தனுஷ்க குணதிலக்க மீது வன்புணர்வு குற்றச்சாட்டு! ஆவணங்களில் முரண்பாடு – இன்று வழக்கு விசாரணை

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் வழக்கு இன்று (09.11.2022) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. ஆவணங்களில் முரண்பாடு ஆவணங்களில் உள்ள முரண்பாடு காரணமாக குறித்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. எனினும், வழக்கு விசாரணையை ஊடகங்களுக்கு வெளியிட வேண்டாம் என மனுதாரர் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை சிட்னி கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் சானக சேனாரத்ன தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவரை வன்புணர்விற்கு உட்படுத்தியமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க … Read more

பட்டதாரிகளுக்கு நியமனம்: பிரதமர் செயலாளரின் தலைமையில் குழு நியமனம்

பட்டதாரிகளை அரசாங்க சேவைக்கு ஆட்சேர்ப்புச செய்யும் போது ,ஏதேனும் காரணமாக நியமனம் கிடைக்கப் பெறாதவர்கள் தொடர்பாக, அமைச்சரவைக்கு முன்வைத்துள்ள விடயங்களுக்கு இணங்க அணுகுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் ,பிரதமர் தினேஷ் குணவர்த்தன நேற்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அவ்வாறே, முகாமைத்துவ சேவைப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு இணங்க அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அனுமதியைப் பெற்று அனுமதி பெறப்பட்டுள்ள 690 பேரின் ஆட்சேர்ப்புத் தொடர்பாக இக்குழு அவதானம் செலுத்த உள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார் … Read more

மழை நிலைமை மேலும் அதிகரிக்கும்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு ,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 நவம்பர்09ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 நவம்பர் 09ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டிற்குத் தென்கிழக்காக உருவாகிய கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை மேலும் விருத்தியடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனவே நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை நிலைமை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு, ஊவா,வடக்கு மற்றும் வடமத்தியமாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போதுமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய … Read more

கடற்றொழிலாளர்களுக்கு வளிமண்டலவியல் நிலையத்தின் அறிவுறுத்தல்

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 நவம்பர் 09ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டிற்குத் தென்கிழக்காக உருவாகிய கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை அடுத்த 48 மணித்தியாலங்களில் மேலும் விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனவே ஹம்பாந்தோட்டையிலிருந்து மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஊடாக காங்கேசந்துறை வரையான  கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் … Read more

அதிகரித்து வரும் வாயுவெளியேற்றத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

    • ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க COP 27 இல் வலியுறுத்தல்   அபிவிருத்தியடைந்த நாடுகளின் கட்டுப்பாடற்ற தொழில்மயமாதலே காலநிலை மாற்றத்திற்கான அடிப்படைக் காரணம் என்றும், இதன் விளைவுகளையே வறிய நாடுகள் அனுபவிக்க நேரிட்டுள்ளது என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். எகிப்தின் ஷாம் அல்-ஷேக் நகரில் நடைபெற்று வரும் காலநிலை மாற்றம் தொடர்பான COP 27 மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி, போதுமான நிதி இல்லாததால் வறிய நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அதிகரித்து வருவதாகவும் … Read more

நாட்டைக் கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் தொலைநோக்குப் பார்வை சர்வதேச அளவுகோல்களுக்கு அப்பாற்பட்டது –

 ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க. நாட்டைக் கட்டியெழுப்பும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தொலைநோக்குப் பார்வை சர்வதேச அளவுகோல்களுக்கு அப்பாற்பட்டது என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (08) முற்பகல் நடைபெற்ற அரசாங்க அதிகாரிகள் மற்றும் உலக வங்கி உறுப்பினர்களுக்கும் இடையிலான உலக வங்கியின் வரவு செலவுத் திட்ட உதவி மற்றும் அபிவிருத்தி கொள்கை தயாரிப்பு … Read more

இலங்கையின் பொருளாதாரத்திற்கு, இறால் வளர்ப்பு கனிசமான பங்களிப்பு –  கடற்றொழில் அமைச்சர்

இலங்கையின் பொருளாதாரத்திற்கு  இறால் வளர்ப்பு கனகசமான பங்களிப்பு செய்வதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். உயிரியல் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் போன்றவற்றின்  ஊடாக நிலைபேறான நீர்வேளாண்மை என்னும் தொனிப் பொருளில் கொழும்பில் இன்று (08) நடைபெற்ற நிகழ்வின் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கொறோனா பரவல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் இறால் வளர்ப்பின் மூலம் கடந்த வருடம் சுமார் 43 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாகக் கிடைத்துள்ளது.. இலங்கையில் நீர்வேளாண்மை உற்பத்திகளை வலுப்படுத்துவதற்கான பொருளாதார மற்றும் … Read more

பொது அமைதியை முன்னெடுப்பது தொடர்பாக ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு சபாநாயகரினால் அறிவிப்பு

நாட்டில் பொது அமைதியை பேணுவதற்கு அனைத்து ஆயுதப்படை உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பிறப்பிக்கப்பட்ட கட்டளையை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (08) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். பாராளுமன்ற அமர்வு இன்று (08)  காலை 9.30 மணியளவில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமானது. இதனையடுத்து சபாநாயகர் இந்த உத்தரவை சபையில் அறிவித்தார். பொது அமைதியை பேணுவதற்காக அனைத்து ஆயுதப்படை உறுப்பினர்களையும் அழைத்து ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.