமுவ பாடசாலை சம்பவம்:அதிபர் ,இரண்டு பொலிஸார் விளக்கமறியலில்

பண்டாரகம ஹூங்கமுவ கனிஷ்ட பாடசாலையின் மாணவர்கள் சிலரை தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில், பாடசாலையின் தலைமையாசிரியை மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நேற்று (08) கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் நவம்பர் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர், தரம் 05 மாணவர்கள் சிலர் ஆசிரியையின் பணப்பையை திருடியதாகக் கூறி மனிதாபிமானமற்ற முறையில் கொடூரமாக தாக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த … Read more

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியால் நாளை (10) முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், நாளை மறுநாள் (11) முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் நவம்பர் 11ஆம் திகதிக்குள் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகர்ந்து வரும் என்றும் … Read more

நேபாளத்தில் தொடர் நிலநடுக்கம் – 6 பேர் உயிரிழப்பு

நேபாள நாட்டின் மேற்கே டோடி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். நேபாள நாட்டில் இன்று (09) அதிகாலை 1.57 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. நேபாள டோட்டி மாவட்டத்தில் நிலநடுக்கத்தால் வீடு இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை … Read more